Tumgik
kaalpandhu · 10 years
Text
Player Of the day - William Carvalho
நாடு: போர்ச்சுகல்
க்ளப்: ப்ருக்கே விலிருந்து தற்போது லிஸ்பன்
ஆட்டமுறை: நடுக்களத்தில் Defending Midfielder எனும் பணிபுரிபவர். தற்காப்புக்கள வீரர்களுக்கு ஒரு கேடயமாக பந்தை கோல்போஸ்டின் அருகில் அண்டவிடாமல் பார்த்துக்கொள்பவர்.
இவரது திறன்களை இந்த காணொளியில் பார்த்து வியக்கலாம்: https://www.youtube.com/watch?v=xjwq3rTZdUk
Tumblr media
0 notes
kaalpandhu · 10 years
Photo
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
906 notes · View notes
kaalpandhu · 10 years
Text
உலகக்கோப்பை 2014 - முன்னோட்டம்
இங்கிலாந்து, ஸ்பெய்ன் இரண்டு தேசங்களிலும் கடைசி வார லீக் ஆட்டங்கள் மட்டும் மீதமிருக்கையில் எஃப்.ஏ கோப்பை இறுதியாட்டம், சேம்ப்பியன்ஸ் லீக் இறுதியாட்டம் என அடுத்த சில வார சரவெடிகளுக்குப் பின் வாணவேடிக்கையாக மிளிரத் தயாராக இருக்கிறது உலகக்கோப்பை. உலகக்கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே மீதமிருக்கையில், ஒவ்வொரு நாளும் ஒரு வீரரை ட்விட்டரில் சுருக்கமாகவும், டம்ப்ளரில் விரிவாகவும் அறிமுகம் செய்ய விருப்பம். இன்றைய விவாதம் ஸ்பெயின். விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரபலமில்லாத நிறைய இளம் திறமைசாலிகளை இந்த உலகக்கோப்பையும் நமக்கு தரவிருக்கிறது. மரியோ கோட்சே, ஈடன் ஹஸார்ட், ஆக்ஸ்லேட் சேம்பர்லேன், நெய்மார், பால் போக்பா, லூகஸ் மோரா, ரஹீம் ஸ்டெர்லிங், தீபோ கோர்ட்வா, ரொமேலு லூகாகூ, தியாகோ ஆல்கந்த்ரா என இளம் நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கிடையே நிச்சயம் தம்மில் சிறந்தவர் யார் என்று ஆட்டத்துக்கு ஆட்டம் போட்டி நிலவும்.
ஸ்பெய்ன், ப்ரேசில், ஜெர்மனி - இம்மூன்று அணிகளும் கணிசமான ரசிகர்கள், வல்லுனர்களிடையே அரையிறுதிக்கு தகுதிபெறக்கூடிய அணிகளென ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. நான்காவது அரையிறுதி இடத்தைப் பிடிக்கிற தேசம் ரொனால்டோ vs. மெஸ்ஸியில் முடிவு செய்யப்படலாம். அல்லது 2002ல் நுழைந்த கொரியாவைப் போல எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம். குறிப்பாக பெல்ஜியம் அணியை நடுநிலையான ரசிகர்கள் தங்கள் ஆதர்சமாக கருதுகிறார்கள். தவறாமல் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் இங்கிலாந்து சோபிக்கலாம். உலகமே எதிர்நோக்கியிருக்கிறது.
கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் வென்றது போல, ப்ரேசிலுக்கு தங்கள் நாட்டினரின் பெரும் துணையுடன் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. இதுவரைக்கும் தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற எல்லா உலகக்கோப்பைகளிலும் தென்னமெரிக்க தேசங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க தகவல்.
அரங்கேற்றிய நாடு - ஆண்டு - வெற்றி பெற்ற தேசம்
உருகுவாய் - 1930 - உருகுவாய்
பிரேசில் - 1950 - உருகுவாய்
1962 - சிலே - பிரேசில்
1970 - மெக்சிகோ - பிரேசில்
1978 - ஆர்ஜெண்டினா - ஆர்ஜெண்டினா
1986 - மெக்சிகோ - ஆர்ஜெண்டினா
2014 - பிரேசில் - ?
