Tumgik
#லாரி
todaytamilnews · 1 year
Text
கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 5.250 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் விற்பனையாளர் உட்பட 5 பேர் கைது | 5.250 tons of ration rice seized in Krishnagiri: 5 people arrested
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்தவிருந்த 5.250 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பெண் விற்பனையாளர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, கர்நாடகாவிற்கு லாரி மூலம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அருண், எஸ்பி பாலாஜி,…
Tumblr media
View On WordPress
1 note · View note
venkatesharumugam · 2 months
Text
“அரபிக் குத்து”
என் ராசியில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று இருந்த காலம் அது! 6வது துபாய் சுற்றுப்பயணத்தில் ஷார்ஜாவில் நண்பனது வீட்டில் இருந்தோம்! ஷார்ஜாவில் மது, டிஸ்கோ, நைட் கிளப் போன்றவை எல்லாம் அனுமதி இல்லை! அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் துபாயில் எல்லாம் இருந்தது! அங்கு எம் கால் படாத கிளப் இனி புதிதாக கட்டினால் தான் உண்டு!
இங்கே அஜ்மன்னு ஒரு ஊரு இருக்கு அங்க துபாய் மாதிரியே நிறைய கிளப் இருக்குன்னு தெரிஞ்சு கிளம்பினோம். என் நண்பரின் அரபுப் பார்ட்னர் மினி லாரி சைஸில் இருந்த அவரது ரேஞ்ச் ரோவர் காரை அவரது ஓட்டுநர் சகிதம் எங்களுக்கு அனுப்பியிருந்தார்! அந்தக் காருக்குள் கபடியே ஆடலாம் அவ்வளவு பெருசு! அத்தனை சொகுசு!
அஜ்மன் நெருங்க நெருங்க எங்கும் உற்சாகக் குரல்கள் அரபு கோஷங்கள் மக்கள் வீதியில் நடனமாடிக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும் பியர் முதற் கொண்டு பல மது வகைகளை குடித்துக் கொண்டும் இருந்தனர்! அந்தப் பிரதேச மன்னரின் கால்பந்து அணி அன்று அங்கு நடந்த லோக்கல் ஃபுட்பால் லீக்கில் சாம்பியன் கோப்பை வென்றிருந்தது!
எங்கள் மீது சுக்கிரனின் வக்கிரப் பார்வை உக்கிரமாக விழுந்திருந்தது! ஆம் அன்று எல்லா கிளப்புகளிலும் இரவு 12 மணி வரை எல்லாருக்கும் மது முற்றிலும் இலவசம் என்று அப் பிரேதச இளவரசர் அறிவித்துவிட்டார் என்று அறிந்தோம்! இந்த வாக்குறுதிக்கு தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்து இருக்கலாம் அல்லவா! இளவரசரின் அறிவிப்பு நாடெங்கும் பரவ வீட்டில் நிம்மதியாக..
தூங்கிட்டு இருந்த அரபிகள் எல்லாம் க்ளப்புகள் நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனர்! அஜ்மன் கேளிக்கை விடுதிகள் எல்லாம் கடற்கரையில் வரிசையாக இருக்கும்! இந்தியன், பாகிஸ்தான், ஈரான், ரஷ்யன் என க்ளப்புகள் இருக்கும்! நாங்கள் எல்லா கிளப்புக்கும் தலா 30 நிமிடம் என முறை வைத்து போய்க் கொண்டிருந்தோம்!
ஒரு கட்டத்தில் ஒவ்வொரு கிளப்பிலும் மக்கள் கூட்டம் அதிகமாகி நெரிசலும் கூச்சலும் அதிகரிக்க கிளப் மேனேஜர்கள் அரபிகளுக்கே முன்னுரிமை என்று வெளியூர் ஆட்களை வெயிட்டிங்கில் வைத்துவிட்டனர். ரேஞ்ச் ரோவரில் வந்திருக்கும் நம்ம ரேஞ்சே தெரியாம நிப்பாட்டிட்டானே எனும் அறச்சீற்றம் பொங்க ச்சீச்சீ இந்த கிளப் புளிக்கும்..
அந்த இளவரசர் கொடுத்த இலவசங்கள் வேண்டாம் என்ற ஞானம் பிறக்க எலைட் கிளப் நோக்கி எங்கள் வாகனம் பறக்க ஆரம்பித்தது! அஜ்மனிலேயே புகழ் பெற்ற ராயல் க்ளப் ஒன்றில் எங்கள் கார் நின்றது! பணியாள் ஒருவர் கார் கதவை திறக்க ஓடி வந்தார், ரேஞ்ச் ரோவர் காரிலிருந்து ஷேக்குகள் இறங்குவார்கள்னு நினைச்சா நாலு பேக்குகள் இறங்குறாங்களே என்று அவர் நினைத்தது எங்களுக்கு கேட்டது!
