செய்தியாளர்களால் , செய்தியாளர்களுக்காக செய்திகள் வழங்குவோர் உங்களில் ஒருவன்!!! https://www.facebook.com/AnbudanNews
Don't wanna be here? Send us removal request.
Text
ஜெகஜ்ஜால ஜே.கே. பாகம் 2

மீனாட்சி கல்விக் குழுமத்தின் சார்பில் வெளியாகும் தின இதழ் நாளிதழின் சர்க்குலேஷன் பிரிவு தலைமைப் பொதுமேலாளர் ஜே.கே. என்ற ஜெயக்குமாரின் ஆட்டங்களின் முதல் பகுதியை கடந்த சில தினங்களுக்கு முன் பார்த்தோம். பெண் பித்தரான அவரின் பணம் பார்க்கும் திறமை கண்டு அதிசயிக்காதவர்களே இருக்க முடியாது. நீங்கள் எப்படி கணக்கு கேட்டாலும் கரகாட்டக்காரன் வாழைப்பழக் கதைதான் பதிலாகக் கிடைக்கும். அவரின் திறமையை உலகறிய இதுபோல் ஒரு விரிவான சான்று கொடுக்க முடியாது. தினஇதழ் செய்தித்தாள் மாதம் ஒன்றுக்கு ஏஜெண்டு���ளுக்கு 8 லட்சத்து 16 ஆயிரத்து 950 பேப்பர்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால் அவற்றில் ரிட்டன் எனப்படும் விற்பனையாகாத பேப்பர் என்று மாதம் ஒன்றுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 877 வருவதாக கணக்கு கூறுகிறார் ஜே.கே. அதாவது நாள் ஒன்றுக்கு 26 ஆயிரத்து 351 அச்சாகி, 12 ஆயிரத்து 996 ரிட்டர்ன் வருகிறதாம். இதில் மீதமுள்ள 3 ஆயிரத்து 649 பேப்பர்கள் வெளியில் முக்கிய இடங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. 10 பேப்பர்கள் சேர்ந்தால் ஒரு கிலோ எடை வந்துவிடும். ஜே.கே.வின் கணக்குப்படி இலவசமாக வழங்கப்படும் 3,649 பேப்பரும் பழைய இரும்புக் கடைக்கு எடைக்குப் போடப்படுகின்றன. (அதாவது அலுவலகத்தில் கட்டிய கட்டுக்களைக் கூட பிரிக்காமல்..) நாள் ஒன்றுக்கு 314 கிலோ புத்தம் புதிய தினஇதழ் பத்திரிக்கை பழைய இரும்புக் கடைக்குச் செல்கிறது. அதற்கான தொகையான 3 ஆயிரத்து 140 ஜே.கே.வின் பாக்கெட்டுக்குச் செல்கிறது. இப்படி கணக்குப் போட்டால் மாதம் ஒன்றுக்கு 94 ஆயிரத்து 200 ரூபாய் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் அவர். இதுபோக எந்த நாளிதழிலும் இல்லாத புதுமாதிரியாக 30 ஆயிரம் பேப்பருக்கு 7 ஆயிரம் போஸ்டர்கள் அச்சிடப்படுகின்றன. 4 போஸ்டர்கள் சேர்ந்து ஒரு முழு பேப்பரின் எடை இருக்கும். 40 போஸ்டர்கள் சேர்ந்தால் ஒரு கிலோ எடை வந்து விடும். ஆனால் 7 ஆயிரம் போஸ்டர்களில் கடைகளுக்கு அனுப்பப்படுவது வெறும் ஆயிரம் போஸ்டர்கள்தான். மீதமுள்ள 6 ஆயிரம் போஸ்டர்கள் ஜே.கே.வின் ரகசிய குடோனுக்குள் பதுக்கி வைக்கப்படுகிறது. 6 ஆயிரம் போஸ்டர்களின் எடை கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ அதாவது ஒன்றரை டன். இதன் மூலம் ஜே.கே.வின் வருமானம் (போஸ்டர் மூலமாக மட்டும்) நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய். விற்பனையாகாத பேப்பர்களை ஏஜென்டுகள் பழைய எடைக்கு விற்றுவிட்டதாக தினஇதழ் நிறுவனர் ராதாகிருஷ்ணனின் காதில் ஜே.கே. தினசரி பூ சுற்றுகிறார் என்பது அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தெரிந்ததே... மற்ற ஊர்களில் உள்ள ஏஜென்டுகள் பேப்பரை பழைய கடைகளில் போட்டு பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் ஜே.கே. அவர் காட்டியுள்ள கணக்குப்படி சென்னை தவிர மற்ற ஊர்களில் பழைய பேப்பரின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 3க்கு மட்டுமே வாங்கப்படுகிறது என்று கூறி நிர்வாகத்தை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் அவருக்கு மாதம் ஒன்றுக்கு வருவாய் 3 லட்சம் வரை. ஜே.கே.வின் அடுத்த கைங்கர்யம் போக்குவரத்துக்குச் செல்லும் வாகனங்களில் தொடங்குகிறது. பேப்பர் சப்ளைக்காக 10 வேன்களுக்காக மாதம் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய் செலவாகிறது என்று கணக்கு எழுதி வைத்துள்ளார் ஜே.கே. ஆனால் ஓடுவதே 7 வேன்கள்தான். மீதமுள்ள வேன்களுக்கு டீசல் செலவு, டிரைவர் சம்பளம், பேட்டா இத்யாதி விஷயங்கள் அனைத்தும் ஜே.