2010ல் வுவுஸெலா துணையுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தென்னாப்பிரிக்க உலகக்கோப்பயைத் தொடர்ந்து இம்முறை ப்ரேசில். பாதாம் நிற அழகிகள், மலை மேல் இயேசப்பா, விழாக்கோலங்களின் தலைநகரம் ரியோ, கால்பந்தின் இருபெரும் கடவுள்களின் ஒருவரான பெலேவின் சொந்த தேசம். ஆமாம், தேங்காய் சீனிவாசன் குறிப்பிடும் ப்ளாக் பெர்லே தான்.
தொடர்ந்து இரண்டு யூரோ கோப்பைகளையும் கடந்த உலகக்கோப்பையையும் தன் வசம் வைத்திருக்கும் ஸ்பெய்ன் அணி ஆறாண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாகத் தான் பிரேசிலில் களமிறங்குகிறது. ஸ்பெய்னின் பாணியை ட்டிக்கி-டாக்கா (Tiki-Taka) என்று செல்லமாக அழைப்பர். தற்காப்புக் களம் (Defensive third), தாக்குதல் களம் (Attacking third), இரண்டிலும் மிகக்குறைவான நேரம் பந்தை இருக்க விடுவார்கள். களத்தின் நடுப்பகுதியில் - மத்திய களம் (Middle third) தான் பெரும்பாலும் பந்தைக் கடத்திக்கொண்டு இருப்பார்கள். டச்சு வீரரான யோஹான் க்ரயஃப் எனும் கால்பந்து மேதையால் உருவாக்கப்பட்டு நெதர்லாந்து அணியால் 70களில் ஆதிக்கம் செலுத்திய Total Football எனும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆட்டமுறை. க்ரயஃப் தெற்கு ஸ்பெய்னிலுள்ள பார்சலோனா க்ளப் அணியின் மேலாளராகப் பொறுப்பேற்று 90களில் பார்சலோனாவின் ஜூனியர் அணி சிறுவர்களிடையே இதே ஆட்டமுறையை மெருகேற்றி பயிற்சி தந்தார். ஸ்பெய்ன் அணியில் பாதிக்கு பாதி பார்சலோனா வீரர்கள் இருந்தபடியால், இந்த ஆட்டமுறை அவர்களுக்கு தோதாக அமைந்துவிட்டது. Defence, Attack, Midfield என்றில்லாமல், அத்தனை ஆட்டக்காரர்களும் மோடிமஸ்தான் பந்து மாதிரி இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். யார் எங்கு எப்போது நகர்வார்கள் என்று சொல்லவே முடியாது. ஆட்டநேரம் 90 நிமிடத்தில் குறைந்தது 60 நிமிடங்களாவது பந்தை கையக (காலகப்படுத்தி?) ப்படுத்தியபடியே முன்னேறுவார்கள். எதிரணி கண்ணயர்ந்த நிமிடத்தில் பந்து கோல் வலைக்குள் உதைத்தெறியப்படும். இது தான் ட்டிக்கி டாக்கா. கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த ஐந்து அணிகள் பட்டியல் எடுத்துப்பார்த்தால் அநேகம் பேரின் முதல் அல்லது இரண்டாவது தேர்வு இந்தத் தலைமுறை பார்சலோனா - ஸ்பெய்ன் அணியாகத் தான் இருக்கும்.
