Don't wanna be here? Send us removal request.
Text
youtube
நாகலோகம் உண்மையில் இருக்கிறதா? நாகர்களின் மர்ம குகை கண்டுபிடிப்பு!!
Hey Guys, நாகர்கள் எங்க ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க? ஆமா, இது நாகலோகத்தோட உண்மையான காட்சிகள், இங்கதான் நாகர்கள் நிலத்தடியில வாழறதா சொல்றாங்க , அதுவுமில்லாம, இது வழியா தான் இந்த ஊர்வன மாதிரியான உயிரினங்கள் பாதாள உலகத்துல இருந்து பூமியோட மேல் பரப்புக்கு வருது. இந்த இடத்தோட பேர் என்ன? இத லுபாங் நெகலோகா ன்னு சொல்றாங்க, லுபாங் ங்கற வார்த்தைக்கு துளை ன்னும், நெகலோகா ன்னா நாகர்களோட பரிமாணம் இல்லேன்னா உலகம் னும் அர்த்தம். நாகலோகம் ங்கற வார்த்தை நிறைய பழங்கால நூல்கள்ல குறிப்பிடப்பட்டிருக்கு , இங்கதான் ஊர்வன மாதிரியான உயிரினங்கள் வாழ்ந்துட்டு இருக்கு .
இந்த இடம் கூகிள் வரைபடத்துல லுபாங் நெகலோகா அல்லது நாகா பாதாள உலகத்து துளை ங்கற பேர்ல காணப்படுது. லுபாங் என்ற வார்த்தைக்கு துளை ன்னு அர்த்தம், நெகலோகா ங்கற வார்த்தை நாகலோகா ங்கற சமஸ்கிருத வார்த்தையோட மாறின வடிவம் தான். நாகலோகம் தொலைதூரத்துல இருக்கிற ஒரு மலை உச்சியில மறைஞ்சு இருக்கு, மனுஷங்க அது கிட்ட போறது கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது, இது இந்தோனேசியாவோட பாலியில இருக்கு.
பாலினீஸ் மக்கள் இங்கதான் நாகர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு உறுதியா நம்பறாங்க, இத ஒரு புனிதமான இடமாவும் நினைக்கிறாங்க. சில உள்ளூர்காரங்க சொல்றபடி, இது கர்ப்பப்பை, அடர்ந்த காடுகளால சூழப்பட்ட பிறப்பு வழி, நாகர்கள் மனிஷ உலகத்தப்பாக்க இந்த வழியில இருந்து தான் வெளிய வராங்க. இங்க எத்தன நாகர்கள் வாழறாங்க? உள்ள நிறைய நாகர்கள் இருக்கறதா மட்டுமில்ல, அவங்க நரமாமிசம் சாப்பிடறதாவும் நாட்டுப்புறக் கதைகள் சொல்லுது, அதாவது அவர்கள் ஒருத்தர ஒருத்தர் சாப்பிடுவாங்களாம். தன்னோட உருவத்த மாத்திக்க முடிஞ்ச அந்த ஊர்வனவுக்கு காணிக்கையா, நாகலோகத்துக்குள்ள கல் எறியறது உள்ளூர்வாசிகளோட பொதுவான சடங்கு.
0 notes
Text
youtube
சோழ மன்னர்கள் மறைத்த சிவ ரகசியம்!
Hey guys, இன்னிக்கு நான் இதுவரைக்கும் கண்ணுல படாம நம்ம கண்ணு முன்னாடியே ஒளிஞ்சிகிட்டு இருக்கிற சிவபெருமானப் பத்தின ஒரு ரகசியத்த உங்களுக்குக் காட்டப் போறேன், அது என்னன்னு யூகிக்க முடியுதா? காது வளையங்கள். ஆமா, இந்தப் பழங்கால சிலையைப் பாருங்க. இடது காது வளையத்தப் பாத்தீங்களா? வலது காது வளையத்தையும் பாத்தீங்களா? அது ரெண்டும் சமமா இல்ல : அதாவது ஒரே மாதிரி இல்ல. ஒண்ணு நீளமா இருக்கு, இன்னொண்ணு வட்டமாக இருக்கு, இல்லையா? ஆனா சிற்பி தப்பா கூட செதுக்கி இருக்கலாம், இல்லையா? இல்ல. இந்தப் பழங்காலச் சிற்பத்தப் பாருங்க.
மறுபடி, காது வளையங்கள் வித்தியாசமா இருக்கு. இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம், நீங்க ஒரு தீவிர சிவ பக்தராகவோ அல்லது ஒரு பக்தியுள்ள இந்துவாகவோ கூட இருக்கலாம், ஆனா இந்த விவரத்த நீங்க ஒருபோதும் கவனிச்சிருக்க மாட்டீங்கன்னு நான் பந்தயம் கட்டுவேன். ஏன்? ஏன்னா இது ஒரு தொலைக்கப்பட்ட அறிவு. இந்த சிற்பத்தப் பாருங்க: மறுபடி, காதணிகள் வித்தியாசமா தான் இருக்கு. உண்மையில, இந்த விவரம் ரொம்ப கன்சிஸ்டென்டா இருக்கு: சிவபெருமானோட வலது பக்கத்து, காது வளையம் நீளமா இருக்கும், உண்மையில அவரோட காது மடல் கூட நீளமா இருக்கும், அவரோட காது வளையம் அவரோட தோள தொட்டுக்கிட்டு இருக்கும்.