கே. என்ற ஒற்றை மனிதனுக்குத் தெரிந்த மூடுமந்திரம். இது தவிர ரெகுலராக வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்தால் வாடகை குறைவாக கொடுப்பது வழக்கம். ஆனால் கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை கொடுத்து அதிலும் கமிஷன் பார்த்துக் கொள்கிறார் ஜெகஜ்ஜால ஜே.கே. இதுவே மாதம் ஒன்றுக்கு 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக வருவதாக கூறுகின்றனர் விஷயமறிந்த வட்டாரங்கள். கடந்த தீபாவளிக்கு போனஸ் போடவில்லை என்று தினஇதழ் ஊழியர்கள் அனைவரும் காத்திருக்க...தனக்குப் பிரியமான சர்க்குலேஷன் பிரிவிற்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் (!) போனஸ் வழங்கியிருக்கிறார் ஜே.கே. (இதைத்தான் கிராமப்புறங்களில் ஊரான் வீட்டு நெய்யே... எங்க அண்ணன் பொண்டாட்டி கையே... என்று கூறுவார்கள்) இதற்கு அடுத்ததாக பணவெறி பிடித்த ஜே.கே.வின் பார்வை பட்டுள்ள இடம் பார்சல் கட்டும் பிரிவு. இதைப் பற்றி நாம் கடந்த முறையே பார்த்தோம். தினஇதழின் ஸ்பெஷல் என்ற பெயரில் வெளிவரும் சப்ளிமெண்ட் பேப்பர்களை பார்சல் கட்டுவதற்காக 20 பேரும், ரெகுலர் பேப்பரை பார்சல் கட்டுவதற்காக 20 பேரும் ஆக மொத்தம் 40 பேர் பார்சல் கட்டுவதாகக் கூறி அதனை காண்ட்ராக்ட் விட்டுள்ளார் ஜே.கே. ஆனால் பார்சல் கட்டும் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் மொத்தம் 7 பேர்தான். அப்படியானால் மீதமுள்ள 33 பேரின் கணக்கு... அவர்களுக்கு கொடுக்கப்படும் பணம்... புரிகிறதா இவை அனைத்தும் ஜே.கே.வின் பாக்கெட்டுக்குத்தான் போ���ிறது. பார்சல் கட்டும் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 40 பேருக்கு தினசரி 12 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஆனால் வேலை பார்ப்பதோ வெறும் ஏழு பேர்தான். மீதமுள்ள 33 பேரின் சம்பளமான 9 ஆயிரத்து 900 ரூபாய் ஜே.கே.விற்கு (இது நாள் ஒன்றுக்கு) மாதம் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய். இதில் மாதம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை நிறுவனர் ராதாகிருஷ்ணனின் வலது கையாக உள்ள முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்குச் செல்கிறது. அதனால் ஜே.கே. என்ன தவறு செய்தாலும், எவ்வளவு பணம் கொள்ளையடித்தாலும் அவரைக் காப்பாற்றும் பொறுப்பை அந்த முன்னாள் அரசு அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். (தனக்கு கீழ் பணியாற்றும் பெண்ணிடம் தகாத முறையில் ஜே.கே. நடந்து கொண்டபோதும் அதைப் பற்றிய விபரம் எதுவும் வெளியே தெரியாமல் அமுக்கி, ஜே.கே.வைக் காப்பாற்றியவரும் இந்த அதிகாரிதான்) இதனால் இன்றுவரை தின இதழின் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் ஜே.கே. ஜே.கே.வின் அன்றாடப்பணிகளில் ஒன்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு அலுவலகத்தில் ஒரு துறைக்கு ஒன்று அதிகபட்சம் 2 அல்லது 3 ரப்பர் ஸ்டாம்புகள் இருக்கலாம். ஆனால் ஜே.கே.வின் டேபிளில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளின் பெயரில் ரப்பர் ஸ்டாம்புகள் இருக்கும். மாலை 5 மணியாகிவிட்டால் அந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் தங்கள் இஷ்டம் போல் ரப்பர் ஸ்டாம்பை எடுத்து தபால் அலுவலகத்தில் வேலை செய்வதுபோல் குத்திக் செய்வார்கள் என்பது மற்ற துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதுபற்றி வாய் திறந்தால் உத்தமன் ஜே.கே.வின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமே, வேலை பறிபோய் விடுமே என்ற அச்சத்தில் அனைவரும் தெரிந்தே மவுனமாக இருக்கின்றனர். இப்படி மாதம் ஒன்றுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கும் ஜே.கே.வை தினஇதழ் நிர்வாகம் தெரிந்தே இன்னும் வேலையில் வைத்திருப்பது மர்மமான ஒன்றாகவே உள்ளது. (சர்குலேஷன் டிபார்ட்மென்டிலிருந்து மனக்குமுறலை கொட்டியவரின் செய்தி , இது...)
