Tumgik
cinemasda94 · 1 year
Text
பிள்ளை நிலா (1985) பேய் படம்
Tumblr media
நாயகன் ஒரு கல்லூரியில் படிக்கிறார். நாயகியும் அங்கு படிக்கிறார். பிரின்சிபால் கேள்வி கேட்டார் என்பதற்காக, அந்த கல்லூரியையே நாயகியின் அண்ணன் வாங்கிவிடுகிறார். பிறகு நாயகனுக்கும், நாயகிக்கும் கொஞ்சம் முட்டல் வருகிறது. பிறகு நாயகி நாயகனை காதலிக்க துவங்கிவிடுகிறார். இது நாயகனுக்கு தெரியவில்லை. அவ்வளவு தத்தி. பெரிய பணக்காரி என்பதால், நாயகன் படித்து முடித்ததும், அண்ணன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையும் வாங்கி கொடுத்துவிடுகிறார். நாயகி வெளிநாடு போயிருக்கும் பொழுது, நாயகனுக்கு திருமணமாகிவிடுகிறது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். முடியாது என்றதும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த ஆவி நாயகனின் பெண் குழந்தைக்குள் சென்றுவிடுகிறது. மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு, நாயகனுடன் “மேலுலகத்தில்” ஒன்றாய் வாழ்வதே அதன் இலக்காக இருக்கிறது. நாயகன் ஆவியுடன் போராடி, தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள். இயக்குநர் மனோபாலாவிற்கு முதல்படம். முதன்முறையாக இளையராஜாவின் படத்தின் பின்னணி இசையை தனியாக ட்ராக் வெளியிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்காக ஆர்வம் வந்து பார்த்தேன். அந்த காலக்கட்டத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. முதல் பாதி படு திராபை. அந்த கல்லூரி காட்சிகள். அவர்களுக்குள் காதல் வரும் காட்சிகள். நாயகி தற்கொலை வரைக்கும் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு செயற்கை. அவ்வளவு மொக்கை. கதை, திரைக்கதை, வசனம் கலைமணி. இடைவேளைக்கு பிறகு பேய் வந்த பிறகு தான் படத்தையே காப்பாற்றியிருக்கிறது. பேயைத் துரத்துவதையும் சிம்பிளாக முடித்துவிட்டார்கள். கிறிஸ்துவ முறைப்படி புதைத்திருக்கிறார்கள். அதை தோண்டி எரித்தால் போதும் என சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்து முறைப்படி, எரிப்பது தான் வழக்கம். அந்த ஆவிகள் எல்லாம் நிறைய படங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றனவே! பேய் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது. அவ்வளவு தான். பாடல்களும், இசையும் படத்திற்கு பெரிய பலம். இளையராஜா படத்தை காப்பாற்றியிருக்கிறார். நாயகனாக மோகன், வெறித்தனமாக காதலிக்கும் காதலியாக ராதிகா, தங்கைக்காக பிறப்பெடுத்த ராதிகாவின் அண்ணனாக ஜெய்சங்கர், நாயகியின் துணைவியாராக நளினி, பேய் பிடித்து ஆட்டும் மகளாக பேபி ஷாலினி, ஜப்பான் மந்திரவாதியாக சின்ன வேடத்தில் சத்யராஜ் என பலரும் நடித்திருக்கிறார்கள். இராதிகா இடைவேளை வரை படத்தில் வருகிறார். இடைவேளைக்கு பிறகு அவ்வப்பொழுது பேயாகவும் வருகிறார். கெளரவ வேடத்தில் ராதிகா என எழுத்துப்போடுகிறார்கள். ஆச்சர்யமாக இருந்தது. யூடியூப்பில் இருக்கிறது. பாருங்கள். இடைவேளை வரை பார்க்கவே வேண்டாம். அதையும் மீறி மன உறுதி கொண்டவர்கள் பாருங்கள். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
பழம்பெரும் நடிகை S.N.லட்சுமி அவர்கள்
Tumblr media
தமிழ்சினிமாவில் நெஞ்சில் நிறைந்த துணைக்கதாபாத்திரங்களின் வரிசையில்! விருதுநகர் மாவட்டம் பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். 200-க்கும் மேற்பட்ட நாடகங்கள் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் 13-வது குழந்தையாக பிறந்தவர்.வறுமையின் சூழல் 11 வயதில் வீட்டை வெளியேறும் நிலை ஏற்பட்டு நாடகத்துறைக்குள் நுழைந்துள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நாடகக்குழுவில் இணைந்து நடிப்புப் பயிற்சியைப் பெற்றுள்ளார். 1955-ஆம் ஆண்டு வெளியான நல்லதங்காள் படத்தில் நடித்திருந்தாலும், 1959-ஆம் ஆண்டு வெளியான தாமரைக்குளம் திரைப்படமே இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது.அதன்பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எம்ஜிஆர்,சிவாஜிக்கு அம்மாவாக சில படங்களில் நடித்துள்ளார். இவர் சர்வர்சுந்தரம் திரைப்படத்தில் நாகேஷூக்கு அம்மாவாக நடித்ததை என்னால் மறக்கவே முடியாது.சிறுவயதில் இந்தப் படத்தைப் பார்த்த பொழுது, 'நாகேஷூக்கு உண்மையான அம்மாதான் இவரோ', என நினைக்கும் அளவிற்கு நடிப்பு ஆளுமை இவரிடம் இருந்தது. இவருடைய மிகப்பெரிய பலமே குரல் வளம்தான்.அதில்,தென்தமிழகத்தின் வட்டார மொழி வாடை அழகாக வீசும். மைக்கேல் மதன காமராஜனில் திருட்டுப் பாட்டி,தேவர்மகனில் மாயத்தேவருக்கு(நாசர்)அம்மா,விருமாண்டியில்,விருமாண்டிக்கு பாட்டி என கொடுத்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்திருப்பார்,S.N.லட்சுமி அவர்கள். இவர் ஏற்று கதாபாத்திரங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் 'மகாநதி',திரைப்படத்தில் கிருஷ்ணசாமிக்கு(கமல்)மாமியாராக நடித்திருப்பாரே,அந்தக் கதாபாத்திரம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.காரணம்,திரையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் உள்ள அழகிய உறவை 'மகாநதி', படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் சொன்னதாக என் நினைவில் இல்லை. மாமியார் என்றாலே மருமகனைக் கண்டவுடன் கதவு ஓரமாக ஒளிந்து கொள்வது,கீழே குனிந்து கொண்டே பேசுவது என இப்படித்தான் கிராமங்களில் பார்த்திருக்கோம்.படங்களிலும் அப்படித்தான். இதைப் பற்றி எழுதும் பொழுது,என் னுடைய நினைவும் நிழலாக கண் முன்னே ஆடுது.அப்போ எனக்கு 25 வயசு இருக்கும்.எனக்கு அத்தை முறை உள்ள ஒருவர் என்னைக் கண்டவுடனேயே அதிகமா வெட்கப்படுவார்.நடந்து வரும் பொழுது,பக்கத்தில் புளியமரம் ஏதாவது இருந்தால் அதன் பின்னால் போய் ஒளிந்து கொள்வார்இதையெல்லாம் பாக்கும்பொழுது,அப்போ எனக்கு ரொம்பவும் வேடிக்கையா இருக்கும். அதை இப்போ நினைச்சுப்பாத்தாலும் சிரிப்புதான் வருது.ஆனால்,கிருஷ்ணசாமிக்கு கிடைத்த மாமியார் அப்படியல்ல.சரிக்கு சமமா மருமகன் எதிரில் உட்கார்ந்து ஆலோசனை வழங்குவார்.டான்ஸ் ஆடுவார். இரண்டாவது குழந்தையின் பிரசவத்தின் போது மனைவியை பறிகொடுத்தவர் கிருஷ்ணசாமி.பெண்குழந்தை மூத்தவள். மனைவி இறந்ததும், 12 வருடங்களாக பிள்ளைகளோடு தனித்து வாழ்ந்து வருபவர்தான்.கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமையும் பொழுது மனம் பிசகத்தானே செய்யும். அப்படி ஒருநாள்,தன் மருமகன் ஒரு குணக்கேடான பெண்ணிடம் மாட்டத் தெரிந்ததை அறிந்து,தனது மருமகனுக்கு பெண்தேட ஆரம்பிப்பார் மாமியார். இரவில் நேரம் கழித்து வரும் மருமகனிடம் மாமியார் பேசும் அந்த உரையாடல் உணர்வுகளின் குவியல் என்றுதான் சொல்ல வேண்டும். "நான் ஒங்களுக்கு ஒரு அம்மாவா நினைச்சிருந்தா, என் பொண்ணு செத்த அடுத்த வருஷமே உங்களுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சிருப்பேன்....இவ்வளவு நாளா மாமியாராத்தானே இருந்திருக்கேன்...இப்போ ஒண்ணும் மோசம் போகலே...