சிவபெருமானோட இடது காதுல, ஒரு பெரிய, வட்டமான, குழிவான தோடு இருக்கும். ஆனா ஏன்? முதல்ல, நீங்க எப்பவாவது இடது காதுல ஒரு காதணியையும் வலது காதுல வேற ஒரு காதணியையும் போட்டுப்பீங்களா? யோசிச்சுப் பாருங்க, இடது கால்ல வெள்ளை ஷூவையும் வலது கால்ல கருப்பு ஷூவையும் போட்டுக்கிட்டு வெளிய போவீங்களா? அது பைத்தியக்காரத்தனமா இருக்கும், எல்லாரும் உங்களப் பார்த்து சிரிப்பாங்க, இல்லையா? அப்ப, சிவபெருமான் மட்டும் ஏன் இப்படிச் செய்யறாரு? இதுக்குப் பின்னால ஒரு மிக முக்கியமான காரணம் இருக்கணும், இந்தக் காரணத்த இந்த வீடியோவோட முடிவுல நாம் புரிஞ்சுக்கப் போறோம். ஆனா முதல்ல, மத்த இந்து கடவுள்கள்கிட்டயும் இந்த விவரம் இருக்கான்னு பார்க்கணும்.
0 notes
Text
youtube
பிரம்பணன் இந்து கோவிலில் செதுக்கப்பட்ட புத்த சின்னங்கள்?
Hey guys, இன்னிக்கு நாம இந்தோனேசியாவோட ரொம்ப பெரிய இந்து கோவிலப் பார்க்கப் போறோம். இத ப்ரம்பணன் கோயில் ன்னு சொல்றாங்க, இது குறைஞ்சது 1,200 வருஷங்கள் பழமையானது. வாங்க, அதுல என்ன இருக்குன்னு பார்ப்போம். ப்ரம்பணன் கோயில் தென்கிழக்கு ஆசியாவுலயே ரெண்டாவது பெரிய இந்து கோயில். இது போரோபுதூருக்கு அடுத்தபடியா இந்தோனேசியாவோட ரெண்டாவது பெரிய கோயில், இது தான் இந்தோனேசியாவுலயே ரொம்ப உயரமான கோயிலும்கூட.
இப்ப, ப்ரம்பணன் கோவிலப் பத்தின ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. 17 வருஷங்களுக்கு முன்னால, பழமையான ப்ரம்பணன் கோவில் ல ஒரு விசித்திரமான விஷயம் நடந்தது. மே 27, 2006 அன்னிக்கு அதிகாலைல, நேரம் விடியற்காலம் 5:55 மணி , அது சனிக்கிழமைங்கறதால, கூட்டமும் அதிகமாக இருந்தது. ப்ரம்பணன் கோயிலுக்கு வெளிய எக்கச்சக்கமான டூரிஸ்ட்டுகள் காத்துட்டு இருந்தாங்க, அவங்கள்ல சிலர் ஏற்கனவே டிக்கெட் வாங்கிட்டவங்க. எல்லாரும் ப்ரம்பணன் கோயிலுக்குள்ள வரதுக்கு விரும்பி தயாரா இருந்தாங்க. ஆனா, சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்ள வரதுக்குத் தயாராகிட்டிருந்தப்போ, இந்த இடத்துல ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுது, ப்ரம்பணன் கோயிலத் தாக்கின 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தப் பத்தி தான் இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கோம். நிஜமா, நீங்க அந்த கோயில் கோபுரத்தப் பாத்தீங்களா?
கோயில் கோபுரத்துக்கு ஒரு மேற்பகுதி இருக்கு பாருங்க. கூம்பு மாதிரி ஒரு உச்சி. அத ரத்னா ன்னு சொல்லுவாங்க, ஆனா, இந்த கோயில் கோபுரத்துல அது இல்ல. கவனிச்சீங்களா? அந்த இடம் காலியா இருக்கு பாருங்க. இது ஏன் காலியா இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் தெரியுமா? பூகம்பத்துனால தான் . இப்போ, அந்த மேல் பகுதி பீஸ் எங்க? நான் உங்களுக்குக் காட்டறேன் வாங்க. சரி, இந்த ரத்னா அதாவது கலசம் - அந்தக் கோயிலோட மேல் பகுதி - பூகம்பத்தால கீழ விழுந்துடுச்சு, இன்னிக்கு அவங்க அத, இங்க ஒரு நினைவுச்சின்னமா விட்டுட்டு, என்ன நடந்தது ங்கறத சொல்ற ஒரு செய்திப்பலகைய இங்க வச்சிருக்காங்க.
2 notes
·
View notes
Text
youtube
அவங்க யாரு? இந்த பழங்கால சிற்பங்கள புரிஞ்சிக்கறது எப்படி?