0 notes
Text
ஆறடி நிலமே சொந்தமடா... ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

நட்புடன் அப்சரா எனும் நிகழ்ச்சி தந்தி டிவியில மிகப்பிரபலம் , அவரை நம் அன்புடன் மீடியா நியூஸ் டீம் மாலை அண்ணா சாலையில் ஆடி காரில் சென்றதை கண்டது , காரின் எண் PY 01 BK 7799.
0 notes
Text
24 ம் புலிகேசி புஸ்வாணனின் அட்டூழியம்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் 24 ம் புலிகேசி புஸ்வாணனின் அட்டூழியம் - காமெடி பஜாராகிப்போன அரச டிவி!

அதிகார பலமிக்க அந்த டிவியின் தலைமை வாய் திறந்தால் தேசிய அளவில் தலைப்பு செய்தி. கரன் தாப்பர், பிரணாய் ராய், ஜெனிபர் அருள், சுரேஷ் சம்பத், சுனில் பிரபு என ஊடக ஜாம்பவான்கள் எல்லோரையும் திணற வைக்கும் ஆங்கில அறிவு படைத்தவர் மாண்புமிகு மம்மா, அவங்க டிவியில வேல பாக்கற 'இந்தியாவின் சிறந்த செய்தி ஆசிரியர்' புஸ்வாணன் (அவரே அடிக்கடி சொல்லிக்கறதாம்) ஏக்டிவிட்டிகளை பார்த்து வாய் அடைச்சு போய் நிக்கறாங்களாம் டிவில வேல பாக்கற விவரம் தெரிஞ்சவங்க. சூரிய டிவில போணியே ஆகாத "நிஜ"மான நிகழ்ச்சிதான் தன்னோட அல்டாப்பு சாதனைன்னு சொல்லிக்கிற புஸ்வாணனின் லேட்டஸ்ட் அட்டைக்கத்தி புதிய டிவி ஆரம்பிக்கறதா ஒரு குரூப் முடிவு செஞ்சவுடனே மொதல்ல ஸ்ரீனிவாசனை (புதிய தலைமுறை) கூப்பிட்டாங்க அவரு முடியாதுன்னு சொன்னவுடனே என்னை கூப்பிட்டாங்க. நான் போலாம்னு இருக்கேன்....ம்ம்மா டிவி எல்லாம் ஒரு டிவியா கேவலமா இருக்கு. ஷூட்டிங் போற ஒரு வண்டி சரியில்ல சீட்டு எல்லாம் கிழிச்சு கிடக்கு ஒரே அழுக்கா இருக்கு..இவங்களுக்கு ஒண்ணுமே தெரியல...டெலிகிராப் டிவி இப்படிதான் கெடந்துச்சு நாந்தான் பெருக்கி சுத்தம் பண்ணி வெளிநாட்டுக்கெல்லாம் செய்தி எடுக்க அனுப்பிச்சேன் ம்மா டிவி வேஸ்ட் அப்படின்னு சொல்றதோட நிக்காம அடிக்கடி தான் ஒரு செய்தி ஆசிரியர் அப்படிங்கறதை மறந்துட்டு தன்னோட ஆட்களை பத்தியே நிர்வாகம் செஞ்சுட்டு இருக்குற ...ம்பத் கிட்ட போட்டு கொடுக்கிறாராம். நாலு வரி ஸ்க்ரிப்ட் எழுத தெரியாத புஸ்வாணன் மம்மாவுக்கும் அதிகமா லக்சுரியா இருக்காராம். யூரின் கூட ஹில்டன் ஹோட்டல்ல தான் போவாரம்னா பார்த்துக்குங்களேன். மம்மா கூட இப்பிடி கிடையாது. கிராமத்துக்கு பிரச்சாரம் போனா கட்சிகாரங்க தோட்ட வீட்டுல கூட தங்குவாங்க என்று சொல்லி தலையில் அடிச்சு கொள்கின்றனர் அந்த டிவி பத்தி தெரிஞ்சவங்க. இதைவிட கொடும சமீபமா கட்சி செய்தி எதுவும் போடா கூடாது அப்படிங்கராராம். இவ்வளவு அல்டாப்பு காட்டற அட்டகடத்தியின் "பேஸ்மென்ட்" மம்ம்மா அறிக்கை வந்தா மட்டும் கிடு கிடுன்னு ஆடுதாம். அதுவும் இங்கிலீசுல வந்தா டபுள் மடங்கு ஆடுதாம் பேஸ்மென்ட். ஆனாலும் நாய் சேகர் வடிவேலு மாதிரி பேஸ்சை தெம்பா வச்சுக்கினு உதார் உடறாராம். மம்மா அறிக்கை வந்தா... இதுக்கு முன்னாடி இருந்த ஆசிரியர்கள் எல்லாம் அடிச்சு பிடிச்சு உடனே எதை டிக்கர்ல போடணும் எதை எப்படி செய்தி ஆக்கணும்னு சொல்லுவாங்களாம். ஆனா இவரு அறிக்கையை உதவி ஆசிரியர்கிட்ட கொடுத்துட்டு வேர்க்கடலையும்...