ஸ்பெய்னின் மிக முக்கிய வீரர்கள் - ஜாவி, இனியெஸ்டா. அவர்களது பொசிஷனில் இன்றைய தேதிக்கு போட்டியில்லாத மேதைகள். இவர்களுக்கு பக்கபலமாக செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் செஸ்க் ஃபேப்ரிகஸ். நாலு பேருமே பார்சலோனா. நகமும் சதையுமாய் ஒருவரின் நகர்தலை நிழலாய் அறிந்த கூட்டணி. இதுதான் ஸ்பெய்னின் மிகப்பெரும் பலம். சென்ற உலகக்கோப்பையை வென்ற கோல் இனியெஸ்டாவின் காலணியிலிருந்து விரைந்ததே. அந்த கோலை திறம்பட உருவாக்கியவர் செஸ்க். இம்முறை செஸ்க் அத்தனை அற்புதமான ஃபார்மில் இல்லை என்றாலும், இவர்களுக்கு மாற்றாக மத்திய களவீரர்கள் யுவான் மாட்டா (மான்செஸ்டர் யுனைட்டெட்), சாண்டியகோ கஸோர்லா (ஆர்செனல்), தாவீ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), இஸ்கோ (ரியல் மத்ரிட்), ஜாபி அலோன்சோ (ரியல் மத்ரிட்), இயேசு நவாஸ் (மேன்செஸ்டர் சிட்டி), கோகே (அத்லெட்டிகோ மத்ரிட்), ஹவி மார்டினேஸ் (பயர்ன் ம்யூனிக்), ஹவி கார்சியா (மான்செஸ்டர் சிட்டி). இன்னும் நான்கைந்து பேர் இருக்கலாம். இத்தனை பெரிய பட்டாளம். இதில் ஒவ்வொருத்தருமே ஸ்பெய்ன் அன்றி வேறெந்த நாட்டிலிருந்தாலும் சந்தேகமின்றி முதல் XI இடங்களுக்கு தகுதியானவர்களே. ஆனால், ஸ்பெய்ன் என்ற ஒரே காரணத்துக்காக, பெஞ்சில் சப்ஸ்டிட்யூஷனை எதிர்பார்க்கிற நிலைமை.
தாக்குதல் திறனைப் பொறுத்தவரை, ஃபெர்னாண்டோ டாரஸ் (செல்ஸீ), தாவீ வீயா (அத்லெட்டிகோ மத்ரிட்) இருவரின் கடைசி உலகக்கோப்பை இதுவாகத் தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரைப் போல இருவரும் பெரும் சொதப்பலாகத் தான் அண்மைய வருடங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக 50 மில்லியன் பவுண்டுகளுக்கு லிவர்பூலிலிருந்து செல்ஸீ சென்ற டாரஸ் இரண்டு யூரோ இறுதிப்போட்டிகளிலும் கோல் போட்டிருந்தாலும், அவரை வைத்து ஆட்டத்தைத் துவக்க பயிற்சியாளர் டெல் போஸ்க்கெ விரும்ப மாட்டார். உச்சபட்ச ஃபார்மிலிருக்கும் டியெகோ கோஸ்டா (அத்லெட்டிகோ மத்ரிட்) அல்லது ஆல்வரோ நெக்ரீடோ (மான்செஸ்டர் சிட்டி) ஆட்டத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்காப்பைப் பொறுத்தவரைக்கும் புயோல் (பார்சலோனா) ஓய்வு அறிவித்தபடியால் பிக்கே (பார்சலோனா), ராமோஸ் (ரியல் மத்ரிட்), அஸ்பிலிக்வெட்டா (செல்ஸீ), ஜோர்டி ஆல்பா (பார்சலோனா) நால்வரும் தொடங்குவார்கள். துணைபுரிய பெஞ்சில் யுவான்ஃப்ரான் (அத்லெட்டிகோ மத்ரிட்), மோன்ரியால் (ஆர்செனல்), ஆல்பியால் (நாபொலி), பாத்ரா (பார்சலோனா). கோலைத் தடுக்க கல்லணையாக கசியாஸ் (ரியல் மத்ரிட்). புனித. இக்கர் கசியாஸ். அவர் சீக்குப்பட்டால் வால்டேஸ் (பார்சலோனா) அல்லது பெபெ ரெய்னா (நாபொலி). ராமோஸ் சமீபமாக அட்டகாசமான ஃபார்மிலிருக்கிறார். இத்தனை பலங்களையும் ஒருங்கிணையக் கொண்ட ஸ்பெய்ன் எந்த அணியாலும் வெல்ல முடியாத இரண்டு தொடர் உலகக்கோப்பைகளை வென்றெடுக்குமா? பின்னூட்டங்களிலோ ட்விட்டரிலோ உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.