Hey guys, இன்னிக்கு நாம இந்தியா ல திருக்குறுங்குடியில இருக்கிற ஒரு பழமையான கோவிலுக்கு போறோம், இந்தப் பகுதிக்குள்ள நுழையும்போது, இந்த 8 பேர் சுத்தி நின்னு பேசிட்டு இருக்குறத பார்க்கலாம். அவங்க மனிஷங்க இல்ல, அவங்க பிரமாண்டமான சிலைகள். இவங்க எல்லாம் யாரு, ஏன் இங்க கூடி நின்னுகிட்டு இருக்காங்க? ஆர்க்கியாலஜிஸ்ட்களும் வரலாற்றாசிரியர்களும் பொதுவா இவங்கள முக்கியமில்லாத இந்து போர்வீரர்கள் இல்லன்னா அழகுக்காக வைக்கப்பட்ட கடவுள்கள் ன்னு ஒதுக்கி தள்ளிடுவாங்க , ஆனா, ஒவ்வொரு சிலையயும் ஒரு காரணத்துக்காக தான் வச்சிருக்காங்கன்னு நான் அடிச்சு சொல்லுவேன். அதனால, அவங்க யாரு, ஏன் இங்க அவங்கள வச்சிருக்காங்கங்கறத டி கோடு பண்ண முயற்சிக்கலாம் வாங்க. முதல்ல இந்த வீரனப் பார்ப்போம், வில்லைப் பிடிச்சுக்கிட்டிருக்கற இவர் யாரு? ஆனா இந்த பிரம்மாண்டமான சிற்பம் நம்மள முட்டாளாக்குது.
0 notes
Text
youtube
இந்து கோவிலில் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பம்! வெளிவந்த மர்மம்
ஹே கைஸ், இன்னிக்கு நான் பாலியிலஇருக்கிற ஒருவிசித்திரமானகோவிலுக்குதான் போறேன். பாருங்க, இதுஒரு பெரியகோவில், நிறைய சுவாரஸ்யமான சிற்பங்கள் இருக்கு. ஆனா, நான் ஒரு குறிப்பிட்ட சிற்பத்ததான் தேடிக்கிட்டிருக்கேன், இதோஇருக்குஅந்த வித்தியாசமான சிற்பம். இது என்ன? அது பைக்கா? ஒரு சைக்கிளா? இது எப்படி சாத்தியம்? ஆனா, அதுஉண்மையில பைக் தானா, இல்லேன்னா, வேறுஏதாவதா? முன்சக்கரத்தப்பாருங்க. டயர் சரியாதெரியுது, ஆனா, நடுவுல, ஒருசைக்கிள்ல பொதுவா ஸ்போக்ஸ்தான்இருக்கும். இது என்ன? இது ஒரு பழங்கால ரகசிய ஸிம்பல், இந்துகோவில்கள்ல நாமபார்க்கக்கூடிய ஒருவகையான முடிவில்லாதமுடிச்சு.
இந்துக்கோவில்கள்லஇருக்கிற பலவிதமான நாகமுடிச்சுகள, நான்உங்களுக்குக்காமிச்சிருக்கேன், ஆனாஇங்கே, இதுக்கு எக்கச்சக்கமான ஃபீச்சர்ஸ் இருக்கு. அதயெல்லாம் இங்கவிளக்கிட்டுஇருந்தா, அது, இந்தசிற்பத்தஅனலைஸ்பண்ற வேலைலயிருந்து நம்மள திசைதிருப்பிடும். ஆனா, பின் சக்கரம் இன்னும் ஃபேன்சியா இருக்கு. இதுஒரு சக்கரமில்ல, இதுஒரு ரொம்பபெரிய பூ. நடுவுலஇருந்து இதழ்கள் வெளிய வந்துட்டுஇருக்கு. நடுவுல, நீங்கஒரு பெரியவட்டத்தையும் பார்க்கலாம். ஒரு சைக்கிள்சக்கரத்தோட சராசரி விட்டம் ரெண்டரை அடி, ஆனாஒரு சராசரிசூரியகாந்திப்பூவோடஅகலம் ரெண்டரைஇன்ச்தான்.
அதனால, இது, சிற்பியோடகற்பனைலயிருந்துவந்த, ஒரு பெரியராட்சசபூவாதான்இருக்கணும், இல்லையா? அதுதான் இல்ல! இந்தோனேஷியா, உலகத்துலயே ரொம்பபெரிய தனிப்பட்டபூவோட தாயகம்; இந்தராட்சசபூ 3.3 அடி விட்டம் வரைக்கும் பூக்கும். அதுக்கு 24 பவுண்டு வரைக்கும் எடை இருக்கும். இதோட சயின்டிஃபிக் பேரு ராஃப்லேசியா அர்னால்டி. ஜெயண்ட் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரோட நினைவாக, இதுக்குஇந்தபேரவச்சிருக்காங்க.
0 notes
Text
youtube
என்னது!! இந்த சுவரால எல்லா காலங்களையும் கணிக்க முடியுமா? ஜந்தர் மந்தர் 2
ஹேகைஸ், இன்னிக்குநாம, இந்தியால, ஜந்தர்மந்தர்ங்கற ரொம்ப யுனீக்கான இடத்துலதான்இருக்கோம், ஆனா, இதுஎன்ன? இது ஒரு ராட்சத சுவர். அதுல, ரெண்டுவளைவுகள் ஒண்ணஒண்ணு நடுவாலவெட்டிக்கிட்டுஇருக்கு. நீங்க என்னோடசைஸ சுவத்தோட சைஸோட கம்பேர்பண்ணிப் பாருங்களேன். நீங்க கவனமா பாத்தீங்கன்னா, சுவர் முழுக்க மார்க்பண்ணினஅடையாளங்கள் இருக்கறதப்பாக்கலாம். நீங்க நம்பினாலும்நம்பாட்டாலும், இதுசுமார் 300 வருஷங்களுக்கு முன்னால கட்டப்பட்ட ஒரு வானியல் கருவி. இன்னிக்கும்இது துல்லியமாவேலசெஞ்சுகிட்டிருக்கு. இது, எப்படிவேலைசெய்யுது? இந்த வளைவோட மேல கவனமாப் பார்த்தீங்கன்னா: இதுஉங்களுக்குதெரியுதா? அது என்ன? அது, சுவத்துலசொருகியிருக்கற ஒருசின்னகம்பி. இது தற்செயலானதா? ஒரு போட்டோவ தொங்கவிடறத்துக்காக இருக்கலாமோ?