சூடா காபியும் குடிச்சுட்டு ரூம்ல போய் தனியா உட்காந்துகறாராம். ஏன்னா எது செய்தின்னு தெரிஞ்சாதானே. இதுல கொடும என்னன்னா.... இவருக்கு ஒன்னரை லகரம் சம்பளம். கார்டன்ல இருந்து செக்யுரிட்டிகிட்ட இருந்து போன் வந்தாகூட உக்காந்து இருக்கற சீட்ல இருந்த தடால் படால்னு எழுந்து நின்னு பேசுற இவரு...யாராவது இத பார்த்தா....மம்மா பேசினாங்கன்னு தன்னோட அட்டகத்திய எடுத்து சுருள் சுருளா எம்ஜிஆர் கணக்கா சுத்தி வீசி சும்மா தக தக தகன்னு சீன போடறாராம் புஸ்வாணன். மம்மா வுக்கு வந்த சோதனைன்னு சொல்லி பொலம்புது ஆதரவு மீடியா வட்டம் !
0 notes
Text
ப்ளீஸ் ...இந்த ஸ்டேடசை படிக்காதீங்க...
விஜய் டிவி நீயா நானா ? அது சரி...சம்பளம் உன் அப்பனா கொடுப்பான் ? ப்ளீஸ் ...இந்த ஸ்டேடசை படிக்காதீங்க.

நீயா நானா ஷோ தெரியாதவன் இருக்க மாட்டான். கோட்டு கோபிநாத்தின் நியாயாமாரே விவாதத்தில் கொடுக்காத குரல் கிடையாது. ஆனா அந்த ஷோ தயாரிக்கற கம்பெனில வேல செஞ்ச, செய்யற ஒருத்தனுக்கும் சம்பளம் சரியா கொடுக்கறது கிடையாது. இம்மாம்பெரிய ஷோ இதுல வேல செஞ்சா எதிர்காலமே நல்லா இருக்கும் அப்படின்னு நம்பி வந்த பல பசங்க இன்னைக்கு சோத்துக்குகூட வழியில்லாம திண்டாடறது கேவலமா இருக்கறதா பலமா பேச்சு அடிபடுது. இந்த ஷோவை தயாரிக்கறது ஆண்டனி அப்படிங்கறவோரோட மெர்குரி நெட்வொர்க். இந்த ஆண்டனி இதுக்கு முன்னாடி குற்றம் நடந்தது என்ன அப்படிங்கற விஜய் டிவி நிகழ்ச்சியை தயாரிச்ச ராம்ஜி அப்படிங்கரவர்கிட்ட வேல பார்த்த பையன். மாசம் 3 ஆயிரம் ரூபாய் ராம்ஜி கொடுத்தாகூட போதும் அப்படின்னு வேலை செஞ்ச நேரத்துல, ராம்ஜியோட டெக்னிக்... நாய் மாதிரி வேல செய்யரவனுக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவ சேலரி கொடுக்கறது. இதுல நொந்து நூலானவங்க ஏராளம். அந்த ராம்ஜியால டைமுக்கு குற்றம் நடந்தது என்ன அப்படிங்கற கேசட்டை விஜய் டிவி ஆபிஸ்ல கொண்டுபோய் கொடுக்க கூட முடியாம இருக்கும். அப்போ டிவியில திட்டுவாங்கன்னு சொல்லி தனக்கு பதிலா ஆண்டனியை அனுப்புவாராம். அப்படி அனுபுனதுல டிவி யோட தயாரிப்பு தலைமையோட நெருக்கம் ஏற்படுத்தின ஆண்டனி...