0 notes
kaalpandhu · 11 years
Text
கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை – ஓர் அறிமுகம்
வரலாறு:
     FIFA என்றழைக்கப்படும் உலக கால்பந்து சம்மேளனம் 1904ஆம் ஆண்டு ஏழு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்பு படிப்படியாக வளர்ந்து இப்போது 209 நாடுகளுடன் உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக பவனி வருகிறது. இது ஐ.நா’வின் உறுப்பினர் எண்ணிக்கையைவிட  அதிகம்.
     நிர்வாக வசதிக்காகவும், அருகாமையில் உள்ள நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தவும் ஆறு கான்ஃபெடரேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Confederation என்பது ஒரு கண்டத்தில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பாகும்.
AFC – Asian Football Confederation
CAF - Confederation of African Football
CONCACAF – Confederation of North, Central American and Caribbean Association Football
CONMEBOL – Confederación Sudamericana de Fútbol
OFC – Oceania Football Confederation
UEFA – Union of European Football Associations
இவை முறையே ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஒசினியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களை நிர்வகிக்கும் கான்ஃபெடரேஷன்கள் ஆகும். இந்த ஆறு அமைப்புகளும் தங்களது உறுப்பினர் நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தும். இவற்றில் முதன்மை போட்டிகளில் வெல்லும் அணி கான்ஃபெடரேஷன்ஸ் சாம்பியன் எனும் பெருமையைப் பெறும். யூரோ கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா இதில் பிரபலமானவை.
Tumblr media
  அரசியல் மற்றும் நிர்வாக சிக்கல்களை தடுப்பதற்காக சில காலகட்டங்களில் ஒரு கண்டத்தை சார்ந்த அணி வேறொரு கான்ஃபெடரேஷனில் இடம்பெறும்.
நடைபெறும் ஆண்டு மற்றும் நாடு:
     கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை தற்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இப்போட்டிகள் உலகக்கோப்பை நடைபெறும் நாட்டில் அப்போட்டிகளுக்கு முந்தைய ஆண்டு நடைபெறும். இப்போட்டிகள் போட்டியை நடத்தும் நாட்டின்  தயார்நிலையை சோதிக்கும் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இப்போட்டிகளில் முதல்நிலை அணியையே அனைத்து நாடுகளும் களமிறக்குகின்றன.
பங்குபெற தகுதியுள்ள அணிகள்:
     ஆறு கான்ஃபெடரேஷன்களின் நடப்பு சாம்பியன்கள், உலகக்கோப்பை நடப்பு சாம்பியன் மற்றும் போட்டியை நடத்தும் நாடு என மொத்தம் எட்டு நாடுகள் பங்குகொள்கின்றன. எதாவது ஒரு அணி இவற்றில் இரண்டு விதிகளுக்கு பொருந்தினால், இரண்டாம் நிலை அணி இப்போட்டிகளுக்கு தகுதிபெறும்.
(எ.டு) ஸ்பெயின் அணி தற்போது உலகக்கோப்பை நடப்பு சாம்பியனாகவும் யூரோ கோப்பை நடப்பு சாம்பியனாகவும் உள்ளது. எனவே யூரோ கோப்பையில் இரண்டாம் இடத்தை பிடித்த இத்தாலி இப்போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
வடிவம்:
     தகுதி பெற்றுள்ள எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
2013 கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை:
Tumblr media
     ஒன்பதாவது கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை 2013 ஜூன் 15 முதல் 30 வரை பிரேசிலில் நடைபெறுகிறது. இதில் பங்குபெறும் எட்டு அணிகள்,
A பிரிவு: பிரேசில், ஜப்பான், மெக்ஸிகோ இத்தாலி
B பிரிவு: ஸ்பெயின், உருகுவே, டஹிடி, நைஜீரியா
0 notes
kaalpandhu · 11 years
Audio
சோம்பலான ஞாயிறு காலைகளை இப்படி சோதனை முயற்சிகளால் சுவாரசியப்படுத்த எண்ணியதால் நிகழ்ந்த சோதனை. டம்ப்ளரில் சங்கிலித்தொடராக கால்பந்து ரசிகர்கள் செய்த Accent challenge - வட்டார ஒலியிசைவு சவால். கீழ்காணும் கால்பந்து ஆட்டக்காரர்கள்/ மைதானங்களை நம் விவரங்களுடன் வாசிக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்களும் முயற்சி செய்து பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். என் குரலைக் கேட்டு சிரித்து மகிழலாம். ஐ லவ் ஆதித்யா!
