Tumgik
tamillit · 9 months
Text
Vanathi's Message
தூவெண்மதி சூடி
தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசி
என்உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே
Tumblr media
11 notes · View notes
tamillit · 5 years
Text
Tumblr media
Kurunthokai
Kurunthokai-40, The Hero says,
"What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and i meet ever?
But in love
our hearts have mingled
like red earth and pouring rain."
– Cempulap peyaṉīrār (The Poet of the Red Earth and Pouring Rain).
It is interesting to note that the poet is named after the Metaphor in the Poem.
__
Kurunthokai is a Anthology of poems that belong to Sangam Literature ( Third Century BC to Third Century AD)
__
இயற்கை புணர்ச்சி புணர்ந்த பின்னர், ‘பிரிவர்’ என அஞ்சிய தலைவியைக் கண்டு தலைவன் கூறியது,
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எத்தகையில் உறவினர் ஆவர் ? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர் ? யானும் நீயும் இதற்கு முன் எவ்வாறு ஒருவரை ஒருவர் அறிந்தோம்? இந்த மூன்றுமே இல்லை என்றாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீரானது அந்த மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைபோல் நம் இரு அன்பு நெஞ்சங்களுக்கு தாமாகவே ஒன்றுபட்டுன.
- செம்புலப் பெயனீரார்
கருத்து : நம் பிரிவென்பது நிகழாது. நீ அச்சம் கொள்ள தேவையில்லை என தலைவன் தலைவியிடம் கூறுகிறாள்.
3 notes · View notes
tamillit · 5 years
Text
Tumblr media
புத்தரின் படுகொலை
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
.
.
.
இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று கேட்டனர்.
.
.
.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால் -
ஆகையினால் தான்…'
என்றனர் அவர்கள்.
.
.
.
'சரிசரி,
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
.
.
.
.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோகவாத சூத்திரத்தினைக்-
கொளுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் - சாம்பலானது! —நுஃமான்
.
. (சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பெளத்தமத அறநூல்கள்)
__
நூல் : 20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.
1 note · View note