ராம்ஜி சம்பளம் ஒழுங்கா கொடுக்கறது இல்லைன்னு சொல்லி அந்த நிறுவனத்துல இருந்து வெளில வந்து மெர்குரி நெட்வொர்க்னு ஆரம்பிச்சு நீயா நானா நிகழ்ச்சியை தயாரிக்கற அளவுக்கு வளர்ந்து இதனால கோட்டு கோபிநாத்துக்கு பில்ட் அப் கொடுத்து கோடிகளுக்கு அதிபதியாக்கியயதோடு தானும் கோடிகளுக்கு அதிபதி ஆயிட்டாரு. ஆனாலும் எதுக்காக ராம்ஜியை குறை சொன்னாரோ அதே தப்பை இவரும் செஞ்சுட்டு வர்றாராம். தன்னோட வளர்ச்சிக்கு கூடவே இருக்குற நம்பிக்கையான நபர்களுக்கு கூட மூணு மாச சம்பள பாக்கி வச்சிருக்கிற ஆண்டனிகிட்ட சம்பளம் கேட்டா ஒரு கோடி கொடுத்து திருநெல்வேலி பக்கத்துல ஒரு லேண்ட் வாங்கினேன் அதுல தன்னை ஏமாத்திட்டாங்கன்னு சொல்லி சமாளிக்கராராம். ஊருக்கெல்லாம் புத்திமதி சொல்ற கோட்டு கோபியும், ஆண்டனியும் அவங்க நிகழ்ச்சிக்காக சோறு தண்ணி இல்லாம வேல செஞ்ச ஆட்களை கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லுங்க இந்த நாற பசங்களோட பின்னணி என்னன்னு புட்டு புட்டு வைக்கிறோம்னு கொந்தளிப்புல இருக்காங்க பசங்க. கிராமத்து சூழல்ல பொறந்து வளர்ந்தவங்கதான் ஆண்டனியும், கோட்டு கோபியும்....அதுக்காக கிராமத்துல இருந்து வர்றவங்க வயித்துல அடிச்சு நீங்க என்ன பெரிய ஆணியா உருவாக்கி... என்னங்கடா பிரயோசனம் அப்படிங்கறாங்க விவரம் தெரிஞ்சவங்க.
0 notes
Text
தேர்தல் சமயத்தில் டெபாசிட் இழந்த இரண்டு சேனல்கள்!!!

சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நிகழ்ச்சிகளில் முதல் 5 இடத்தை பிடித்துள்ள சேனல்கள் விபரம்... புதிய தலைமுறை - GRP 4.31 கலைஞர் செய்திகள் - GRP 0.98 கேப்டன் நியூஸ் - GRP 0.53 சன் நியூஸ் - GRP 0.46 ஜெயா ப்ளஸ் - GRP 0.39 டெபாசிட் இழந்த கடைசி இரண்டு சேனல்கள் விபரம்... தந்தி - 0.12 சத்தியம் டிவி - 0.01 ஜிடிவி(GTV) தேர்தலிலிருந்து தகுதி நீக்கம் செய்யபட்டிருந்தது, இங்கு குறிப்பிடதக்கது!
0 notes
Text
புதிய தலைமுறையில் பழைய தலைமுறை!
புதிய தலைமுறையில் அதிரடியாக சில மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தில்லியில் துவங்கபடவிருந்த ஆங்கில செய்தி சேனல் தற்போதைக்கு நிறுத்திவைகைப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்தவரை இங்குள்ள சேனலுக்கு தலைமை ஏற்கவுள்ளார் என தெரிவிக்கபட்டாலும் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரி��வில்லை. தற்போதுள்ள தலைமை அச்சுக்கு மாற்றப்படுகிறார். இதற்கிடையில் பிரபல செய்தி வாசிப்பாளருக்கும், செய்தி ஆசிரியருக்கும் உச்சகட்ட பனிப்போர் தொடர்ந்து நடந்துகொண்டுவருகிறது. யாரை முதலில் கூடாரத்தை விட்டு காலிசெயவது என இரண்டு தரப்பும் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டவுன் சேனலில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே நுழைய ஆரம்பித்துவிட்டார்களாம், புதிய தலைமுறை பழைய தலைமுறையுடன் களையிழக்க தொடங்கியிருக்கிறது.
0 notes
Text
நெல்லை சூரியன் எஃப்.எம் ரேடியோ பொது மேலாளர் சங்கரசுப்பு திடீர் ராஜினாமா!
0 notes
Text
தேர்தலுக்கு தடையுத்தரவு!
Madras High Court stays the order of City Civil Court to conduct elections to Chennai Press Club.
0 notes
Text
ஸ்ட்ரிங்கர்ஸ் புலம்பல்!