ஒரு வழியாக உள்ளே நுழைந்து வாகாக ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்தோம் இங்கு முதல் லார்ஜ் இலவசம் என்று இளவரசர் அறிவிப்பாம்! மகாப்பிரபு நீங்க இங்கேயுமா வந்துட்டிங்க என்று நினைத்துக் கொண்டு ஜமாவை துவக்க அதிரடி அரபி இசைக்கு 4 பெண்கள் பெல்லி நடனம் ஆடத் துவங்கினர்! அந்த தாள லயத்திற்கு ஏற்றபடி ஒரு கிரைண்டரை போல அவர்கள் இடுப்பை சுழற்றி சுழற்றி ஆ(ட்)டிக் காட்டினார்கள்!
நிறைய ஷேக்குகள் தங்கள் கேர்ள்ஃபிரண்டுகளோடு வந்திருந்தனர்! 12 மணிக்கு மேல் டான்ஸ் ப்ளோர் ஓபன் ஆக வந்திருந்த ஜோடிகள் அங்கு போய் ஆட ஆரம்பித்தனர்! மாப்ள நாமும் போய் ஆடுவோமா என்றார் நண்பர் ஒருவர்! அல்ரெடி நாம ஆடிட்டு தானேடா இருக்கோமுன்னு நினைச்சேன். இப்போ டான்ஸ் ஃப்ளோரில் ஷேக் ஒருவர் தன் கேர்ள் ஃபிரண்டோடு ஆடவந்தார்!
நமீதாவைவிட நான்கு இஞ்ச் அதிக உயரம் அழகுன்னா அப்படி ஒரு ஆஜானுபாகுவான அழகு! இவள் இந்த கிளப்பின் ஹாட் கேர்ள் ஜெர்மனி நாட்டுப் பெண் என்றார் அங்கிருந்த வெயிட்டர் ஒருவர்! அவள் ஷேக்கோடு ஆடிக்கொண்டே ஷேக் தடுமாறி ஷேக் ஆகும் நேரத்தில் அவள் அருகில் ஆடும் மற்ற ஆண்களின் கைகளைப் பிடித்து, கன்னத்தைத் தடவி 20, 50 என திர்ஹாம்களை அறுவடை செய்து கொண்டிருந்தாள்!
அவளது கள்ள ஆட்டத்தை கண்ட எனது நண்பர் கையில் நான்கு 50 திர்ஹாம் நோட்டுகளை எடுத்து கொண்டு தனக்கும் ஒரு தடவல் கிடைக்கும் என்று நம்ப்பி அங்கு போனார். முதலிரண்டு நோட்டுகளுக்கு அவர் ஆசை நிறைவேறியது மனுசன் அதோடு திரும்பி இருக்கலாம்! மூன்றாவது நோட்டை தரும் நேரத்தில் அந்த ஷேக் பார்த்துவிட்டார்! என் நண்பர் முகத்தில் விட்டார் பாருங்க ஒரு குத்து! நண்பர் சுருண்டுவிழ.. குத்திய வேகத்தில் ஷேக்கும் கீழே விழ.:
ஒரு குழப்பமான சூழலில் நண்பரை மீட்டுக் கொண்டு க்ளப்பை விட்டு வெளியேறி காரில் ஏறி கிளம்பி ப்ரேக்கை ஷார்ஜாவில் வந்தே மிதித்தார் டிரைவர். மறுநாள் நண்பர் முகத்தில் வலது கண்ணை சுற்றி கருஞ்சிவப்பில் தென் அமெரிக்கா மேப் தெரிந்தது! அது முற்றிலும் ஆற 2 மாதங்கள் ஆனதாம்! எனக்கு அரபிக் குத்து என்றால் சட்டுன்னு இது தான் நினைவுக்கு வரும்.!
டிஸ்கி : அந்த ஜெர்மன் அழகி பேரு க்ளாரா! இன்னொரு முறை அங்க போயிருந்த போது அறிந்த உண்மை!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
ethanthi · 3 months
Text
வாகனத்தின் பின்புறம் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்று எழுதி இருப்பது ஏன்?