0 notes
Text
youtube
என்னது! இந்த இந்திய யந்திரம் தான் Astronomyயின் ஆரம்பமா? ஜந்தர் மந்தர் - பகுதி-1
Hey guys, இன்னிக்கு நான் இந்தியா ல ஜந்தர் மந்தர் ங்கற ஒரு விசேஷமான இடத்துல இருக்கேன். இப்ப, ஜந்தர் மந்தர் ன்னா என்ன? அது ஒரு பழங்கால கோவிலா? இல்ல, ஜந்தர் மந்தர் ங்கறது, சுமார் 300 வருஷங்களுக்கு முன்னால கட்டப்பட்ட ஒரு அஸ்ட்ரனாமிகல் அப்ஸர்வேட்டரி அதாவது வானியல் ஆய்வகம். இதுல ரெண்டு விதமான தனி சிறப்பு இருக்கு. முதலாவதா: இங்கே இருக்கிற பெரும்பாலான வானியல் கருவிகள் ரொம்ப பிரமாண்டமா இருக்கு, நீங்க அந்த கருவிகளுக்குள்ளயே நடந்து போயி உங்க கால்குலேஷன்ஸ பண்ணிக்கலாம். . ரெண்டாவது: இந்த கருவிகள் எல்லாம் பழங்கால இந்திய வானியலோட அடிப்படை ல உருவானது. ஜந்தர் மந்தர் ல கட்டப்பட்ட முதல் இன்ஸ்ட்ருமெண்ட் இந்த கருவிதான். இது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா? நீங்களே பாக்குறீங்க இல்ல, இங்க எதுவுமே இல்ல. இது ஒரு குறிப்பிட்ட கோணத்துல வானத்த சுட்டிக்காட்டுற ஒரு ராம்ப், அவ்வளவுதான். அது என்ன?
1 note
·
View note
Text
youtube
பாலி நதிக்கரையில் செதுக்கப்பட்ட ராமாயண சிற்பங்கள்!
Hey guys, இன்னிக்கு நான் Baali ல இருக்கிற சில பழங்கால சிற்பங்கள உங்களுக்குக் காட்டப் போறேன், ஆனா இதுவரைக்கும் யாரும் அத document பண்ணல. ஏன்? ஏன்னா, இந்த சிற்பங்கள் தரை மேல இல்ல, இதெல்லாம் ஒரு ஆத்துக்குள்ள, உண்மை ல கரடுமுரடான ஒருஆத்தோட கரையில இருக்கு. இன்னிக்கு , நான் இந்த பழங்கால சிற்பங்கள அனலைஸ் பண்ண முயற்சி செய்யப் போறேன். நாங்க, படகுல துடுப்பு போட்டுக்கிட்டு போயிட்டு இருக்கும்போதே சில வினோதமான விஷயங்கள் என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது . அது என்ன? அது ஒரு முதலையா? ஆமா, இது முதலையே தான், ஆனால் இது நிஜ முதலை இல்ல, முதலையோட சிற்பம். அதுக்கு பக்கத்திலேயே ஒரு பெரிய நண்டையும் செதுக்கி இருக்காங்க பாருங்க.
0 notes
Text
youtube
கார், விமானம் மற்றும் பைக் 800 ஆண்டுகள் முன் செதுக்கப்பட்ட வரலாறு தவறா?
Hey guys, இன்னைக்கு நாம இந்தோனேசியா பாலி ல இருக்கிற ஒரு விசித்திரமான பழங்கால கோவிலுக்குப் போறோம். பாருங்க, இதுதான் அந்த கோவிலோட பேரு. இத எந்த வருஷத்துல கட்டினாங்க ங்கர இவரத்த இங்க பார்க்கலாம். இத 1205 ல கட்டி இருக்காங்க, அதாவது சுமார் 800 வருஷங்களுக்கு முன்னால கட்டப்பட்டிருக்கு. ஆனா, இதற்குப் பின்னாலயே, சுவத்துல இந்த விசித்திரமான சிற்பங்கள பாக்கலாம். இது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா? ஆமா! இது ஒரு கார், இந்த காலத்து கார் போலவே நாலு சக்கரங்களோட இருக்கு. காரோட body இங்க தெரியுது; அதுல ஒரு கதவையும் செதுக்கி இருக்காங்க.
