trichyoutlook
trichyoutlook
Untitled
76 posts
Don't wanna be here? Send us removal request.
trichyoutlook · 4 years ago
Text
தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் கால ஒத்திகை.
Tumblr media
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.
Tumblr media
- பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான வழிமுறைகள் - வெள்ள எச்சரிக்கை வந்தவுடன் குடிநீர் ஈரப்பதம் இல்லா உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். - வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆவணங்களையும் வீட்டின் உயரமான இடத்தில் கட்டி தொங்க விடவும் அல்லது பாலிதீன் பைகளில் அடைத்து ஆழமான நிலத்தடியில் பத்திரப்படுத்த வேண்டும். - கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று அப்புறப்படுத்தி அவைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். - அவ்வப்போது ஏற்படுகின்ற சீற்றங்களை குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். - பயிர்கள் மற்றும் வீட்டு பொருட்களை காப்பீடு செய்ய வேண்டும். மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். - குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். - பாம்புகளால் வரும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் உணவுப் பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும் தீயணைப்பு துறையில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது பின்னர் தீ விபத்திலிருந்து எவ்வாறு பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர் ஒருவரின் மீது தீ பற்ற வைத்து அதனை சக வீரர்கள் அணைக்கின்ற ஒத்திகை நடைபெற்றது. திடீரென்று அந்த வீரர் மீது அதிக அளவில் தீ பரவ ஆரம்பித்ததால் உடனடியாக அவர் எழுந்தவுடன் தீ அணைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
நியூசிலாந்து நாசாவின் விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
Tumblr media
நியூசிலாந் புதிய விண்வெளித் தொழிலை உயர்த்தும் நோக்கத்துடன் "நாசாவுடன் விண்வெளி ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டது அதாவது நாசாவுடன் விண்வெளி ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்ட சமீபத்திய நாடாக நியூசிலாந்து மாறிவிட்டது. நியூசிலாந்து ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கைக்கு பதினொன்றாவது கையொப்பமிட்டது, இது விண்வெளி ஒத்துழைப்புக்கான ஒரு வரைபடமாகவும், 2024 ஆம் ஆண்டளவில் மனிதர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்பவும், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வரலாற்று மனித பயணத்தைத் தொடங்கவும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் திட்டங்களை ஆதரிக்கிறது.    
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டப்பட்டதற்கு மன்னிப்புக்கோரியது கூகுள்.
    மேலும் விண்வெளியில் ராக்கெட்டுகளை செலுத்தக்கூடிய ஒரு சில நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும் . நியூசிலாந்து சந்திரனில் இருந்து அல்லது விண்வெளியில் எடுக்கப்பட்ட தாதுக்கள் நீடித்த நிலையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.   செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
தமிழகத்தில் மின் கட்டணம் அரசு அதிரடி அறிவிப்பு
Tumblr media
மின் கட்டணம் தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் ஊழியர்கள் மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்ல தவிர்க்கின்றனர்.   எனவே நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து , வாட்ஸ் ஆப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பினால் அவர்கள் பயன்பாட்டை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள் . இது தொடர்பான 16655MG www.tangedco.gov.in GTGOTM இணையத்தில் அறிந்துகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது .
கனரா வங்கி COVID-19 க்கு எதிராக 3 கடன் திட்டங்களை அறிவித்துள்ளது
பொதுமக்கள் தாங்களே சுய கணக்கீடு செய்து, அதன்படி கட்டணம் செலுத்தும் வசதியை இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்வாரியம் அறிவித்துள்ளது. செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
திருச்சி நகரம் - BETTER2GETHER
Tumblr media
திருச்சி நகர பகுதியில் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் போதும். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு உணவு வேண்டுமோ, அத்தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று, உணவை வாசலில் வைத்து விட்டு, மொபைல் போனில் தகவல் தெரிவிப்பர். பயனாளி யாரென தன்னார்வலர்கள் பார்ப்பதில்லை; அவர்களும் தன்னார்வலர்களை பார்க்க முடியாது. இச்சேவை தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் வழங்கப்படும். இது போல் தங்கள் வீடுகளில் சமைத்த உணவு உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தன்னார்வலர்கள் கீழ் கண்ட இணைப்பில் பதிந்து மக்கள் சேவைகள் செய்ய வரவேற்கிறோம். திருச்சி நகர பகுதியில் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் போதும். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு உணவு வேண்டுமோ, அத்தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று, உணவை வாசலில் வைத்து விட்டு, மொபைல் போனில் தகவல் தெரிவிப்பர். பயனாளி யாரென தன்னார்வலர்கள் பார்ப்பதில்லை; அவர்களும் தன்னார்வலர்களை பார்க்க முடியாது. இச்சேவை தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் வழங்கப்படும். இது போல் தங்கள் வீடுகளில் சமைத்த உணவு உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தன்னார்வலர்கள் கீழ் கண்ட இணைப்பில் பதிந்து மக்கள் சேவைகள் செய்ய வரவேற்கிறோம். https://forms.gle/kiyM7njcyLqSUwKq7 பண உதவியோ பொருளுதவியோ வேண்டாம். தங்களால் இயலுமெனின் ஒரு சில நபர்களுக்கு உணவு அளியுங்கள். •உங்களுக்கு உணவு வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில்/ லிங்கில் பதிவு செய்யவும் Contact: 8778156676 https://forms.gle/XqRMotn3oDnGetAQ9 தங்கள் நல்ல ஆதரவுடன் BETTER2GETHER.TRICHY செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
வானில் ரத்த நிலா காணலாம்
Tumblr media
வானில் தோன்றும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26-ம் தேதி காணலாம் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26-ம் தேதி மாலை 3.15 முதல் 6.22 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த முழு சந்திர கிரகணம் கிழக்கு ஆசிய , ஆஸ்திரேலிய , அமெரிக்கா நாடுகளில் பார்க்க முடியும். செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
உலக தேனீ தினம்
Tumblr media
உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேனீ தின கொண்டாட்டங்கள் மனித நடவடிக்கைகளால் தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ��ானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. World Bee Day theme 2021 is “Bee engaged: Build Back Better for Bees” சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு "சாம்வெட்னா" மூலம் டெலி கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
Tumblr media
கோவிட்-19 தொற்றுநோயின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான முதலுதவி மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன், என்சிபிசிஆர் குழந்தைகளுக்கு 'சம்வெட்னா' மூலம் டெலி-கவுன்சிலிங் வழங்குகிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல்-சமூக மன ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட கட்டணமில்லா ஹெல்ப்லைன் இது. இந்த சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 1 மணி வரை மற்றும் 3.00pm முதல் 8.00pm மணி வரை டெலி-கவுன்சிலிங் வழங்குகிறது கட்டணமில்லா எண்: 1800-121-2830 இந்த கட்டணமில்லா டெலி-கவுன்சிலிங் இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்த���, குஜராத்தி, பெங்காலி போன்ற பல்வேறு பிராந்திய மொழிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்கிறது. வீட்டில் இருந்தபடியே ஈசியாக ‘ஆங்கிலம்’ கற்க மொபைல் ஆப்கள்.  இந்த சேவை செப்டம்பர், 2020 இல் தொடங்கப்பட்டது மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் கடினமான காலங்களில் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது. செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
"டூம்ஸ்டே ஸ்க்ரோலிங்" - ஜாக்கிரதை!!!
Tumblr media
"டூம்ஸ்டே ஸ்க்ரோலிங்" இந்த வார்த்தை சமீபத்தில் வேகமெடுத்து வருகிறது. இப்போது மக்கள் தொற்றுநோய் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் பற்றி தொடர்ந்து படித்து வருகின்றனர். 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் உதவி பெற உலாவுகிறார்கள். மறுபுறம் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் மற்றவர்களை குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் தங்கள் வேலை நேரம் அல்லது செயல்பாட்டில் முக்கியமான தூக்க நேரத்தையும் தியாகம் செய்கிறார்கள். இதற்கு டூம்ஸ்டே ஸ்க்ரோலிங் என்று பெயர். 'டூம்ஸ்டே ஸ்க்ரோலிங்' அல்லது 'டூம்ஸ்டே சர்ஃபிங்' என்பது அந்த செய்தி வருத்தமளிக்கிறது அல்லது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு "சாம்வெட்னா" மூலம் டெலி கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. டூம் ஸ்க்ரோலிங் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறையான மனநிலையை வலுப்படுத்தமுடியும், இது ஒருவரின் மனநலத்தை பெரிதும் பாதிக்கலாம். செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு "சாம்வெட்னா" மூலம் டெலி கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
Tumblr media