நாளையிலேருந்தே ஒங்களுக்கு ஒரு நல்ல பொண்ணை பாக்க ஆரம்பிச்சுறேன்",என்பார். அயோக்கியர்களால் மருமகன் சிறையில் அடைக்கப்பட, பிள்ளைகளை பாதுகாக்கும் முழுப்பொறுப்பும் வயதான மாமியாருக்கு ஏற்படுது. சிறையில், தனது மகளை தாவணிக்கோலத்தில் பார்த்ததும் கிருஷ்ணசாமி, 'என்னயிது',என்று கேட்க,'ஒண்ணுமில்லே மாப்ளே,பொண்ணு வயசுக்கு வந்துட்டா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது,அந்தப் பொண்ணுதான்(சுகன்யா)பக்கத்துலருந்து எல்லாம் செஞ்சது,இதைப் பத்தியெல்லாம் நீங்க எதுவும் கவலைப்படாதீங்க மாப்ளே...இன்னும் ரெண்டு வருஷத்துல வெளியே வந்துறலாம்னு புவனா சொல்லுச்சு",என்று பேசும்காட்சியை பார்க்கும்பொழுது கண்கலங்கத்தான் வேண்டும்.அக் காட்சி வெகு சிறப்பாக அமைந்ததற்கு S.N.லட்சுமி அவர்களுடைய நடிப்பின் பங்களிப்பும் மிக முக்கியம் என நினைக்கிறேன். ''மாப்பிள்ளை,'மாப்பிள்ளை',என்றே கனிவாக அழைப்பார்.மருமகனும் அத்தை என்று அழைக்காமல் அம்மாவென்றே அழைப்பார். 'தேவர் மகன்',திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் மகன் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடப்பதைப் பார்த்து, 'நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே'என கதறி அழுவார்.அந்தக் கதறலில் ஒரு தாயின் பரிதவிப்பை நம்மால் முழுமையாக உணரமுடியும்.அக்காட்சியின் சிறப்புக்கு அழுத்தமான மனதை உலுக்கும் அந்த ஒரு வரி வசனமும் முக்கியக் காரணம் எனலாம். திறமைசாலிகளுக்கு Re-entry கொடுப்பதில் கமல் அவர்கள் மிகச் சிறந்த வல்லவர். அதில்,நாகேஷ்,காகா ராதாகிருஷ்ணன்,கள்ளபார்ட் நடராஜன்,S.N.லட்சுமி போன்றோர் மிக முக்கியமானவர்கள். இப்படி சிறப்புமிகு S.N.லட்சுமி அவர்களுக்கு கலைமாமணி விருதைத் தவிர வேறு எந்த விருதும் சென்று அடையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தமிழ்சினிமாவின் திறமைமிகு பல நடிகர் நடிகைகளுக்கு வாழும் பொழுதே சரியான அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும். நம் முகநூலில் உள்ள பாவல் அண்ணனும்,விஜயன் அண்ணனும் S.N.லட்சுமி அம்மாளின் மருமகன்கள்(உடன்பிறந்த அண்ணன் மகன்கள்) Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
Tumblr media
ஒரு கைதியின் டைரி. கமல்ஹாசன் அவர்கள் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்த படம், படத்திற்கு கதை, வசனம் k. பாக்கியராஜ் அவர்கள். படிப்பறிவு இல்லாமல் அரசியல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து தன் அரசியல் தலைவனே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவன் டேவிட், அவன் வாழ்க்கையில் வருகிறாள் ரோசி, டேவிட்டுக்கு கல்வி கற்றுக் கொடுத்து புது மனுஷனாக மாற்றுகிறாள் ரோசி,இருவருக்கும் குழந்தை பிறக்கிறது ,தன் தலைவன் தான் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று ரோசி மற்றும் குழந்தையோடு செல்கிறான் டேவிட். தலைவனின் கண் தொண்டனின் மனைவி மீது படுகிறது சூழ்ச்சி செய்து ரயில் மறியல் போராட்டத்தில் டேவிட் சிறைக்கு செல்கிறான் ,தன் கணவரை மீட்க தலைவனை நோக்கி ஓடுகிறாள் ரோசி, கிழிந்த நாராக வீட்டுக்கு வருகிறாள். டேவிட் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ந்து போகிறான் ரோசி தற்கொலை செய்து கொள்கிறாள் அவள் கையில் இருக்கும் கடிதத்தில் இதற்கு காரணம் அரசியல் தலைவர் என்று எழுதிவிட்டு இறந்துவிடுகிறாள். நியாயம் கேட்டு டேவிட் செல்கிறான் அங்கு அவன் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு செல்கிறான் போகும் முன் தன் குழந்தையை சாராய வியாபாரி வேலப்பனிடம் தன் குழந்தையை ரவுடியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். 22 வருடம் கழித்து டேவிட் விடுதலை பெற்று வருகிறான் தன் மகனுடன் சேர்ந்து தன் மனைவியின் சாவுக்கு காரணமாக இருந்த மூன்று நபர்களை வேட்டையாட பழிக்கு பழி தீர்க்க வெளியே வருகிறான். வேலப்பனிடம் தன் மகன் எங்கே என்று கேட்கிறார், அவன் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி என்று சொல்கிறான் வேலப்பன், டேவிட் அதிர்ந்து போகிறான் அனைவரும் கைவிட்ட நிலையில் டேவிட் தனி ஆளாக பழிதீர்க்க நினைக்கிறார், மறுபக்கம் மகன் இந்த மிருகங்களை காப்பாற்ற நினைக்கிறார் இந்த வேட்டையில் யார் வென்றார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அப்பா டேவிட் கதாபாத்திரம் அட்டகாசம் தன் மகனை வேலப்பன் வீட்டு வாசலில் இருந்து எட்டி எட்டி பார்க்கும் போது அதற்கு இளையராஜா அவர்கள் ஒரு தாலாட்டு இசையை வாசித்து இருப்பார் பாருங்கள் கலங்காமல் இருக்க முடியாது. தன் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு தந்தையின் தவிப்பை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் கமல்ஹாசன் அவர்கள். இளையராஜா அவர்களின் இசை படத்திற்கு பெரிய பலம் அப்பா, மகன் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை போட்டு அதன் நடுவே அந்த தாலாட்டு இசையை ஒலிக்க செய்து Bgm தெரிக்கவிட்டு இருப்பார் இளையராஜா அவர்கள். முதல் முறை கிளைமாக்ஸ் காட்சியை பார்பவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். மகன் கமல் துப்பாக்கியை எடுத்து தைரியமாக எந்த தயக்கமும் இல்லாமல் சுடும் போது அப்பா கமல், My son என்று மைக்கில் அழைக்கும் போது மகன் கமல் செய்வது அறியாமல் கலங்கி போய் அப்படியே நின்று விடுவார் கமல்ஹாசன் அவர்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காட்சியில் நடித்து இருக்கவே முடியாது. படத்தின் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும் அந்த பூ நாகம் கதை முடிந்தவுடன் டாக்டரிடம் ,கேட்கிற மூடுல நீ இல்லைனாலும், சொல்ற மூடுல நா இருக்கேனே போன்ற வசனங்கள் நச். பாரதிராஜா அவர்கள் பல கிராமிய படங்களை இயக்கி வெற்றி பெற்ற நிலையில் அவரின் இயக்கத்தில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக மிக பெரிய வெற்றி பெற்றது, பிறகு கமல்ஹாசன் & பாரதிராஜா அவர்கள் மீண்டும் இணைந்து மிக பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் அளித்தனர் 1985 ல் இரண்டு படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்தது ஒன்று, ஒரு கைதியின் டைரி மற்றொன்று காலத்தால் அழியாத முதல் மரியாதை. ஒரு கைதியின் டைரி இந்தி பதிப்பை பாக்கியராஜ் அவர்கள் அமிதாப்பச்சன் அவர்களை வைத்து ஆக்ரிரஸ்தா என்று எடுத்தார் இதில் என்ன ஒரு துணிச்சல் என்றால் தமிழில் மிகவும் பரபரப்பாக பேசபட்ட கிளைமாக்ஸை தூக்கி விட்டு இவர் வேறு ஒரு கிளைமாக்ஸ் வைத்து வெற்றி பெற்றார். இந்தியில் அப்பா, மகன் பேசிக்கொள்ளும் உரையாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கும். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
Single ஷங்கரும் Smartphone சிம்ரனும்
Tumblr media
சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலிப்பதற்காக கைபேசியில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்ணை விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் செலவில் மாதேஷ் கண்டுபிடிக்கிறார். இந்த கண்டுபிடிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று மாதேஷுக்கு உறுதுணையாக இருப்பவர் ஹம்சா குப்தா. கைபேசியில் பேசுவதற்கும் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் தேவைகளை தீர்த்து வைப்பதற்காகவும் பல மாதங்களாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து சிம்ரன் என்னும் பெண்ணை கைபேசியில் உருவாக்குகிறார் மாதேஷ். மாதேஷ் வடிவமைத்த சிம்ரன் கைபேசியை வெளியில் கொண்டு செல்லும் போது இருவர் அந்த கைபேசியை திருடி சென்று அதனை ஒரு கடையில் விற்று விடுகின்றனர். இதனிடையே பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு உணவை டெலிவரி செய்யும் பணியை செய்து வருபவர் சங்கர். அவ்வப்போது ஏற்படும் பணத்தேவைகளுக்கு தன்னுடைய நண்பர் வெங்கியிடம் கேட்டு உதவி பெற்று கொள்வார் சங்கர். ஒரு நாள் சங்கரின் கைபேசி உடைந்து போய் விட புது கைபேசி வாங்க நண்பன் வெங்கியிடம் பணத்தை பெற்று கொண்டு கடைக்கு செல்கிறார் சங்கர். மிக குறைந்த விலையில் உள்ள கைபேசியை சங்கர் கேட்க கடைக்காரர் தன்னிடம் இருக்கும் சிம்ரன் கைபேசியை சங்கருக்கு விற்று விடுகிறார். ஒரு புறம் தொலைந்து போன சிம்ரன் கைபேசியை மாதேஷும் ஹம்சா குப்தாவும் தன்னுடைய ஆட்கள் மூலம் தேடுகிறார்கள். மறுபுறம் சங்கரின் அனைத்து தேவைகளையும் சிம்ரன் நிறைவேற்றி வருகிறார். சங்கர் காதலிக்கும் பெண்ணான துளசியை தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காதலிக்க வைக்கிறார் சிம்ரன். இதனால் துளசியிடம் அதிக நெருக்கத்துடன் பழக ஆரம்பிக்கிறார் சங்கர். துளசியை காதலிக்க ஆரம்பித்த பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை குறைத்து கொள்கிறார் சங்கர். சங்கரை ஒருதலையாக காதலிக்கும் சிம்ரன் தனது காதலை சங்கரிடம் சொல்லும் போது உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் உன்னுடன் வாழ முடியாது என சொல்லி சிம்ரனின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் சிம்ரன் சங்கருக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆளாகும் சங்கர் அதிலிருந்து மீண்டாரா தொலைந்த சிம்ரன் கைபேசியை கண்டுபிடித்தார்களா சங்கரின் காதல் என்ன ஆனது இறுதியில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை. சங்கராக சிவா யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். டெலிவரி பணியில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்சினையை நகைச்சுவையாக பேசி ரசிக்க வைக்கிறார். சிம்ரனாக மேகா ஆகாஷ் யாரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நிறைவாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்க்கிறார். துளசியாக வரும் அஞ்சு குரியன் அவரது பணியை நிறைவாக செய்துள்ளார். சிவாவின் தந்தையாக வரும் மனோ கோலம் இல்லடா என்னோட காதலுக்கு நான் போடற பாலம் சர்ச் ஃபாதர் இல்லடா உன்னோட ஃபாதர் என்று வசனங்களை பேசி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். மா கா பா ஆனந்த், ஷாரா,பகவதி பெருமாள்,திவ்யா கணேஷ் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ளனர். லாஜிக்கை எதிர்பார்க்காதீர்கள் என்று ஆரம்பித்திலேயே காண்பித்து விடுவதால் லாஜிக் இல்லாமல் படம் பயணிக்கிறது. அதுவே அதிகமாகும் போது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. உணர்ச்சிய கொடுத்தியே உடம்பை கொடுத்திருக்கக்கூடாதா என்ன விலை கொடுத்தாலும் காதல வாங்க முடியாது போன்ற வசனங்கள் ரஞிக்க வைக்கின்றன. திரைக்கதை விறுவிறுப்டன் இருப்பதாலும் நகைச்சுவை காட்சிகளை பல இடங்களில் ரசிக்கும்படி அமைத்து படத்தை ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ். ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் லாஜிக் மீறல்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு முறை பார்க்கும் அளவிற்கு உள்ள இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Amazon prime video வில் காணலாம். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
ஜல்லிக்கட்டு - மலையாளம் - 2019
லிஜோ ஜோஸ் பெல்லிசெர்ரியின் மற்றுமொரு அற்புதமான படைப்பு இது. படம் பார்க்கத் துவங்கியபின் முதல் ஆச்சரியம்.. இந்த மனுஷனுக்கு மட்டும் எப்படிஇப்படிக் கதைக்களனை யோசிக்கத் தோன்றுகிறது? அந்த கிராமத்தில் மாடு அறுப்பவன் வர்க்கி (செம்பன் வினோத் ஜோஸ்). அவனின் கையாட்கள் குட்டச்சனும் (சாபுமோன் அப்துஸமது) மற்றும் அந்தோனி (அந்தோனி வர்கீஸ்). அன்று வெட்டப்படவேண்டிய எருமை தெறித்துக் கொண்டு ஓட, அதைத் தேடி ஓடும் கிராம மக்களின் செயல்கள்தான் கதை. அந்தோனிக்கும், குட்டச்சனுக்கும் உள்ள முன்பகை, மாட்டைப் பிடிப்பதில் மீண்டும் போட்டியாகிறது. மாடு அறுக்கும் அன்று ஊரே கூடி வாங்குகிறது. வீட்டுக்குப் பால்பாக்கெட் போடுவது போல, கறி அனுப்பப்படுகிறது. கறிக்கு இணையாக, “பொங்கல் தாண்டி செஞ்சு வைக்கச் சொன்னேன்.. தெனம் இட்லி செஞ்சி வக்கிர..?” என்று அடிக்கும் அளவுக்கு மக்கள் மாட்டுக்கறிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அதற்கேற்ற உடுக்கு ஒலி பின்னணியில். ஆச்சரியமாக, குழப்பமில்லாத கதை விறுவிறுவென நகர்கிறது. ஒரு கிராமத்தில் காணப்படும் அனைத்து அழும்புகளையும் படம் முழுதும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள் இயக்குநரும், வசனகர்த்தாவும். கிராமத்தார்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் நக்கலும், நையாண்டியும் எங்கும் உதிர்கின்றன. கிராமங்களில் எந்த ஒரு நிகழ்வையும் திருவிழாவாக்கி விடுவார்கள் என்ற நிஜம் படமெங்கும் உலா வருகிறது. சிறுவெடிகளைத் தூக்கிப் போட்டுச் செய்யும் அலப்பறைகள், ‘கோழி’ பிடிக்கும் குரியச்சன் (ஜாபர் இடுக்கி) சிக்க, சந்தடி சாக்கில் அவர்கள் ஆட்டையைப் போடும் கோழி, (குரியச்சனுக்கு அவர்கள் அணிவிக்கும் சேவல் கொண்டை சிரிப்பு வெடி!), கிட்டத்தட்ட ‘குலதெய்வம்’ ராஜகோபால் சாயலில் இருக்கும் ஜாபர் இடுக்கிக்கு, அவரைப் போலவே மேனரிசம் இப்படத்தில் எனக்குத் தெர��கிறது. உங்களுக்கு எப்படியோ? ஒரு குழு கிணற்றில் சாரம் கட்டுவதில் மும்முரமாக இருக்க, மற்றவர்கள் செய்யும் சாராய அரட்டைகள் படத்தின் ரசனையைக் கூட்டுகின்றன. முக்கியமாக, பழசை நினைத்துப் பேசும் அந்தப் பெருசின், “ரெண்டு கால்ல ஓடித் திரிஞ்சாலும் மிருகம்ப்பா மிருகம்..”. படத்தில் சிங்கிள் ஷாட்கள் படத்தில் சிங்கிள் ஷாட்கள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஜாபர் இடுக்கி வீட்டில் நடந்து கொண்டே மனைவி, மகள் மற்றும் முருகேசனுடன் பேசும் காட்சி, மாடு மிதித்து சிதைந்த டீக்கடை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டே டீக்கடைக்காரன் பேசும் பேச்சு என சொல்லிக் கொண்டே போகலாம். மழையில் மாட்டை கிணற்றுக்கு வெளியே இறக்க முயல்கையில் அது மீண்டும் தப்பித்து ஓட, தூக்கி வீசப்பட்ட ஒருவன் விழுவதைக் கிணற்றுக்கு உள்ளிருந்து காட்டும் காட்சி வித்தியாசமானது. அதன் தொடர்ச்சியாக, மனித, மாட்டுக்கால் தடங்கள், நீர் சொட்டும் ராட்டினம், அணைந்து போன நெருப்பு, விட்டுப் போன செருப்பு, அனாதையாகத் தொங்கும் டயர் கயிறு, மிதிபட்டவன் முகம் என்று மாண்டேஜ் ஷாட்டுகள் மேகம் தோய்ந்த நிலவில் முடிகிறது. வேட்டைக்குத் தயாராகும் குட்டச்சனின் பந்தா ரசிக்க வைக்கிறது. வாளியின் கைப்பிடியை வெட்டித் துப்பாக்கிக் குண்டுகளாக்குவது, “கொழந்தைக்கு தாடி மீசைல்லாம் மொளச்சிடுச்சுபோல..” என்று பழைய பகையைச் சீண்டுவது, ஜீப்பின் பானெட்டில் உட்கார்ந்து வந்து, துணி தோய்ப்பவளைக் குசலம் விசாரிப்பது, குட்டச்சனின் பந்தா நடைக்கேற்ற அல்லக்கைகளின் பாடல் எனப்பல. வாளியை அடைத்து உடைக்கும் காட்சியில் அது நிஜமாகவே ஒருவன் மேல் தெறித்து விழுகிறது. (எத்தனை டேக் வாங்கியதோ?) அந்தோனி மீதான வர்க்கியின் தங்கையின் தடம் மாறும் காதல், வடக்கயிறு எடுத்துச் செல்லும் காட்சியில் நளினமாக இழைகிறது. ‘மோசமான வார்த்தைகள் சுற்றுச்சூழலை மாசு படுத்தும்’ என்னும் தோட்டக்காரன், தன் தோட்டம் அழிவதைப் பார்த்துச் சொல்லும் ‘ம்யூட்’டும், ‘எருமை ஒன்னு சுத்திட்டு இருக்கு.. பாத்துப்போ..’ என்று சொல்லி பஸ்ஸில் ஏறிச் செல்வதும், புகார் விண்ணப்பம் எழுதுபவரிடம் ‘மகிஷம்’ என்று எழுதுவதற்கு ஆட்சேபம் சொல்லிப் பின் பின்வாங்கிவதும், படத்தின் ஓட்டத்துக்கு அழகு சேர்க்கின்றன. படத்தில் அந்தோனி கதாநாயகனாகப் பரிமளித்தாலும், உண்மைக் கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளரும் (கிரீஷ் கங்காதரன்), ஒலிக் கலவையாளருமே (கண்ணன் கணபதி). ஒளிப்பதிவாளர் கிரீஷுக்கு ஒரு ஷொட்டு. பல காட்சிகள் மிரட்டுகின்றன. ‘எப்படிய்யா, இப்படி ஒரு ஆங்கிளை யோசிச்ச..’ என்று நேரில் பார்த்தால் கேட்க வேண்டும். ஒளிவட்டம் பாய்ச்சும் டார்ச் லைட்டுகளின் சீற்றத்தில், ‘லோ ஆங்கிளில்’ கிணற்றின் கீழிருந்து எருமை பார்க்கும் ஒரு பிரேம், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல அழகு! மலைச்சரிவில் நூற்றுக்கணக்கான டார்ச்லைட்டுகளின் பாய்ச்சல்கள், வட்டமான தீப்பந்தங்கள் மூன்று பிரிவாகப் பிரிவது, தொங்கு பாலத்தின் ட்ரோன் ஷாட், மாட்டை விரட்டும் சேஸில் கேமரா ஜெர்க் இல்லாமல் இயங்குவது.. சபாஷ்! அந்தோனி இரவில் மீன் பிடிக்க, கூடையை உயர்த்திப் பார்க்க அதன் வழியே நிலா! இல்லை இல்லை… கவிதை! சந்தன மரம் வெட்டியதற்காகக் குட்டச்சனைப் பிடிக்கையில் குடிசைக்குள்ளிருந்து, வெளியே வெயில் மினுங்கும் டாப் ஆங்கிள் ஷாட் க்ளாஸ்! தொடக்கத்தின், கடிகார வினாடி சப்தத்திற்கேற்ற, சிங்கிள் பிரேம்களும் (எடிட்டிங் - தீபுஜோசப்), நீலம் தோய்ந்த சிவந்த வானத்தின் நிதான ‘ஸூம் அவ்ட்’ ஷாட்டும் அற்புதம். கடைசி பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சி ‘மாஸ்’ விஷுவல் ட்ரீட். கண்ணன் கணபதி ஒலிக்கலவையால் விருந்து வைத்திருக்கிறார், குறிப்பாக இருட்டில் டார்ச்லைட், தீப்பந்தம் சகிதம் தேடும் காட்சிகள். அதென்னவோ, லிஜோவின் படங்களில் எப்போதும் காணப்படும் வித்தியாசமான பின்னணி இசை (பிரஷாந்த் பிள்ளை) இப்படத்திலும் வலு சேர்க்கிறது. பெரும்பாலான நேரம் பின்னணி இசை இல்லாமல் பாந்தமாக இருக்கிறது. யோசிக்கவே முடியாத ஒரு ஒற்றை வரிக்கதையைப் பிரமாதமாகக் கொண்டு செல்லும் ஹரீஷ் – ஜெயகுமார் ஜோடியின் திரைக்கதைக்கு ஒரு பெரிய bouquet. செம்பன் வினோத் ஜோஸைப் பற்றிச் சொல்லாமல் போனால் எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. மனுஷன் அசுரனாயிற்றே! மாட்டைத் துரத்திச் சென்று பிடிக்க முடியாமல் எரிந்து விழுவதிலிருந்து, அனைவரும் கிணற்றை எட்டிப் பார்ப்பதில் இருக்க, இவர் மட்டும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு மரத்தடியில் கடுப்பாக உட்கார்ந்திருப்பவது வரை, மனுஷன் பின்னுகிறார். எருமையை யார் பிடித்தது என்ற சண்டையில் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வது என ஆக்ரோஷமான க்ளைமாக்ஸ். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அமுக்குவது கொஞ்சம் அதிகமான hype ஆக இருந்தாலும், ‘உயர்வு நவிற்சி அணி’ என்று கடந்து விடவேண்டியதுதான் போல. ஷெரி சாரே.. ஒந்நும் குழப்பமில்லா! Man is a social animal என்றெல்லாம் இல்லை. Inside every man, there is an animal. To provoke it, he just needs a reason. கதை எருமையைப் பற்றியதல்ல. மனிதன் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் metaphor. லிஜோவின் வாடி வாசலிலிருந்து சீறிப் பாயும் ‘பிடிபடக்கூடிய’ ஜல்லிக்கட்டுக்காளை இது. இன்னும் பல படங்கள் எடுங்கள் லிஜோ. பார்த்து ரசிக்க நாங்கள் இருக்கிறோம். படம்: ஜல்லிக்கட்டு மொழி: மலையாளம் இயக்கம்: லிஜோஜோஸ்பெல்லிசெர்ரி திரைக்கதை: ஹரீஷ் - ஜெயகுமார் ஒளிப்பதிவு: கிரீஷ் கங்காதரன் இசை: பிரஷாந்த் பிள்ளை எடிட்டிங்: தீபு ஜோசப் ஒலிக்கலவை: கண்ணன் கணபதி நீளம்: 1:33:25மணிகள Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
இதுதாண்டா போலீஸ்(1990)
Tumblr media
ஒரு படத்திற்கு கதாபாத்திரங்களின் தேர்வு சரியாக அமைந்துவிட்டால் அதன் வெற்றி எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பெரும்பாலும் போலீஸ் படங்களில் கதாநாயகன் தலை முடி,தாடியை பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள் இந்தி படங்களில் கதாநாயகர்கள் போலீஸ் படங்களில் மிக மோசமான கெட்டப்பாக இருக்கும். மூன்று முகம் படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் DSP அலெக்ஸ் பாண்டியனாக வாழ்ந்து இருப்பார், காரணம் அந்த தலைமுடி, உடை என்று அந்த கதாபாத்திரத்திற்கு உண்மையாக உழைத்து இருப்பார் அதனால் தான் இன்று வரை அந்த கதாபாத்திரம் பேச படுகிறது. அதற்கு பின் வந்த எந்த ஒரு போலீஸ் வேடமும் அவருக்கு பொருந்தவில்லை 1.உன் கண்ணில் நீர்வடிந்தால் (பாலுமகேந்திரா) 2.கொடிபறக்குது(பாரதிராஜா) 3.பாண்டியன்(S.P.முத்துராமன்) 4.தர்பார்(A.R.முருகதாஸ்) நீண்ட வருடங்களுக்கு பிறகு குருதி புனல் படத்தில் கமல்ஹாசன் அவர்கள் ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று திரையில் காண்பித்து உள்ளார் குருதி புனல் cutting என்றே அப்போது பிரபலமான ஒன்று. பிறகு நீண்ட வருடம் அப்படி பொருந்த கூடிய போலீஸ் கெட்டப் யாரும் போடவில்லை, சட்டென்று காக்க காக்க படத்தில் சூர்யா மிக கச்சிதமாக நிஜமான போலீஸ் அதிகாரி போல திரையில் தோன்றினார் பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தெலுங்கில் யோசித்து பாருங்கள் போலீஸ் அதிகாரி வேடம் எப்படி இருந்து இருக்கும் என்று அந்த விவாதத்தை உடைத்து இது தாண்டா போலீஸ் என்று டாக்டர் ராஜசேகர் திரையில் தோன்றி மிடுக்காக நடித்து வெற்றி பெற்றார். மொழிமாற்று படமாக தமிழகத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றி படமாக இது அமைந்தது படத்தில் கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு பெயர் கிடைத்ததோ அந்த அளவுக்கு திரையில் மிரட்டிய ராம ரெட்டி அவர்களுக்கு பெயர் கிடைத்தது அந்த தாடியை தடவி கொண்டே spot வெச்சிடுவேன் என்று மிரட்டி இருந்தார். டாக்டர் ராஜசேகர் மீசை இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கும் இந்த படங்களை தொடர்ந்து மீசைக்காரன் என்று ஒரு படம் வந்து வெற்றி பெற்றது அதில் தியாகராஜன் அவர்கள் வில்லனாக நடித்து இருப்பார்கள், ராஜசேகர் படங்களில் வில்லன்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். ஒரு ரவுடிக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை கோடி ராமகிருஷ்ணா மிக நேர்த்தியாக படத்தை எடுத்து இருந்தார் இவர் இயக்கத்தில் தமிழில் மொழி மாற்றம் செய்து வந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் 1.