Your name and username
Where you’re from
Pronounce the following names: Ronaldinho, Carles Puyol, Lionel Messi, Cesc Fabregas, Real Madrid, David Villa, Wojciech Szczesny, Zinedine Zidane, Nuri Şahin, Xavi, Bastian Schweinsteiger, Bojan Krkić, Seydou Keita, Iker Casillas, Diego Maradona, Ibrahim Afellay, Camp Nou, Santiago Bernabéu, Allianz Arena, Steven Gerrard, Wayne Rooney, Branislav Ivanović, Robin van Persie, Marouane Chamakh, Mesut Özil, Miroslav Klose, Manuel Neuer, Michael Ballack, Roberto Di Matteo.
What do you personally call this sport? (Soccer, Football, Fudbalski, Futeball, Fußball, Fútbol, Futbolas, etc.?)
What is the grass on which they play called?
What do you call soccer shoes?
What do you call the person with the gloves that stands in front of the goal post?
What country produces the best footballers?
End this audio post by saying the motto of your favourite club. 
0 notes
kaalpandhu · 11 years
Text
கால்பந்து - ஒரு எளிய அறிமுகம்
நிறம், இனம், மொழி, நாடு தாண்டி மக்களிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவது தான் விளையாட்டுகளின் நோக்கம். என்னளவில் அதை வெகுசிறப்பாக முன்னெடுத்துச் செல்வது கால்பந்து மட்டுமே. தமிழில் எளிமையாக பதிவிட்டு கால்பந்தாட்ட ஆர்வத்தை தமிழ்ப்பதிவர்/ ட்விட்டர் வட்டங்களில் சற்று அதிகப்படுத்தும் ஒரு முயற்சி இது.
  உலகில் மிக அதிக ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் கால்பந்து பற்றி கிரிக்கெட் அளவுக்கு இந்திய/ தமிழர் விளையாட்டு ஆர்வலர்களுக்கு அத்தனை நாட்டம் இல்லை. எனினும் உலகக்கோப்பையை பெரும்பாலானோர் விரும்பி கண்டுகளிப்பது ஒரு ஆச்சரியம். சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பைக்கும் ஒரளவுக்கு பரந்த ரசிகர் வட்டம் இருந்தது. உலகக்கோப்பை தவிர தேசங்களுக்கிடையில் விளையாடப்படுபவை கால்பந்தின் மீது அதீத பற்றுதல் கொண்ட மூன்று கண்டம்-தழுவிய யூரோ கோப்பை (ஐரோப்பா), கோப்பா அமெரிக்கா (தென்னமெரிக்கா), கப் ஆஃப் நேஷன்ஸ் (ஆப்பிரிக்கா) கோப்பைகள். ஆனால், கால்பந்தைப் பொறுத்த வரை தேசிய அணிகளுக்கிடையே நடக்கும் ஆட்டங்களை விடவும் வட்டாரங்களுக்கிடையே வருடந்தோறும் நடக்கும் லீக் ஆட்டங்கள் தான் பிரபலம். கிரிக்கெட்டின் இந்திய ப்ரிமியர் லீக்/ சேம்ப்பியன்ஸ் லீக் டி20 ஆட்டங்கள் கால்பந்தின் இத்தகு லீக் ஆட்டங்களைத் தழுவியவை என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஐபிஎல் போல் இல்லாமல் லீக் ஆட்டங்களின் தாத்பரியமே Knock-out இன்றி, தொடர் நெடுக எந்த அணி கணிசமான புள்ளிகளுடன் நீடித்து நிலைக்கிறதோ, அவ்வணியே வெற்றிவாய்ப்பைப் பெறும்.
  ஆட்டவிதிகள்:
பலர் அறிந்ததே. இருந்தாலும், ஒருமுறை சுருக்கமாக.