0 notes
Text
youtube
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 6
Hey guys! இப்ப நாம, பிரம்பணன் ராமாயணத்தோட கடைசி பகுதிக்கு வந்துட்டோம். இந்த episode ல நீங்க பாக்க போறது, வேற எந்த கோவில்லயும் பார்க்க முடியாத ஒரு தனிப்பட்ட சிற்பத் தொகுப்பு. உங்களுக்கு ராமாயணம் நல்லாவே தெரிஞ்சுருந்தாலும் கூட உங்களுக்கு ஆச்சரியம் காத்துகிட்டு இருக்கு. இங்க ராமரும் சீதையும் சிம்மாசனத்துல ராஜா ராணியா உக்காந்துகிட்டு இருக்கிறத நீங்க பாக்கலாம். ஏழையான ஒரு சாமானிய பிரஜைக்கு ராமர் ஒரு தங்க காச தானமா கொடுக்கிறாரு. ஆனா அவன், ராமர் கிட்ட இருந்து அந்த தங்க காச வாங்க மாட்டேங்கிறான். ஏன்? அந்த ஆள பாருங்க! அவன் முகத்த அந்த பக்கம் திருப்பிக்கிட்டு இருக்கான். கைய கட்டி���்கிட்டு, ராமர் கிட்ட இருந்து பரிச வாங்கிக்க மாட்டேங்கிறான்.இத பாத்து ராமருக்கு ரொம்ப ஆச்சரியமா போயிடுது.ஏன் இந்த ஏழை அவரோட பணத்த வாங்க மாட்டேங்கிறான் ன்னு ராமர் தெரிஞ்சுக்க விரும்பறாரு.
0 notes
Text
youtube
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 5
Hey guys! இப்ப நாம பிரம்பணன் ராமாயணத்தோட அஞ்சாவது பகுதிக்கு வந்துட்டோம். இதுதான் ராமாயணத்தோட முதல் சண்டை காட்சி. இங்க ரெண்டு வேர் அடிபட்டு மயங்கி கிடக்கிறாங்க. அவங்கள ஒரு பாம்பால சுத்தி கட்டி வச்சிருக்காங்க. அவங்க வேற யாரும் இல்ல, ராமரும் லட்சுமணரும் தான் . இதுவரைக்கும் நீங்க அவங்கள இது மாதிரி ஒரு நிலைமையில பார்த்திருக்கவே மாட்டீங்க. எப்பவுமே நீங்க அவங்கள கம்பீரமா வும், வெற்றியடையும், அடுத்தவங்கள தோற்கடிக்கிற மாதிரியும் தான் பார்த்திருப்பீங்க. ஆனா இங்க அவங்க ரொம்ப தனக்கு நிகரே இல்லாத ராட்சசன் ராவணனோட சண்டை போட்டுட்டு இருக்காங்க. இப்படி ஒரு பரிதாபமாக நிலைக்கு ராமரும் லக்ஷ்மணரும் எப்படி ஆளானாங்க?
#praveenmohan#praveenmohantamil#prambananramayana#indonesia#Ancient#ramayana#epic#ramar#sithai#Youtube
0 notes
Text
youtube
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 4
Hey guys! இது பிரம்பணன் கோவில் ல இருக்கிற ராமாயண சிற்பங்களோட நாலாவது பகுதி. இப்ப நாம இலங்கையில இருக்கோம். இங்க left side கடைசியில நாம சீதையை பார்க்கலாம். அவங்கள சுத்தி ரெண்டு ராட்சசிகள் இருக்காங்க. அதுல right side ல நின்னுகிட்டு இருக்குற ஒரு ராட்சசி ராவணனோட மனைவியாவோ, அவனுடைய மனைவிகள்ல ஒருத்தியாவோ ஆகும்படியா சீதையை convince பண்ணிக்கிட்டு இருக்கா. ராவணன் சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்கள இலங்கையோட ராணியா ஆக்க விரும்பறான்.
அதனால அவன் அந்த ராட்சசிகள விட்டு சீதைய convince பண்ண சொல்லி இருக்கான். நின்னுகிட்டு இருக்கிற அந்த ராட்சசி சீதையோட பேசி, சீதைக்கு எடுத்து சொல்லி, அவங்களோட மனச மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கா. பிடிவாதம் பிடிக்காம ராவணன கல்யாணம் பண்ணிக்கும்படி அவ சீதைக்கு சொல்றா. இதுல interesting point என்னன்னா சீதை உயிரோடு இருக்கறதும், ராவணன் அவங்கள கடத்திட்டு போனதும் ராமருக்கு தெரியும். ஏன்னா ஜடாயு, என்ன நடந்ததுங்கிறத அவர் கிட்ட சொல்லிட்டாரு. ஆனா சீதைக்கு? அவங்களுக்கு ராமரும் லக்ஷ்மணரும் உயிரோடு இருக்காங்களான்னு தெரியுமா? இல்ல, ராமர் உயிரோடு இருப்பாரா என்று அவங்களுக்கு நிச்சயமா தெரியாது. அவங்களால guess பண்ண தான் முடியும். ஒருவேளை ராமரும் லக்ஷ்மணரும் அந்த மாய மானால கொல்லப்பட்டிருப்பாங்களோ ன்னு சீதை கவலைப்படறாங்க.
#praveenmohan#praveenmohantamil#prambananramayana#indonesia#Ancient#ramayana#epic#ramar#sithai#Youtube
0 notes
Text
youtube
Hey guys! இந்தோனேசியால பிரம்பணன் கோவில்ல செதுக்கி இருக்கிற ராமாயணத்தோட ரெண்டாவது episode இது. ஆனா, அது ராமரா? இல்ல. ராமருக்கு பதிலா அவங்க இன்னொரு மகனான பரதன ராஜாவா ஆக்குறாங்க. ஏன்? ஞாபகம் இருக்கும் ன்னு நினைக்கிறேன்.