டிரக்கின் பின்னால் வரும் வாகனம் முன்னோக்கி நகரும் முன் ஹார்ன் அடிக்கும்‌. டிரக் டிரைவரிடம் அவர் முந்திச் செல்ல முடியும் என்று குறிப்பிடுகிறார்.
அப்போது எதிரே வேறு எந்த வாகனமும் வராத போது லாரி டிரைவர் ஓகே கொடுத்து சிக்னல் கொடுப்பார். இதற்குப் பிறகு தான் பின்னால் வரும் வாகனம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அர்த்தம்.
0 notes
tamilonlinenews · 5 months
Text
0 notes
airnewstamil · 8 months
Text
youtube
சத்தியமங்கலம் திம்பம் மலை பாதையில் கட்டுபாடைஇழந்து லாரி அந்தரத்தில் தொங்கியது #timbam #looryaccident
0 notes
topskynews · 9 months
Text
லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!
சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும்,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகளான பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. பிரியாவிற்கு ராஜதுரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
sennewstv · 10 months
Link
0 notes
newstodaysworld · 11 months
Text
Check out this post… "19 வருடங்களாக சங்ககிரி முதல் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு லாரி ஓட்டி மகன்களை பட்டதாரியாக்கிய பெண் லாரி ஓட்டுநர் செல்வமணி!".
0 notes
dinavel · 1 year
Text
தூத்துக்குடி அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உட்பட 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ் இன்று மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்ஸில் 62 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் எப்போதும் வென்றான் அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் அருகே முன்னால்  சென்று கொண்டிருந்த சிப்சம் லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்னால்  அதிவேகமாக மோதியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த …
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்
சனிக்கிழமை அதிகாலை புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில், அவர்கள் பயணித்த டெம்போ லாரி பின்னால் இருந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். புனே கிராமப்புற அதிகார வரம்பிற்குட்பட்ட டவுண்ட் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், அதிகாலை 4.30 மணியளவில் எட்டு பேர் கொண்ட குழு அருகிலுள்ள கிராமத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. புனே நகரில் இருந்து 80…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 1 year
Text
சீசன் 3 இல் ஹக் லாரி தெஹ்ரானில் இணைகிறார்
இஸ்ரேலிய உளவுத் திரில்லர் திரைப்படத்தில் ஹக் லாரி சேர்க்கப்பட்டுள்ளார் தெஹ்ரான். இந்தத் தொடர் சமீபத்தில் Apple TV+ மூலம் மூன்றாவது சீசனுக்குப் புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தொடரில் நிவ் சுல்தான் இஸ்ரேலின் ரகசிய காவல்துறையான மொசாட்டின் ஏஜென்டாக நடிக்கிறார். தெஹ்ரான் ஈரானின் தலைநகரான பெயரிடப்பட்ட நகரத்தில் உள்ள அணுமின் நிலையத்தை ஊடுருவும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மொசாட் செயல்பாட்டாளரான தாமரின்…
Tumblr media
View On WordPress
0 notes
todaytamilnews · 1 year
Text
சென்னை | பைக் டாக்ஸியில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு | Woman killed in lorry collision
சென்னை: சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா (34). அழகுக்கலை நிபுணராக பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து மேற்கு மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கினார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் தோழிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார். பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி மற்றும் வாழ்த்து பெறுவதற்காக நேற்று அதிகாலை 4 மணி…
Tumblr media
View On WordPress
0 notes
dinosaurgamesa · 1 year
Video
youtube
மினி போர்வெல் லாரி கதை Mini Borewell Truck Story | 3D Animated Tamil Mor...
#TamilStories #MaaMaaTV #ShortStories #FunnyVideos #ComedyStories #VillageStories #NewTales
0 notes
kids4hungamathings · 1 year
Video
youtube
மினி போர்வெல் லாரி கதை Mini Borewell Truck Story | 3D Animated Tamil Mor...
#TamilStories #MaaMaaTV #ShortStories #FunnyVideos #ComedyStories #VillageStories #NewTales
0 notes
funnyanimalsrace · 1 year
Video
youtube
மினி போர்வெல் லாரி கதை Mini Borewell Truck Story | 3D Animated Tamil Mor...
#TamilStories #MaaMaaTV #ShortStories #FunnyVideos #ComedyStories #VillageStories #NewTales
0 notes
Video
youtube
மினி போர்வெல் லாரி கதை Mini Borewell Truck Story | 3D Animated Tamil Mor...
#TamilStories #MaaMaaTV #ShortStories #FunnyVideos #ComedyStories #VillageStories #NewTales
1 note · View note