ஸ்ட்ரிங்கர்களுக்கு அளிக்கபட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் `கட்` செய்துள்ளது புதிய தலைமுறை எல்லோரையும் நிரந்தர பணியாளராக மாற்றப்போகிறார்களா என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
0 notes
Text
தந்தி டிவி நிருபர் = நடிகையின் பி,ஆர்,ஓ!

தந்தி டிவி நிருபர் சமீபத்தில் ஆணையரக அலுவலகத்தில் புகார் கொடுத்த டிராவல்ஸ் நடிகையின் பி.ஆராகவே செயல்பட்டுள்ளார். நடிகைக்கு பிரஸ்மீட் ஏற்பாடு செய்வது, எந்தெந்த நிருபர்கள் அந்த பைசூலுக்கு ஆதரவான நிருபர்கள் என எடுத்துகொடுத்தது என முழு உதவியையும் செய்துள்ளார். இதற்கு `கை` மேல் பலன் உண்டு என்று தெரிந்தே செய்துள்ளார் என அவரின் நட்பு வட்டாரங்கள் குறைபட்டுக்கொண்டனர்.
0 notes
Text
என்.டி.டி.வி குழுமத்திற்கு வாழ்த்துக்கள்!

25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி முடித்திருக்கும் என்.டி.டி.வி குழுமத்திற்கு அன்புடன் மீடியா செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்! (படம்: பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய், பெண் செய்தியாளர் உமாவுடன்)
0 notes
Text
புதிய தலைமுறையில் நாளை முதல் நேரத்துக்கு வரவேண்டும்...

நாளை முதல் அவரவருக்கு ஒதுக்கபட்ட பணி நேரத்தில் அலுவலகத்துக்கு கட்டாயமாக வரவேண்டும் என பு.த நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அது ராமா இருந்தாலும் சரி, இராவணனா இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் ஷிப்ட் நேரத்துக்கு வரவேண்டும என புது உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எல்லாம் சரி...போகும் நேரம் எப்போது என கேள்வி கேட்டால் அவரவர் பணிமுடிந்ததும்தான் வெளியே செல்லவேண்டுமாம். இது நடைமுறையில் செயல்படுமா, செயலிழந்து போகுமா எனப்போகப்போக தெரியும்.
0 notes
Text
ராயபேட்டா சேனல் உரிமையாளருக்கு 6 மாதத்தில் கன்னிகளால் கண்டம்!!!
அன்புடன் மீடியா செய்திகள் சோதிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக நினைக்கவேண்டாம். உரிமையாளருக்காக உரிமையோடு சிலபேர் ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள், அதில் ஒரு அதிர்ச்சி செய்தியாக சொன்னதைத்தான் தலைப்பு செய்தியாக போட்டிருக்கிறோம். அவருக்காக ஒரு பாடலையும் டெடிகேட் செய்வது நமது கடமை... அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா... http://youtu.be/JuvqKSvIvX8
0 notes
Text
மெகா டிவிக்கு புதிய எடிட்டர் தேவை!

மெகா டிவியில் எடிட்டராக இருந்தவர் ராஜராஜன். இருந்தவர் என்றால் இதுவரை எடிட்டராக இருந்தவரை அவருடைய வேறுபணிகாரணமாக அதனையே தொடரசொல்லி நிர்வாகம் கூறிவிட்டது. என்னதான் நடந்தது என விசாரித்தபோது ...”ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்” கான்செப்டில் சமீபத்தில் சன் டிவியிலிருந்து மூத்த செய்தியாளரை பணிக்கு சேர்த்துள்ளார். அவர் ஒருநாள் விடுமுறை கேட்டுள்ளார், எடிட்டரின் பிஸியான வேலையில் லீவெல்லாம் கிடையாது என சொல்லப்போக , சமயம் பார்த்து எடிட்டரை பற்றி அடிக்கடி நிர்வாகத்திடம் போட்டுகொடுத்துள்ளார். மாதத்தில் ஒருநாள் சம்பளம் மட்டும் வாங்க அலுவலகத்துக்கு வருவது அம்பலமானது. முன்னொரு காலத்தில் சன் டிவியில் உள்ளதுபோலவே ரகசியக்கேமராக்களை மெகா டிவியிலும் நிறுவி சாதனை புரிந்தவருக்கு, அதுவே அவருக்கு எதிராகவும் வேலை செ���்ய ஆரம்பித்தது. உரிமையாளர்கள் ரகசியகேமராக்கள் மூலம் கையடக்க மொபைல் ஃபோன்களிலேயே இவரின் நடவடிக்கையை ஒரு மாதமாக தொடர்ந்து கண்காணித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானார்கள். தற்போது மெகா டிவிக்கு புதிதாக ஒரு எடிட்டர் தேவை. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். இது ஒரு வேலைவாய்ப்பு செய்தி!