#praveenmohan#நம்_உண்மை_வரலாறு#praveenmohantamil#tamilnadu#hindu#hinduism#ancienttamilcivilization#temples#indonesia#ramayanam#Youtube
0 notes
Text
youtube
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 1
Hey guys! இன்னிக்கு நான் இந்தோனேசியால, பிரம்பணன் அப்டீன்ற கோவில்ல செதுக்கி இருக்கிற ராமாயணத்த பத்தி உங்களுக்கு சொல்ல போறேன். ராமாயணத்தோட நூத்துக்கும் அதிகமான வெவ்வேற scenes-a intha பிரம்பணனன் கோவில்ல செதுக்கு இருக்காங்க.இத நான் பண்றதுக்கு காரணம் என்னனு கேட்டீங்கன்னா, பிரம்பணன் கோவில் ராமாயணத்தை டாக்குமெண்ட் பண்ணணும் ங்கரத்துக்காக தான். இதுதான் இந்த ராமாயணத்தோட முதல் சிற்பம் . இதுல ராமர் எங்க இருக்கார்னு உங்களால சொல்ல முடியுமா? Interesting ஆன விஷயம் என்னன்னா ராமரோ அவரோட சொந்தக்காரங்களோ கூட இங்க செதுக்கப்பட்டல . இந்த இடம் பூலோகமே இல்ல.
#praveenmohantamil#ancient technology#praveen mohan#Prambanan temple#Ramayanam#Prambanan Ramayanam#Youtube
0 notes
Text
youtube
சிற்பங்��ள் அழிப்பதை விட்டுவிட்டு வரலாறை காப்போம் | பிரவீன் மோகன் |
Hey guys, ஒரு பழங்கால புத்தர் சிலைய நம்மால பார்க்க முடியுது. இது உண்மையிலேயே ரொம்ப பெருசா இருக்குங்க. சுமார் 5 அடி இருக்கும். இது ஒரு life size சிலை. ஆனா இது உண்மையிலேயே பிரமாண்டமா இருக்கு. ஏன்னா, இவரு உட்கார்ந்த நிலையில இருக்காரு. ஆனாலுமே என்னோட உயரத்துக்கு இருக்காரு. அவரோட தலை மட்டுமே ஒண்ணு ல இருந்து ரெண்டு அடி உயரத்துக்கு இருந்துருக்கும் . ஆனா துரதிர்ஷ்டவசமா யாரோ அவரோட தலைய நாசம் பண்ணிருக்காங்க. இது ஒரு அருமையான சிலை. ரொம்ப fantastic ஆ இருக்கு. நீங்க நீங்க அவரோட கைகளை பார்க்கலாம் அவரோட காலையும் பார்க்க முடியும். உண்மையிலேயே ரொம்ப அழகான சிலை ஆனா அதோட தலை எங்க? அதோட தல எங்க போச்சு? இந்த உடம்போட தலைய நம்மளால கண்டுபிடிக்க முடியுமா? இதுதான் தாய்லாந்துல இருக்கிற அயுத்தாயா சரித்திர பூங்கா.
வாங்க போய் அந்த தலைய தேடி பார்க்கலாம். இங்க, எந்த பக்கம் பாத்தாலும் இந்த அழகான ஸ்தூபிகள நாம பார்க்க முடியுது. சரியா? இந்த எல்லா புத்தர் சிலைகளோட தலையையும் மிருகத்தனமா வெட்டி எடுத்து இருக்காங்க. இப்படி இந்த எல்லா புத்தர் சிலைகளோட தலைய யும் வெட்டி இருக்கிற செயல் ரொம்ப மிருகத்தனமானது. ஆனா இது ரொம்ப வருத்த படவேண்டிய விஷயம். ஆனா நாம போயி இந்த புத்தர் சிலையோட தல எங்க இருக்குன்னு கண்டு பிடிச்சு தான் ஆகணும். Right? பாருங்களேன்! இது ஒரு போர்க்களத்து காட்சி மாதிரி தெரியுது. பாருங்க இங்கே எல்லாத்தையுமே தலைய வெட்டி இருக்காங்க. இதோட தலையை வெட்டி இருக்காங்க. இங்கே நம்மளாலே இந்த எல்லா சிலைகளையுமே தலை இல்லாம தான் பார்க்க முடியுது. ஆ! அங்க! அங்கதான்! உங்களால அங்க ஏதோ ஒண்ணு இருக்கிறத பாக்க முடியுதா? பாருங்க! சுடச்சுட ஒரு விஷயம்! வாங்க, வாங்க! உங்களால பார்க்க முடியுதா? அது ஒரு புத்தர் .