இது தாண்டா போலீஸ் 2.சத்ரு 3.பாரத் பந்த் 4.அம்மன் 5.அருந்ததி. இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பேச படும் இது தாண்டா போலீஸ் படத்தில் வில்லன் ராம ரெட்டி தாடியை தடவிகொண்டே spot வெச்சிடுவேன் என்று சொல்லும் போது தியேட்டர் அதிர்ந்தது. பாரத் பந்த் படத்தில் கோவிந்தன் என்ற வில்லன் பாத்திரம் அதகளம் செய்து இருப்பார் ஒரு Half touser போட்டு கொண்டு கொலை செய்யும் போது மிரட்டலாக அப்போது இருந்தது. இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது மாடு மீது பாரத் பந்த் என்று எழுதி இருக்கும். C.G.வந்த புதிதில் பல படங்களில் மிக சாதாரணமாக இருந்தது ஆனால் அம்மன் படத்தில் அப்போது C.G.பரபரப்பாக பேசபட்டது இந்த படம் வெளி வந்த அனைத்து திரையரங்குகளில் அம்மன் சிலைகள் வைக்கபட்டது இன்றும் மறக்க முடியாத படமாக அருந்ததி இருக்கிறது அனுகஷா இந்த படத்தில் இருந்து தான் மிக பெரிய வளர்ச்சி அடைந்தார் குழந்தைகள் விரும்பி பார்க்க கூடிய படமாக அமைந்தது. அம்மாயி அழகு பொம்மாயி என்று வில்லன் அலறல் அட்டகாசமாக இருந்தது . மொழி மாற்று திரைப்படங்கள் இவரின் பங்கு முக்கிய இடம் பெற்றுள்ளன. *ரமேஷ் ராம் 237237 Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
Gold-மலையாள திரைப்படம் அமேசான்ல்
Tumblr media
மலையாள திரைப்படம் அமேசான்ல் தமிழில் மொழிமாற்றப்பட்டு கிடைக்கிறது.. எப்போதும் போல ஒரு simple line எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு interesting திரைக்கதை அமைத்து வழங்கும் அதே மலையாள சினிமா தான் gold. எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு சின்ன டீஸர் கூட விடாமல் இது என்னமாதிரியான கதை என்றுக்கூட வெளியில் தெரியாமல் நேரடியாக திரையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவே ஒரு தனி துணிவு வேண்டும், அது அல்போன்ஸ் புத்திரனுக்கும், ப்ரித்விக்கும் நிறையவே இருக்கிறது என்று தைரியமாக சொல்லலாம். அக்மார்க் அல்பொன்ஸ் புத்திரன் படம் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார், சில வருடங்களுக்கு முன்பு மொழி படத்தில் பார்த்த ப்ரித்வியை மீண்டும் கண்முன் வந்து நிறுத்திவிட்டார் என்றே சொல்லவேண்டும், எனக்கு தெரிந்து இவ்வளவு மென்மையான கதாப்பாத்திரம் கடைசியாய் ப்ரித்வி நடித்தது மொழிதான். சொந்த ஊருக்கு 2நாள் சென்றிருந்த நயன்தாரா அந்த ரெண்டு நாளும் இந்த படத்தின் செட்டுக்கு எதற்கு சென்றார் என்று புரியவில்லை, அதை எதற்கு வீடியோ எடுத்து படத்தில் வைத்திருக்கின்றனர் என்றும் தெரியவில்லை. முன்பே சொன்னது போல இது ஒரு பக்கா அல்போன்ஸ் புத்திரன் படமாக இருந்தாலும், முந்தைய படங்களின் ஈர்ப்பு இதில் பெரிதாய் இல்லை என்றே தோன்றுகிறது, சில காட்சிகள் கடுப்பேத்தும் சினிமாதானமாக தான் இருக்கின்றதே அன்றி, பூரிக்க ஒன்றுமில்லை. ப்ரேமம் படத்தில் எப்படி ஒரு பட்டாம்பூச்சியை வைத்து ஒரு கதையை சொல்லி இருப்பாரோ, அதே போல இதிலும் எரும்பை வைத்து சொல்லியவிதம் ரசிக்க வைக்கிறது. ஆங்காங்கே இருக்கும் சில நகைச்சுவை காட்சிகளும், நல்ல பொழுதுபோக்கு, ஆனால் மொத்தமாய் ஒரு திரைப்படமாய் அது பெரிதாக எந்த ஈர்ப்பயும் தரவில்லை, ஒருவேளை உங்கள் பார்வைக்கு அது மாறுபடலாம் வீட்டில் பொழுதுப்போகாமல் இருந்தால் பார்க்க ஒரு ஓகேவான படம் இந்த gold Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
Romancham (Goosebumps) (2023) மலையாளம்பேய் காமெடி கலாட்டா படம்
Tumblr media
2007ம் ஆண்டில் கதை நடக்கிறது. ஏழு (மலையாள) நண்பர்கள் பெங்களூரில் ஒரு அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். ஏழு பேரும் இயல்புகளில் ஏழு விதமாய் இருக்கிறார்கள். ஏழு பேரில் ஒருவனுக்கு மட்டும் வேலை இருக்கிறது. வேலை நேரம் போக மீதி நேரம் முழுவதும் காதலியுடன் பேசிக்கொண்டே இருக்கிறான்.மாலை நேரங்களில் பந்து விளையாடுவது போல… ஒரு நாள் ஒயிஜா (Ouija) போர்டை ஒருவன் அறிமுகப்படுத்த, அதை விளையாட துவங்குகிறார்கள். விளக்கெல்லாம் அணைத்துவிட்டு, அறையில் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடுவில் கேரம் போர்டு வைத்து, அதில் ஏபிசிடி என 26 எழுத்துக்களையும் எழுதி, நடுவில் ஒரு சின்ன மெழுகுவர்த்தை ஏற்றி வைத்து, நாலுபேர் சுற்றி அமர்ந்துகொண்டு… மெழுகுவர்த்திக்கு மேலே ஒரு கிளாஸை கவிழ்த்து, தங்களுடைய ஒற்றைவிரலை நால்வரும் அதில் பிடித்துக்கொள்கிறார்கள். “புனித ஆத்மாவே வா!” என அழைக்க துவங்குகிறார்கள். சில நிமிடங்களில் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொரு எழுத்தாக கைவைத்த கிளாஸ் நகருகிறது. எழுத்துக்கூட்டி புரிந்துகொள்ள வேண்டியது தான்.விளையாட்டாக கிளாஸை நகர்த்தித் துவங்கும் “பேய்” விளையாட்டில், உண்மையிலேயே ”பேய்” வந்துவிடுகிறது. அதற்கு பிறகு நடக்கும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான் முழு நீளப்படமும்!****தமிழில் பேயை வைத்து பல காமெடி படங்கள் வந்து, வெற்றி பெற்றிருக்கின்றன. மலையாளத்திற்கு இது புதியதா என தெரியவில்லை. ஆனால், மலையாளப் படங்களின் தன்மைக்கேற்ப நம்பிக்கையாய் Goosebumps என பெயர் வைத்து, பேயை வைத்து எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது பாகம் வரும் எனவும் இறுதியில் தெரிவித்திருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டு சீரியசாகும் பொழுது, ஒருவர் பந்தாவாக வருவார். தன் வண்டி எண் பற்றி கேட்கும் பொழுது சரியாக சொல்லிவிடும். ”அது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என் அப்பா பெயர் சொல்” என கெத்தாக கேட்கும் பொழுது, பேய் ஒரு பெயரை சொல்லும். “தப்பு. அது என்னுடைய சித்தப்பா பெயர்” என்பார். ”இல்லை. நான் சொன்னது தான் சரியான பெயர்” என பேய் திரும்பவும் சொல்லும். எல்லோரையும் கோபமாய் திட்டிவிட்டு செல்வார்.நடிகர்களில் Soubin Shahir மட்டும் தான் பழைய ஆள். மற்ற நண்பர்கள் பெரும்பாலும் புதியவர்கள் தான். எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும் நன்றாக ஒத்துழைக்கிறது.இப்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
Butta Bomma தெலுங்கு திரைப்படம்
Tumblr media