0 notes
Text
ஜெகஜ்ஜால ஜே.கே.

சென்னையை மையமாகக் கொண்டு கடந்த 7 மாதங்களாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் தினஇதழ் நாளிதழின் கதைதான் இது. ஜே.கே. எனப்படும் ஜெயக்குமார் என்பவர்தான் இதன் சரித்திரமாக இருந்தார். இப்போது அவர்தான் தினஇதழைப் பிடித்த தரித்திரமாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த ஜெயக்குமாரின் பின்புல வரலாறு காறித்துப்பும் அளவிற்கு மிகவும் கேவலமானது. முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சர்க்குலேசன் பிரிவில் வேலைக்குச் சேர்ந்த ஜெயக்குமார் மெதுவாக தனது சுயரூபத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தார். லட்சம் லட்சமாக பணத்தை கையாடல் செய்ததும் விழித்துக் கொண்ட அந்த பத்திரிக்கை நிர்வாகம் அங்கிருந்து விரட்டியடித்தது. இதையடுத்து பலரின் கை, கால்களைப் பிடித்து தினகரனின் சர்க்குலேஷனின் தலைமைப் பொதுமேலாளராக பொறுப்பேற்றார். சிரங்கு வந்த கை சும்மா இருக்காது என்ற பழமொழிக்கேற்ப அங்கும் தனது பராக்கிரமத்தை காட்ட, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். நாளது தேதி வரை தினகரன் நிறு��னத்திலிருந்து அவருக்கு வரவேண்டிய பணப்பலன்கள் அனைத்தையும் அந்த நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அங்கும் தனது பருப்பு வேகாது என்று நினைத்த ஜே.கே., ஏ.என். ராதாகிருஷ்ணன் கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கிய தினஇதழ் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தார். விகேஷ் இங்கு சி.இ.ஒ மற்றும் சீப் எடிட்டராக பணியில் சேர்ந்தார்.அவருடன் நட்பை ஏற்படுத்திகொண்டார்.ஆனால் எடிட்டோரியலில் நடக்கும் விஷயங்கள் தனக்கு உடனுக்குடன் தெரியவேண்டுமே... அதற்காக பெருமாள் என்ற அல்லக்கையுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். சீனியர் சப் எடிட்டரான பெருமாள் தன்னை டெபுடி எடிட்டர் என்று தனக்குத்தானே பீற்றிக் கொள்பவர். நாட்கள் செல்லச் செல்ல ஜே.கே. மற்றொரு குரூரமுகம் இங்கேயும் தெரியவந்தது. ஏற்கனவே காம வெறியனான ஜே.கே. தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவமானப்படுத்தியும் உள்ளார். இதனை அவர் சி.இ.ஓ.வான விகேஷின் கவனத்துக்கு கொண்டுவர அதனை தட்டிக் கேட்டிருக்கிறார் விகேஷ். மேலும் சர்க்குலேஷன் பிரிவில் நடக்கும் எந்த விஷயத்திற்கும் கணக்கு வழக்கு வைத்துக் கொள்வது ஜே.கே.விற்கு பழக்கமில்லாத ஒன்று. பேப்பர் ஓடி முடித்ததும் அதனை பார்சல் கட்டுவதற்கு 50 பேர் என்று கணக்கு காட்டி பணம் பறிக்கும் வேலை பார்த்து வந்தார். ஜே.கே. உண்மையில் அங்கு பார்சல் கட்டுவது வெறும் 10 பேர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல் பேப்பர் பார்சல்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை தருவதும் ஜே.கே.தான். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இரவு 10.20க்கு ஒருமுறையும், 10.30க்கு மறுமுறையும் வாகனங்களை அனுப்புவார். அது ஏன் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். . இதுகுறித்து விகேஷ் சர்க்குலேஷன் பிரிவின் கணக்குகளைக் கேட்க... அவருக்கு எதிராக காய் நகர்த்துகிறார் ஜே.கே. இறுதியில் வெற்றி ஜே.கே.விற்கே. கணக்கு கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார் விகேஷ். இதையடுத்து அடுத்த எடிட்டர் தான்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பெருமாளின் ஆசையில் மண் விழுகிறது. அதன் பின் மதுரை தினகரனில் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்துப்பாண்டியன் என்பவர் எடிட்டராக நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் அவருடன் இணக்கமாக இருந்த ஜே.கே. நாளடைவில் முத்துப்பாண்டியனை மிரட்டத் தொடஙகுகிறார். ஆனால் ஜே.கே.