இது ஏறத்தாழ 2 1/2 அடி உயரம் இருக்கு. ஆனா முகம் மட்டும் தான் இருக்கு. பாருங்க! அவர் ரொம்ப அமைதியா, கம்பீரமா இருக்கிறத பாருங்க! ஒரு ஆழ்ந்த தியான நிலையில இருக்கிற மாதிரி, பாக்குறதுக்கு அவரு ரொம்ப தீவிரமா தெரியுறாரு. இந்த தல தான் அந்த சிலைக்கு மேல இருந்திருக்கணும். உங்களால என்னோட size அயும், என்னோட முகத்தையும் அந்த புத்தருடைய முகத்தையும் compare பண்ணி பாக்க முடியும்னு நினைக்கிறேன். Right? என்னோட முகம் இவ்வளவு சின்னதா இருக்கு. பாருங்க, இதுதான் இந்த புத்த பகவானுடைய முகம். மனுசங்க எவ்வளவு கேவலமாவும், அழிக்கிற புத்தியோடயும் இருக்காங்க ங்கரத தான் இது ஞாபகப்படுத்துது. நாம எப்பவுமே constructive ஆ இருக்கணும். சிலைகள எல்லாம் நாம அழிக்க கூடாது. அத எல்லாம் நாம பாதுகாக்கணும்.
Praveen Mohan Tamil
#praveenmohantamil#ancient history#ancient technology#ancient knowledge#praveenmohan#praveen mohan#ancient temple#ancienttemple#hinduism#Youtube
1 note
·
View note
Text
youtube
அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்!
Hey guys! இன்னிக்கு நான் அயோத்யா ல இருக்கிற ஒரு ரகசிய under ground chamber ர கண்டுபிடிக்க தான் இங்க வந்து இருக்கேன். யாருமே உள்ள நுழையாத அந்த ரகசிய அண்டர் கிரவுண்ட் chamber இதோ இங்க இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குங்குறத காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி இது clear ஆ நிலத்துக்கு அடியில போகுது. அயோத்யால இது எந்த இடத்தில இருக்கு தெரியுமா? முதல்ல இந்த அயோத்யா இந்தியா ல இல்ல. இந்த அயோத்யா தாய்லாந்துல இருக்கு. இத தாய்லாந்து அயுத்தயா ன்னு சொல்றாங்க. தாய்லாந்து ஓட tradition படி ராமபிரான் இருந்த அயோத்யா இதுதான். இப்போ, நாம உள்ள போயி, இந்த underground chamber அ பத்தி மேற்கொண்டு ( இன்னும்) ஏதாவது தகவல் கிடைக்குமான்னு பாக்கலாம் வாங்க.
இந்த பாதாள ரூமுக்குள்ள நாம போக முடியும் தான் நினைக்கிறேன். இதுக்குள்ள நான் போயி உண்மை ல அங்க என்ன இருக்கு அப்படின்னு சொல்ல முடியும் னு நினைக்கிறேன் வாங்க ! ஓ! அம்மாடியோவ்!! ஓ!! வாவ்!!பாருங்களேன்! இது ஒரு 30 அடி ஆழம் போல இருக்கும். ஆமா! அப்பப்பா!! எப்படி நமக்கு வேர்த்து கொட்டுது பாருங்களேன்!! ஆஹா! வவ்வால்!! ஐய... ! இந்த இடம் முழுக்க வவ்வால் தான். அத வேற நாம disturb பண்ணிட்டோம் னு அதுங்களுக்கு ஆத்திரம். எது எப்படியோ! நான் அந்த அண்டர் கிரவுண்ட் chamber அ உங்களுக்கு காமிக்க தான் போறேன். இந்த முழு ஏரியாவயும் protect பண்ணி வச்சிருக்காங்க . ஒருவேள இந்த பாதாள ரூம வவ்வால்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்காக கூட இருக்கலாம். இத பாருங்களேன்! இது ஈஸியா 30 அடி ஆழத்துக்கு போகுது. பாருங்கப்பா!! இங்க fans கூட இருக்கு! உள்ள exhaust fans போட்டிருக்காங்க பாருங்க!!
2499 B. E ல இங்க Fine Arts department, விலைமதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள கண்டுபிடிச்சாங்க. உடனே Site அ seal பண்ணிட்டாங்க. தொடர்ந்து தேடி, சரியா கொள்ளைக்காரங்க தோண்டின இடம் வரைக்கும் வேலைய முடிச்சாங்க. ஆனாலும் பொதுமக்கள் கிட்ட இருந்தும் media கிட்ட இருந்தும் வந்த அழுத்தத்தால, வேற வழி இல்லாம தொடர்ந்து தோண்டறதை நிறுத்திட்டாங்க. Site அ seal வச்சு அத கண்காணிக்கிறதுக்கு ஒரு போலீஸ் ஆபீஸரையும் arrange பண்ணினாங்க. துரதிருஷ்ட வசமா, site அ காவல் காத்துகிட்டு இருந்த அந்த ஆபீஸர் ஒரு திருட்டு ஆசாமி யா போயிட்டாரு. இந்த பொக்கிஷங்கள எல்லாம் கொள்ள அடிக்கிறதுக்கு திருடங்கள கூட்டிட்டு வந்துட்டாரு.
Praveen Mohan Tamil
#praveenmohantamil#ancient technology#ancient history#ancient knowledge#ancienttemple#praveen mohan#thailand#Youtube
1 note
·
View note
Text
youtube
இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!