சத்யா அப்பாவியான கிராமத்து பெண். ஒரு சமயத்தில் தாயாரின் வாடிக்கையாளரை கைபேசியில் அழைக்கும் போது தவறுதலாக முரளி என்னும் ஆட்டோ ஒட்டுனருக்கு சென்று விடுகிறது.பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டு அத்துடன் அதனை பெரிதாக நினைக்காமல் இருக்கிறாள் சத்யா. இந்த நிலையில் முரளி சத்யாவின் குரலில் மயங்கி அவளை கைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பழக்கம் எற்படுத்தி கொள்கிறான். அந்த பழக்கம் காதலாக மாறுகிறது. சத்யாவும் முரளியை விரும்ப ஆரம்பிக்கிறாள்.இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வசதியான சின்னி சத்யாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் சத்யா வசதியில்லா பெண்ணாக இருப்பதால் சின்னியின் ஆசைக்கு அவனது தாய் தடையாக இருக்கிறார்.ஒரு கட்டத்தில் மகனின் நிலையை கண்டு சத்யாவை சின்னிக்கு திருமணம் செய்ய அவனது தாய் சம்மதிக்கிறாள். தனது பெற்றோர்கள் திருமண ஏற்பாட்டிற்காக வெளியூர் சென்று இருக்கும் போது முரளியை சந்தித்து பேச முடிவு செய்கிறாள் சத்யா.முரளி இருக்கும் நகரத்திற்கு பேருந்தில் செல்லும் சத்யா பேருந்து நிலைத்திற்கு வந்தவுடன் போன் செய்கிறாள். பேருந்து நிலையத்தில் நடந்த சிறு பிரச்னையில் கைபேசியை தவற விடுகிறான் முரளி. முரளியின் கைபேசி ராம கிருஷ்ணா என்பவரின் கைக்கு கிடைக்கிறது. சத்யா வந்த பேருந்தின் நடத்துனரின் உதவியால் அவளை கண்டுபிடிக்கிறான் முரளி.இதனிடையே சத்யாவை பேருந்து நிலையத்தில் இரு நபர்கள் பின்தொடர்ந்து வருகையில் ராம கிருஷ்ணாவை பார்த்ததும் ஒடி விடுகின்றனர்.முரளியை சத்யாவுடன் பார்த்த பின் ராம கிருஷ்ணா கைபேசியை முரளியிடம் ஒப்படைத்து விட்டு சென்று விடுகிறார்.பிறகு முரளியும் சத்யாவும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் போது சத்யா அங்கு ராம கிருஷ்ணா தங்களுக்கு பின்புறம் அமர்ந்திருப்பதை காண்கிறாள்.சத்யாவையும் முரளியையும் ராம கிருஷ்ணா பின் தொடர என்ன காரணம் மூவருக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா சத்யாவின் காதல் என்ன ஆனது இறுதியில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.சத்யாவாக தெலுங்கு படவுலகில் அறிமுகமாகியுள்ள அனிகா சுரேந்திரன் அப்பாவி கிராமத்து பெண்ணாக இயல்பாக நடித்துள்ளார். தெலுங்கு படவுலகில் நல்ல எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது.ஆட்டோ ஒட்டுனர் முரளியாக வரும் சூர்யா வசிஷ்டாவும் அனுபவ நடிகரை போல Different shades ஐ வெளிப்படுத்தி நன்றாக நடித்துள்ளார்.ராம கிருஷ்ணாவாக வரும் அர்ஜூன் தாஸ் தான் வருகின்ற காட்சிகள் குறைவாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.மற்ற கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.மலையாள திரைப்படமான Kappela வை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். எளிமையான கதை எந்த விதமான Confusion ம் இன்றி பயணிக்கிறது.எளிமையான கதை என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பை சேர்க்க தவறியதால் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்க முடியவில்லை.பாடல்கள் கவனத்தை பெற தவறி விட்டாலும் பின்னணியில் அதனை சரி செய்து விடுகிறார் இசையமைப்பாளர்.அரக்கின் அழகை நன்றாக படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.மெதுவாக செல்லும் இந்த படம் தற்காலத்திற்கு ஏற்ற Message ஐ இறுதிக்காட்சியில் எடுத்துரைத்துள்ளது.முதல் பாதியை பொறுமையுடன் கடந்து விட்டால் ஒரளவிற்கு ரசிக்கக்கூடிய இந்த படத்தை Netflix OTT ல் காணலாம். Read the full article
1 note · View note
cinemasda94 · 1 year
Text
நண்பகல் நேரத்து மயக்கம்".மலையாளத்தில் ஒரு அழகான தமிழ்ப்படம்.
Tumblr media
ஒரு படம் பார்த்தாலும் மனசுக்குள்ள நிறைவா நிக்கனும், கொஞ்சம் அசைபோட்டு யோசிக்க வைக்கனும்,பாத்த 2 மணி நேரம்,நம்மை சிலபல மணி நேரங்கள் நினைச்சு பார்க்க வைக்கனும்.இதெல்லாம் இந்த படம் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்."நண்பகல் நேரத்து மயக்கம்".மலையாளத்தில் ஒரு அழகான தமிழ்ப்படம்.கேரளாவில் இருந்து ,வேளாங்கன்னிக்கு சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் நடக்கும் 1 நாள் கிராமத்து சம்பவமே கதை.பச்சைப் பசேல் என வயல்வெளியில் திடீரென பஸ்ஸை நிறுத்தச் சொல்லி இறங்கி போகும் ஜேம்ஸ் பின்னாலயே நாமும் போக, பக்கத்தில் இருக்கும் கிராமத்துள் பழக்கப்பட்ட நபரைப் போல நுழைந்ததும் நமக்கு குழப்பம் ஆவதை, அதன் பின்வரும் சம்பவங்கள் நம்மை தெளிவுபெற வைக்கிறது. அந்த ஒருநாள், கிராமத்தில் நடக்கும் சம்பவங்களே மீதி.வயல்,தோட்டம்,ஓட்டு வீடு,மச்சு வீடு, கையோட்டு வீடுகள்,சந்து பொந்துகள், சைக்கிள்,டிவிஎஸ் வண்டி,டீக்கடை,நாய்க்குட்டி, வீட்டுத் திண்ணை,பசுமாடு,கிராமத்து பேச்சு வழக்கு,தலை காஞ்சு போன பெருசுகள், குருட்டு கெழவி,ப��ைய படங்கள் ஓடும் திண்ணை வீடு, என ஒன்று விடாமல் கிராமத்து வாழ்க்கையை நினைக்க வைக்கும்.பொதுவாக இம்மாதிரி கதை கொண்ட படங்களின் முடிவு என்பது வேறு விதமாக இருக்கும்.நல்லவேளை "அந்த" கேரக்டரை பற்றி பேச்சோடு நிறுத்தி முடித்து விட்டார்கள். இல்லையெனில் படம் மற்ற படங்களை போல ஆகியிருக்கும். மற்ற படங்கள்னா? என்ன என்பதை இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.நீங்கள் எதிர்பார்த்த முடிவு இதில் இருக்காது.��தைனு பாத்தா வெரி சிம்பிள் ஸ்டோரி தான். ஆனா அதை பார்ப்பவர்கள், மெதுவா ரசிச்சு, புருஞ்சுக்கனும்னு எடுத்ததுதான் படத்தின் ஹைலைட். பொறுமையாக சீன் பை சீன் செதுக்கியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.👏👏👏👏.இவர் யார் தெரியுங்களா?போன வருடம் வந்து நம்ம மூளைய கசக்கிய படமான "சுருளி" என்ற மலையாள வெற்றி படத்தை தந்தவரு.இப்ப இந்த வருசம், இதுல பல விடையில்லாத,என்னதான் நடந்தது?,இவருக்கு ஏன் இப்படி?,சட்டுனு ஏன் எல்லாம் முடிவுக்கு வந்துச்சு?,அதுக்கு மேல் என்ன ஆச்சு?,என நம்முள் எழும் கேள்விகளுக்கு விடை காண, படம் முடிந்ததும் நம்மையே யோசிக்க வெச்சுட்டாரு மிகத்தெளிவாக.ஜேம்ஸ் ஊருக்குள் வந்ததுமே யாருமே அவனை கண்டுக்காத போது, நாயும், கண் தெரியாத கிழவியும் அவனை கண்டுகொள்வதே ஒரு சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ளது.இது போல பல காட்சிகள்.கடைசியாக சாப்பாடு போட்டு அனுப்புவது வரை.ஒரு மலையாள படத்தை பார்த்த உணர்வே நம்முள் இல்லை. நம்ம கிராமத்தில் 2 மணி நேரம் நாயகன் பின்னாலயே சுத்தின ஃபீலிங். பெரும்பாலும் தமிழ் வசனங்களே.ஆகையால் தாரளமாக அனைவரும் பாக்கலாம்.பாக்கனும். நம்ம பாலுமகேந்திரா பாணியை ஞாபகப்படுத்துகிறது காட்சிகள், பின்னணி இசை எதுமில்லாம,வெறும் சத்தம் மட்டும் வரும் ஆர்ட் பிலிம் மாதிரி.படம் முழுக்க வரும் பிண்ணனி தமிழ் பாடல்களும், டிவியில் ஒடும் தமிழ்ப்படங்களும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப நமக்கு பதில் சொல்வதை சற்று கவனித்து பாருங்கள். NETFLIX என்ற வலைதளத்தில் படம் உள்ளது. நல்ல படத்த நேரங் கடத்தாம பாத்து,ரசித்துவிட்டு ஒரு வரி எழுதுங்கள். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
அயோத்தி-அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்
Tumblr media
