Don't wanna be here? Send us removal request.
Text
0 notes
Text
0 notes
Text
0 notes
Text
#online tamil cinema news#tamil cinema news#tamil cinema#Today Tamil Cinema News#Today Kollywood News#Tamil Cinema Seithigal
0 notes
Text
ஜெயலரில் ஒரு வெங்காயமும் இல்லை.. படம் ஓட காரணம் தமன்னா.. மன்சூர் அலிகான் அதிரடி..!
0 notes
Text
அவர் மேல எந்த தப்பும் இல்லை.. சிவகார்த்திகேயன் என்கிட்ட..வெளிப்படையாக பேசிய இமான் மனைவி..!
0 notes
Text
'வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டாரு.. இதுனாலயே 'வடசென்னை' படத்த இன்னும் நா பாக்கல': விஜய் சேதுபதி வருத்தம்
ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டு இப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதில் அவர் பேசியதாவது : “8 நாள் இந்த படத்துல நடிக்க வாங்கனு கூட்டிட்டு போய் என்னை ஏமாற்றிவிட்டார் வெற்றிமாறன். நான் வட சென்னையில் நடிக்க வேண்டியது, மிஸ் பண்ணிட்டேன்” என கூறினார்.
வட சென்னை படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தத்தால் நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவே இல்லை. விடுதலை படத்திற்காக முதலில் 8 நாள் என்னிடம் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் கடம்பூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் வைத்து ஷூட்டிங் நடத்தினார்.
அப்புறம் தான் எனக்கு தெரிந்தது 8 நாளும் எனக்கு ஆடிஷன் நடந்தது என்று. ஆடுகளம் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தபோது இங்கு ஆடியன்ஸாக உட்கார்ந்து இருந்த நான். இன்று அதே மேடையில் வெற்றிமாறனுடன் உட்கார்ந்து இருப்பது அவ்ளோ சந்தோஷமாக உள்ளது என கூறினார் விஜய் சேதுபதி.
0 notes
Text
பிரபல நடிகர் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகல்.. இனி இந்த பிரபல நடிகரா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். யார் விலகி போனாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை செமயாக நடித்து வருகிறார்.ஆனால் தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓடிடியில் மாயத்தோற்றம் என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே வதந்தி சீரியஸில் நடித்ததில் இருந்தே வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், என்னுடைய நடிப்பை பார்த்து உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குமரன் சீரியலில் தொடர்வாரா அல்லது சினிமா பக்கம் சாய்வார என்பது குறித்து முடிவெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை குமரன் சென்றுவிட்டால் அந்த இடத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுகிறது. இது குறித்த உறுதியான தகவல் கூறப்படவில்லை.
1 note
·
View note