Hey guys! இன்னிக்கு நான் அயோத்யா ல இருக்கிற ஒரு ரகசிய under ground chamber ர கண்டுபிடிக்க தான் இங்க வந்து இருக்கேன். யாருமே உள்ள நுழையாத அந்த ரகசிய அண்டர் கிரவுண்ட் chamber இதோ இங்க இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குங்குறத காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி இது clear ஆ நிலத்துக்கு அடியில போகுது. அயோத்யால இது எந்த இடத்தில இருக்கு தெரியுமா? முதல்ல இந்த அயோத்யா இந்தியா ல இல்ல. இந்த அயோத்யா தாய்லாந்துல இருக்கு. இத தாய்லாந்து அயுத்தயா ன்னு சொல்றாங்க. தாய்லாந்து ஓட tradition படி ராமபிரான் இருந்த அயோத்யா இதுதான். இப்போ, நாம உள்ள போயி, இந்த underground chamber அ பத்தி மேற்கொண்டு ( இன்னும்) ஏதாவது தகவல் கிடைக்குமான்னு பாக்கலாம் வாங்க.
இந்த பாதாள ரூமுக்குள்ள நாம போக முடியும் தான் நினைக்கிறேன். இதுக்குள்ள நான் போயி உண்மை ல அங்க என்ன இருக்கு அப்படின்னு சொல்ல முடியும் னு நினைக்கிறேன் வாங்க ! ஓ! அம்மாடியோவ்!! ஓ!! வாவ்!! பாருங்களேன்! இது ஒரு 30 அடி ஆழம் போல இருக்கும். ஆமா! அப்பப்பா!! எப்படி நமக்கு வேர்த்து கொட்டுது பாருங்களேன்!! ஆஹா! வவ்வால்!! ஐய... ! இந்த இடம் முழுக்க வவ்வால் தான். அத வேற நாம disturb பண்ணிட்டோம் னு அதுங்களுக்கு ஆத்திரம். எது எப்படியோ! நான் அந்த அண்டர் கிரவுண்ட் chamber அ உங்களுக்கு காமிக்க தான் போறேன். இந்த முழு ஏரியாவயும் protect பண்ணி வச்சிருக்காங்க . ஒருவேள இந்த பாதாள ரூம வவ்வால்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்காக கூட இருக்கலாம். இத பாருங்களேன்! இது ஈஸியா 30 அடி ஆழத்துக்கு போகுது. பாருங்கப்பா!! இங்க fans கூட இருக்கு! உள்ள exhaust fans போட்டிருக்காங்க பாருங்க!! 2499 B. E ல இங்க Fine Arts department, விலைமதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள கண்டுபிடிச்சாங்க. உடனே Site அ seal பண்ணிட்டாங்க. தொடர்ந்து தேடி, சரியா கொள்ளைக்காரங்க தோண்டின இடம் வரைக்கும் வேலைய முடிச்சாங்க.
ஆனாலும் பொதுமக்கள் கிட்ட இருந்தும் media கிட்ட இருந்தும் வந்த அழுத்தத்தால, வேற வழி இல்லாம தொடர்ந்து தோண்டறதை நிறுத்திட்டாங்க. Site அ seal வச்சு அத கண்காணிக்கிறதுக்கு ஒரு போலீஸ் ஆபீஸரையும் arrange பண்ணினாங்க. துரதிருஷ்ட வசமா, site அ காவல் காத்துகிட்டு இருந்த அந்த ஆபீஸர் ஒரு திருட்டு ஆசாமி யா போயிட்டாரு. இந்த பொக்கிஷங்கள எல்லாம் கொள்ள அடிக்கிறதுக்கு திருடங்கள கூட்டிட்டு வந்துட்டாரு. 30 கொள்ளக்காரங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் தலா ரெண்டர கிலோ தங்கத்தால ஆன சாமான்கள அள்ளிவிட்டுருக்காங்க. அதாவது 2.5 * 30 எவ்வளவு? கணக்கு போட்டு பாருங்க! மொத்தம் 75 கிலோ. அப்படியே சொளையா 75 கிலோ.
அதுக்கப்புறம் distribute பண்ண முடியாத படி பெரிய size ல இருந்த தங்க பொருட்கள் -இன்னொரு 10 கிலோ. சின்ன சின்ன தங்க சாமான்கள் 2121 pieces. மொத்தமா 10,000 கிராம். இன்னும் மத்த தங்க பொருட்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 10 கிலோ. மொத்தத்துல Wat ரட்சபுராணா ல இருக்கிற இந்த ரூமுக்குள்ள 100 கிலோ க்கும் அதிகமா தங்கத்தாலான பொருட்கள வச்சிருந்திருக்காங்க. ஆனா துரதிர்ஷ்டவசமா, தொலைஞ்சதுல 10 ல ஒரு பாகம் தான் திருடங்ககிட்ட இருந்து பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப கிடைச்சது. So, இந்த இடத்துல, அனேகமா இங்க தான், நேரா நிலத்துக்கு அடியில, அவங்களுக்கு 100 கிலோ மதிப்புள்ள தங்க சாமான்கள் கிடைச்சது, okay? தாய்லாந்துல இந்த இடத்துக்கு ரக்ஷ புராணான்னு பேரு. இங்க, உங்களால நிலத்துக்கு அடியில இருக்கிற இந்த இந்த ரூம பார்க்க முடியுது இல்லியா?
Praveen Mohan Tamil
#praveenmohantamil#ancient history#praveenmohan#ancient knowledge#ancient technology#ancient temple#ancienttemple#hinduism#Youtube
1 note
·
View note