முதலிலேயே சொல்லி விடுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு பல இடங்களில் அழுதுவிட்டேன். அப்படி என்ன இதில் இருக்கிறது. மேலும் இதில் இருக்கிற நல்லது அல்லது பற்றியும் இங்கே பார்க்கலாம்.அயோத்தியில் பாபர் மசூதியை அகற்றி அங்கே ராமர் கோயில் கட்டி இருக்கிற இந்த தருணத்தில் இந்த அயோத்தி மதநல்லிணக்கம் வேண்டி வந்திருக்கிறது. நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தேர்ந்த நடிப்பு. இயக்குநர் சசிகுமார் கதை நாயகனாக வருகிறார்.இந்து மத ஆச்சாரங்கள், அனுஷ்டானங்களில் தோய்ந்து கிடப்பவர் தான் நாயகியின் தந்தை. பற்றாததற்கு ஆணாதிக்க சமூக மனநிலையில் ஊறிப்போய் இருக்கிறார். பாந்தமான மனைவியை ஒரு ரோபோ போல கையாளுகிறார். அவர் மனைவிக்கும், கல்லுரியில் படிக்கும் மகளுக்கும், பள்ளியில் படிக்கும் மகனுக்கும் கூட அவர் என்றால் எப்போதும் மெலிதான நடுக்கம். வடஇந்திய நடிகர் யஷ்பால் இந்த கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் மனைவியாக வருகிறவர் அத்தனை இதம். கறாரான கணவனையும் தாங்கி கொண்டு, தன் பிள்ளைகளின் எளிய கனவுகளை தன் தையல் வருமானம் மூலம் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி தந்து கொண்டிருப்பவர்.அவர்கள் ராமேஸ்வரம் புனித யாத்திரை வருகிறபோது, விபத்து காரணமாக யஷ்பால் மனைவிக்கு தலையில் பலமான காயம். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரின் நண்பர் என்கிற முறையில், மனிதாபிமான அடிப்படையில் சசிகுமார் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்.நண்பன் காலில் அடிபட்டு ராமேஸ்வர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவதால், உடனே அவரை மதுரைக்கு தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம். தீபாவளி நேரம் என்பதால் டிரைவர் கிடைத்தபாடில்லை. தாயின் உயிர் நெருங்கிக்கொண்டே இருக்கிறதை, நாயகி மற்றும் அவள் தம்பியின் கதறல் உணர்த்த, உடனே சசிகுமார் தானே ஓட்டிக் கொண்டு செல்கிறார்.சசிகுமார் எவ்வளவோ விரைவாக செலுத்தியும், எதிர்பாராதவிதமாக வழியிலேயே கல்லூரி மாணவியான நாயகியின் அம்மா உயிர் இழந்து விடுகிறார். நாயகியின் அப்பா உடனே சடலத்தை அயோத்திக்கு விமானம் வழியாக கொண்டு சென்று, தன் மத நியமத்தின்படி ஈமச்சடங்குகளை பண்ண வேண்டும் என்பதில் துடியாய் இருக்கிறார். அதற்காகவே மதம் இதுநாள் வரை சொல்லி வைத்து பழக்கப்படுத்தி வைத்திருக்கிற அனுஷ்டானங்களை அப்படியே கடைப்பிடிக்க நினைக்கிறார். அதன் நிமித்தமாக, தன் மனைவியை தன்னுடைய சொந்த பொருளாக பாவிக்கிறார். இறந்த பின் எப்படியாவது அவளை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் அயோத்தி கொண்டு போய் எரியூட்ட வேண்டும். அப்போது தான் அவள் சொர்க்கத்திற்கு போவாள் என்று நம்புகிறார். அதற்காக தன் மதத்தின் சடங்குகளை தீவிரமாக கடைப்பிடிக்கிற தன்னுடைய சகாக்கள் சிலரி��ம் பண உதவியும் கேட்கிறார். அவர்களால் அப்படி உதவி செய்ய முடியாதவொரு தருணத்தில் தான், மனிதத்தோடு சசிகுமார் கதாபாத்திரம் அங்கே பிரவேசிக்கிறது.அப்படி பிரவேசிக்கிற கதை நாயகன் எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்டு சரியான நேரத்தில் அந்த மூன்று பேர் மற்றும் நாயகியின் அம்மா உடலையும் முறையாக விமானத்தில் கொண்டு செல்ல சகல ஏற்பாடுகளையும் எப்படி நிறைவேற்றுகிறார் என்கிற இந்த கதையில், பல தருணங்கள் நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறோம்.அப்படியான ஒரு தருணம் தான். கதை நாயகன் ஒரு இசுலாமியன் என்பது தெரிய வருகிற இடம். அவன் பெயர் அன்வர் மாலிக் என்று திகைப்பூட்டல் நோக்கோடு இறுதியில் கையாளப்பட்டிருக்கிறது. பாவமன்னிப்பு காலத்திலேயே மதநல்லிணக்கம் குறித்த மெலோ டிராமாடிக் படங்கள் நிறையவே இங்கே வந்திருக்கின்றன. இருந்தாலும், மதவெறி, மதம் எப்படி ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கிறது.. எப்படி ஆண் பெண் சமத்துவத்தை அடிகோல விடாமல் தடையாய் நிற்கிறது என்பதை சொல்வதற்கான இடங்கள் இந்த களத்தில் அமைந்திருந்தும், அந்த பகுதியை இந்த படைப்பு மேலோட்டமாக கடந்து சென்று விடுகிறது.உதாரணத்திற்கு இந்த படைப்பில் வரும் யஷ்பால் கதாபாத்திரம் மதச்சடங்குகளில் தீவிரமாக இருக்கிறார். இறந்தவர்களை அங்க குறைபாடு ஏற்படுத்தாமல் எரிக்க வேண்டும் என்று சாத்திரம் சொல்கிறதை நம்புகிறார். அது மறைமுகமாக உறுப்பு தானத்திற்கு எதிரானது அதனாலேயே உடற்கூறு ஆய்விற்கு இறந்து போன மனைவியை உட்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இப்படியான ஒவ்வாத மதமாச்சர்யங்களில் இருந்து அவர் இறுதியில் விடுபடுகிறாரா என்றால் இல்லை. இப்படியான கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று கொஞ்சமாய் பார்க்கலாம். ஆரியத்தின் ஊடுறுவல் வழியாக வந்தது. அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்தியாவிற்குள் வருவதற்கு முன் வரை இந்தியா மற்றும் அதை தாண்டியும் தமிழ் நாகரீகம் செழித்தோங்கி இருந்தது. சிந்து வெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்டவை, இங்கே கீழடியிலும் கண்டெடுக்கப்படுகிறதே அதற்கான சாட்சியம். ஆரியம் வடஇந்தியா வழியாக உள்ளே வந்த பிற்பாடு தமிழ் கலாச்சாரத்தை அது அழிக்க முற்படுகிறது. அழிக்க முடியாதபோது அதற்குள் பல இடைச்செறுகல்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, அனுட்டானங்களை கொஞ்சங்கொஞ்சமாக திணித்து அதை புழக்கத்திற்கு விடுகிறது.இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஊடுறுவிய போதும், இசுலாமியர்கள் ஊடுறுவியபோதும் நிகழ்ந்திருக்கிறது. மதம் அன்பை போதிக்கிறது தான். அதேசமயம் மனிதர்களை, மனிதத்தை பலவித அனுட்டானங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் வழியாக கூறுபோட்டு பிலவிதமான பிளவுகளை சமூகத்தில் ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.இந்த இடத்தில் மேற்படி விசயத்தை வெறுப்பற்று, தெளிவோடு சென்ட்ரிஸ, ஜென்னிய மனநிலையில் அணுக வேண்டியது அவசியம்.. ஆரியம் என்கிற பின்னோக்கிய, அமானுசிய சித்தாந்தத்தை எதிர்கொள்வதென்பது வெறுப்பற்றே நடக்க வேண்டும். தமிழ், தமிழின் இயற்கை சார்ந்த தொன்மை கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறதில் பல ஆரியர்களின் பங்களிப்பு மகத்தானது. உ.வே.சா, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்றவர்களின் மனிதநேய பங்களிப்பு மகத்தானது. ஆக, யாதும் ஊரே யாவரும் கேளீர் தான் தமிழ மரபு. அவர்களும் மனிதர்களே.. அவர்களும் தமிழர்களே.. அதேசமயம் தொன்மையான தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதென்பது காலத்தின் அவசியம். அப்படியாக இந்த திரைக்கதை நகர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.துவக்கத்தில் இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று தெரிவிக்கிறார்கள். துவக்க காட்சிகளிலும் மேலே சொன்ன மாதிரி ஆழமாய் அதே சமயம் சுவாரஸ்யமாய் இந்த படைப்பை திரைக்கதையில் நகர்த்தி செல்ல இடமிருந்தும் அந்த பகுதியை இந்த படைப்பு கவனத்தில் கொள்ளாதது ஒரு குறை தான் என்றாலும், மிக குறைந்த முதலீட்டில், மத நல்லிணக்கத்தை யதார்த்தமான விறுவிறுப்பான உருக்கமான காட்சிகளின் வாயிலாக வலியுறுத்துகிற இந்த படைப்பு அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.மேற்சொன்ன விசயங்களிலும் இதன் திரைக்கதை பயணித்திருந்தால் வடஇந்திய அப்பா கதாபாத்திரம் ஏற்றிருந்த யஷ்பால் கதாபாத்திரம் இறுதியில் மதச்சடங்குகள் பிரதானமில்லை என்கிற நிலைக்கு நகர்ந்திருக்கும். அதை கவித்துவமான காட்சி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறபட்சம், இந்த நல்ல படைப்பை உலக தரத்திற்கு கொண்டு சென்றிருக்க முடியும்.