90 நிமிட ஆட்டம். இரண்டு 45 நிமிட பாதிகள். தொடக்கத்தில் ‘டாஸ்’ வென்ற அணிக்கு மைதானத்தின் இரு பக்கங்களில் விருப்பமான ஒன்றையோ அல்லது பந்தை நடுவில் வைத்து உதைக்கவோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். மற்றொரு அணி அடுத்த பாதியில் பந்தை உதைத்து ஆட்டத்தை மீண்டும் தொடங்கலாம். பாதிநேரத்தில் அணிகள் இடம் மாறும். முக்கியமாக, வலைக்குள் பந்தை அடித்தால் கோல். அதிக கோல்கள் அடித்த அணிக்கு வெற்றி. லீக் அன்றி நாக்-அவுட் ஆட்டமாக இருந்தால் (உலகக்கோப்பை, அல்லது சேம்ப்பியன்ஸ் லீக்) 90 நிமிடங்கள் கழித்து இரு அணிகள் சமநிலையில் இருக்கும் பட்சத்தில் இரண்டு 15 நிமிட பாதிகள் கொண்ட 30 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்படும். அதன் முடிவிலும் சம கோல்கள் பெற்றிருப்பின் பெனால்டி முறைப்படி வெற்றி நிர்ணயிக்கப்படும்.
  வடிவம்:
ஒரு லீக்கில் பொதுவாக 20 அணிகள் இடம்பெறும். வெற்றிக்கு 3 புள்ளிகள். தோல்விக்கு புள்ளிகள் கிடையாது. சமன் செய்தால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி. சொந்த மண்ணில் 19 ஆட்டங்கள், வேற்று மண்ணில் 19 ஆட்டங்கள். ஆக, எந்த அணி 38 போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறுகிறதோ, அதற்கே வெற்றிவாகை. தவிர, பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு கண்டம் தழுவிய சேம்ப்பியன்ஸ் லீக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல கடைசி  3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்த லீக்கிலிருந்து இதற்கு அடுத்த நிலையிலுள்ள லீகிற்கு பதவியிறக்கம் (Relegation) செய்யப்படும். அவ்விடத்தை நிரப்ப இரண்டாம் தர லீக்கின் முதல் 3 அணிகளுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கவும், கடைசி மூன்று இடங்களிலிருந்து தப்பவும் போட்டி கடுமையாக இருக்கும்.
  ஐம்பெரும் லீக்-கள்:
இங்கிலாந்து, ஸ்பெய்ன், இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்சு ஆகிய ஐந்து தேசங்களின் லீக்-கள் The Big Five என்ற பெயர் பெற்றவை. இந்த லீக்-களை சேர்ந்த அணிகள் தாம் Association Football-ன் பெரும் சக்திகளாகும். இவற்றை ப்ரிமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெய்ன்), செரீ-ஆ (இத்தாலி), புந்தெஸ்லிகா (ஜெர்மனி), லிகே-1 (பிரான்சு) என்று குறிப்பிடுவர். இங்கு தவிர ப்ரேசில், ஆர்ஜெண்டினா, ஹாலந்து, பெல்ஜியம், ருஷ்யா முதல் துருக்கி, ஜப்பான் ஏன், இந்தியாவில் கூட வட்டார லீக் கால்பந்தாட்டங்கள் நடைபெறுகின்றன. 38 ஆட்டங்கள் என்பதாலும், சேம்ப்பியன்ஸ் லீக், உலகக்கோப்பை, யூரோ போன்ற ஆட்டங்கள் குறுக்கிடுவதாலும் லீக் ஆட்டங்கள் வருடம் முழுக்க நடைபெறும். ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு ஆகஸ்டு மற்றும் ஜனவரி மாதங்களில் ஆட்டக்காரர்களை வாங்கவோ விற்கவோ அவகாசம் உண்டு.
தொடர்ந்து கால்பந்து குறித்த பதிவுகள்/ செய்திகள்/ காணொளிகளுக்கு: http://twitter.com/kaalpandhu எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்.
0 notes