வின் உருட்டல், மிரட்டல்களுக்கு பணியாத முத்துப்பாண்டியன் ஜே.கே.வை எதிர்க்கத் தொடங்குகிறார். இதற்கிடையே நாம் முன்னமே கூறியபடி, தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஒருவரிடம் தனது காம சேட்டைகளை தொடங்குகிறார் ஜே.கே., இரட்டை அர்த்த வசனங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவற்றை அரங்கேற்றுகிறார். இதற்கு அந்தப் பெண் ஒப்புக் கொள்ளாததால் அவரை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார் ஜே.கே. அதில் உச்சகட்டமாக பாண்டிச்சேரியில் ரிசார்ட் ஒன்று பதிவு செய்து விடுவதாகவும், அங்கு வரும்படி பெண் உதவியாளரிடம் கேட்கிறார். (ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம்.... அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேட்குதாம்..) அதற்குமேலும் பொறுக்கமுடியாமல் எடிட்டரிடமும், நிர்வாகத்திடமும் முறையிடுகிறார் அந்தப் பெண். ஆனால் பெயருக்கு விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், தான் அந்தப் பெண்ணுக்கு தந்தை போல் என்று கூறி விசாரணையை திசை திருப்பிவிடுகிறார் ஜே.கே. குடும்பத்துக்காக வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் அந்தப் பெண் இன்று வரை கண்ணீருடன் வேலை செய்து வருகிறார். இதன் முக்கியகட்டமாக ஜே.கே. மற்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி எடிட்டர் முத்துப்பாண்டிக்கு உத்தரவிடுகிறார் தினஇதழின் நிர்வாக இயக்குநர் கோகுல். இதையடுத்து ஜே.கே.வை தனது கேபினுக்கு வரச்சொல்லி விசாரணை நடத்துகிறார் முத்துப்பாண்டி... தன்னை அழைத்து விசாரிப்பதா என்று மனதுக்குள் கருவிய காமக் கொடூரன் ஜே.கே. அடுத்தகட்டமாக முத்துப்பாண்டியையும், வேறு சிலரையும் வேலையிலிருந்து நிறுத்துவதற்கு காய் நகர்த்தல்களைத் தொடங்குகிறார். இதற்கு முன்னதாக தினஇதழ் விளம்பரப் பிரிவில் தலைமைப் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீதர் என்பவர் தனக்கு அடிபணிந்து செல்லாத காரணத்தினால் அவரை பணிநீக்கம் செய்து காட்டுகிறார். அதைத் தொடர்ந்து தனக்கு வேண்டியவர்களுக்கு இலவசமாக விளம்பரங்கள் போடுவது, விளம்பர வருவாயை தானே வைத்துக் கொள்வது என ஏகபோகமாக கோல்மால் வேலை பார்த்து வந்த ஜே.கே.விற்கு அடுத்த சிக்கல் தொடங்குகிறது. நிர்வாகம் சார்பில் விளம்பரப் பிரிவில் வருமானத்தை கணக்குக் கேட்க அதன் ஊழியர்கள் ஜே.கே.விடம் கணக்கு கேட்கின்றனர். என்ன... மறுபடியும் என்னிடமே கணக்கு கேட்க உங்களுக்கு அத்தனை தைரியமா..? என்று கண்கள் சிவக்க பேசுகின்றார் கா(ம)சு வெறியன் ஜே.கே. அங்கும் தனது ராஜதந்திரத்தை நிலைநாட்ட... விளம்பரப் பிரிவின் ஊழியர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் ஜே.கே. இந்தச் சம்பவங்களுக்கு முன் பிளாண்ட் (பேப்பர் ஓட்டும் மிஷின்) மேனேஜராக இருந்த ராஜ்குமார், கணேஷ் (சி.டி.பி), ஸ்டோர் பிரிவு பொறுப்பாளர் சார்லஸ் ஆகியோரும் தனக்கு அடிபணியாத காரணத்தினாலும், தனது ஊழலுக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலும் அவர்களையும் வேலையிலிருந்து நீக்கி தனது புஜபல பராக்கிரமத்தைக் தொட்ந்து காட்டிவருகிறார் கா(ம)சு ஜே.கே.
0 notes
Text
Sub-Editor may be removed
SUN TV sub-editor may be removed for telecasting false news about Singapore riots. Source - Singapore Tamil Murasu
0 notes
Text
பாலிமர் டிவியில் புதிதாக பெண் செய்தி வாசிப்பாளர்கள்!
பாலிமர் டிவியில் மூன்று பெண் செய்தி வாசிப்பாளர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். உரிமையாளரின் நேரடி பார்வையில் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். ஆண்களுக்கு வாய்ப்பு கிடையாதா என ஏங்குவோர் சிலர் வயிற்றெரிச்சலில் அன்புடன் மீடியா செய்திகளுக்கு புகார்பெட்டியில் இச்செய்தியை தெரிவித்துள்ளனர்.
0 notes