மற்றபடி, மனிதம் போற்றும், மதநல்லிணக்கம் நாடும் இந்த படம் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படைப்பு என்று அரிதியிட்டு கூறலாம்.இதன் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படியொரு கதைக்கருவை தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டிருப்பதன் வாயிலாக மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார். இதில் கதை நாயகனாக வருகிற சசிகுமார் பேசுகையில், தான் இதுவரை 11 புதிய இயக்குநர்கள், மற்றும் தோல்வி படங்கள் கொடுத்த இயக்குநர்களோடு பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தது முக்கியத்துவமானது. திரைக்கலையை மேம்படுத்த நினைக்கிற ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய விசயம் இது. அப்படியான சசிகுமார் இந்த படைப்பின் வாயிலாக தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தை வெற்றிகரமாக துவக்கி இருப்பதற்காகவே அவரை மனதார பாராட்டும் விதத்தில் இந்த படத்தை அனைவரும் கொண்டாடலாம். Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
"தி கிரேட் இண்டியன் கிச்சன் -பெண்களுக்கான படம்
Tumblr media
இந்தியாவைப் பொறுத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப்பெண்களின் வாழ்வியல் சிக்கலையும்,மன உணர்வுகளையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம்.ஒரு வீட்டுக்கு மாட்டுபொண்ணா வந்தா,நாலு வேலய பரபரனு இழுத்து போட்டு செய்யனும்,புருசனுக்கு 3 வேளையும் வகை வகையா சாப்ட செஞ்சு தரனும்,அதுக்கு 4 வகையா சட்னி சாம்பார் செய்யனும்,அதும் அம்மில அரச்சு, விறகு அடுப்புலதா சோறாக்கனும்,வாஷிங் மெஷின் இருக்கு ஆனாகைலதா துணி தொவைக்கனும்,(அட்லீஸ்ட் மாமானாரு துணியையாவது.)மிஞ்சின சோறோ கொழம்போ மறுபடியும் போட கூடாது,மாமானாருக்கு டெய்லி பல்லு வெளக்க ப்ரஷ்ஷூம் பேஸ்ட்டும் எடுத்து தரனும்,வீட்டு விலக்கானா 1 வாரம் தனி ரூம்லயே முடங்கி இருக்கனும்,முக்கியமா வீட்டு ஆம்பளைங்க கண்ல படவே கூடாது.இதெல்லாம் விட முக்கியம் பொண்ணுங்க வேலைக்கு போகவே கூடாது.ஆம்பள சம்பாதிக்கனும் பொம்பளைங்க வீட்ட பாத்துக்கனும்,தலவலியோ காய்சலோ வந்தா அவதா பாத்துக்கனும். ஆணுக்கு இணையா அவர்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் காலமிது, ஆனா இன்னும் கட்டுப்பெட்டிதனமான ஆண்கள் இன்றும் உள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேலே சொன்ன குடும்ப விதிமுறைகள்.ஒரு டீசன்டான குடும்பத்தில் இருந்த வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு இதெல்லாம் பெரிய மன வேதனையை உண்டாக்குகிறது.குறிப்பாக " டான்ஸ் டீச்சர் வேலைக்கு ஆர்டர் வந்துருக்கு" என சொல்லும்போது,அதை நாகரீகமாக சொல்ல தெரியாத மாமானார் "பொம்பளைங்க வேலைக்கு போறது இந்த குடும்பத்துக்கு ஒத்து வராது" என சுருக்கென சொல்லும் காட்சியும்,"வீட்ல ஏன் டேபிள் மேனன்ஸ் கடைபிடிக்கறதில்ல" என புருஷனிடம் கேட்டு, அது சரியாக இருக்கும் பட்சத்தில் அது தவறென மன்னிப்பு கேட்பதும்,உளவியல் ரீதியாக தான் உடலுறவுக்கு தயாராகலை என்பதை கூட புரிந்து கொள்ளாத புருஷனை நொந்து கொள்வதும் நடிப்பில் பாஸ் மார்க்.இந்த படத்தை பார்க்கும் ஆண்கள் குறைந்தபட்சம், காலையில் வீட்டிலிருந்து கொண்டு போகும் டிபன் பாக்ஸை, மதியம் சாப்பிட்டு விட்டு கழிவி கொண்டு வரும் பழக்கம் கூட இந்த படத்தின் வெற்றிதான்.இது போன்ற சின்ன சின்ன விசியங்கள் நிறைய உள்ளன படத்தில்.சென்ற வருடம் இதே பெயரில்( தி கிரேட் இண்டியன் கிச்சன்) மலையாளத்தில் வெளிவந்து பல வகையில் ஏகோபித்த பாராட்டை பெற்ற படம், சூட்டோடு சூடாக இந்த வருடம் தமிழில் வெளிவந்து, பலத்த ஆதரவை பெற்றுள்ளது. Great indian kitchen Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
NAATU NAATU பாடலுக்கு செம நடனம் ஆடிய பிரபுதேவா குழுவினர்.. VIRAL வீடியோ
Tumblr media
https://twitter.com/i/status/1637049948913950720 பிரபுதேவா மற்றும் அவரது நடன குழுவினர் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர்என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’. இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருதை பெற்றது என்பது தெரிந்ததே. பிரபுதேவா மற்றும் அவரது நடனக்குழுவினர் சுமார் 100 பேருக்கு மேல் ஒரே மாதிரி ஸ்டெப்பில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய இந்த வீடியோவை பார்க்க கண் கோடி வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான பிரபுதேவா தனது நடன குழுவினர்களுடன் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளனர் Read the full article
0 notes
cinemasda94 · 1 year
Text
நிமிஷத்திற்கு10 லட்சம் கொடுங்க மாப்பிள்ளை வீட்டில் ஹன்சிகாவின் தாயார் கண்டீஷன் ?
Tumblr media
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வரும் ஹன்சிகா மோத்வானியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின்போது அவரின் தாயார் மோனா மோத்வானி மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம் கொடுங்க என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியானதால் தற்போது ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” படத்தின்மூலம் கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்த இவரின் 50 ஆவது திரைப்படமான “மஹா” சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவைக் காதலித்துவந்த இவர் கடந்த டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார். மேலும் எனக்கு ஒரு பணிவான வேண்டுகோள் உள்ளது. கத்தூரியாக்கள் மிகவும் தாமதமாக வருபவர்கள் மற்றும் மோத்வானிகள் மிகவும் நேரத்தை கடைப்பிடிப்பவர்கள். இன்று தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அசுபமான நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இருப்பதால் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். எனவே நீங்கள் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன் என்று திருமணத்தின்போது நடிகை ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி மாப்பிள்ளை வீட்டாரிடம் கோரிக்கை வைத்தாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டு பழமையான முண்டோடா அரண்மனையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இவரின் திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணத்தை ஒட்டி நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள் மற்றும் ஏற்பாடுகளைக் குறித்த அனைத்து வீடியோக்களையும் தற்போது “லவ் ஷாதி டிராமா“ எனும் தனது வலையொளியில் ஹன்சிகா பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் திருமணத்தின்போது மாப்பிள்ளை சோஹேலின் வீட்டார் தாமதமாக வந்ததாகவும் இதனால் கடும் வருத்தம் அடைந்ததாகவும் ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி ஒரு வீடியோவில் கருத்துக் கூறியுள்ளார். Read the full article
1 note · View note