கோவிட்-19 தொற்றுநோயின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான முதலுதவி மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன், என்சிபிசிஆர் குழந்தைகளுக்கு 'சம்வெட்னா' மூலம் டெலி-கவுன்சிலிங் வழங்குகிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல்-சமூக மன ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட கட்டணமில்லா ஹெல்ப்லைன் இது. இந்த சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 1 மணி வரை மற்றும் 3.00pm முதல் 8.00pm மணி வரை டெலி-கவுன்சிலிங் வழங்குகிறது கட்டணமில்லா எண்: 1800-121-2830 இந்த கட்டணமில்லா டெலி-கவுன்சிலிங் இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி போன்ற பல்வேறு பிராந்திய மொழிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்கிறது. வீட்டில் இருந்தபடியே ஈசியாக ‘ஆங்கிலம்’ கற்க மொபைல் ஆப்கள்.  இந்த சேவை செப்டம்பர், 2020 இல் தொடங்கப்பட்டது மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் கடினமான காலங்களில் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது. செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை: மத்திய அரசு
Tumblr media
கோவிட் சிகிச்சை நெறிமுறையிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை மத்திய அரசு கைவிட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை தானமாக பெற்று, அதாவது அவர்கள் உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எய்ம்ஸ், ஐசிஎம்ஆர்-கோவிட்-19 தேசிய பணிக்குழு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது எந்த வகையில் சிறப்பானதாக இருக்கும் என விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதோடு, எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது ந���யில் கோவிட்-19 ஆன்டிபாடிகள் குணமடைந்த நோயாளியின் இரத்தத்தில் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு மாற்றப்படுவது அடங்கும். செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18
Tumblr media
சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. உலகளவில் சமூகத்தின் வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்��டும்.2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் 'அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்டெடு மற்றும் மறுகற்பனை' ஆகும். உலகின் சிறந்த அருங்காட்சியகங்களில் பாரிஸில் உள்ள லூவர் அடங்கும்.   செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் 2021
Tumblr media
6வது ஐ.நா. உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் 2021 மே 17 முதல் 23 வரை நடைபெறுகிறது. நகர்ப்புறங்களில் மணிக்கு 30 கி.மீ வேக வரம்புகள் மற்றும் மண்டலங்களை வழங்குவதற்கான தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் கொள்கை உறுதிமொழிகளைப் பெறுவதே இந்த வாரத்தின் நோக்கங்களாகும் இத்தகைய குறைந்த வேக நடவடிக்கைகளுக்கு உள்ளூர் ஆதரவை உருவாக்கவும், சாலைப் பாதுகாப்புக்கான பத்தாண்டுகால செயல்திட்டத்திற்கான உலகளாவிய திட்டத்தை 2021-2030-ல் தொடங்குவதற்கான உத்வேகத்தை உருவாக்குதலாகும் Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
கொரோனாவிற்கு 244 மருத்துவர்கள் பலி
Tumblr media
கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் இறந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பீகாரில் 69 பேரும், உபியில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மீன் வகை உயிருடன் கண்டறியப்பட்டது
Tumblr media
coelacanth என்று அழைக்கப்படும் இந்த வகை மீன், டைனோசர் காலத்திற்கு முன்பு வாழ்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டைனோசர்களுக்கு முந்தைய மற்றும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு புதைபடிவ மீன் மடகாஸ்கர் கடற்கரைக்கு அப்பால் மேற்கு இந்தியப் பெருங்கடலில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோலகாந்த் என்ற மீன் தற்செயலாக தென்னாப்பிரிக்க சுறா வேட்டைக்காரர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள். https://t.me/trichyoutlook கடலில் 328-492 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த மீன் இதற்கு முன்பு 1938 ஆம் ஆண்டிற்கு பிறகு அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டு வந்தது. 420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்த coelacanth வகை மீன்களுக்கு 8 துடுப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
NEFT சேவை நிறுத்தப்படும் - ரிசர்வ் வங்கி
Tumblr media
மே 23-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை நெஃப்ட் (NEFT) சேவை நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக நெஃப்ட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக விளக்கமளித்துள்ளது. ஆன்லைன் வங்கி சேவையில் பெரிய அளவிலான ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய நெஃப்ட் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
திருச்சி கண்டோன்மெண்ட் அருகே சாலையோரம் வசிப்போருக்கு இலவச மதிய உணவு வழங்கிய டாஸ் அறக்க��்டளை.
Tumblr media
திருச்சி கண்டோன்மெண்ட் அருகே சாலையோரம் வசிப்போருக்கு இலவச மதிய உணவு வழங்கிய டாஸ் அறக்கட்டளை. முழு பொது முடக்கத்தால் பெரும்பாலானோா் வீடுகளிலே முடங்கியுள்ளனா். இதனால், அன்றாடப் பணி செய்து, குடும்பத்தை கவனித்து வந்தோா் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இதேபோல, சாலையோரம் வசிப்போரும் உணவின்றித் தவித்து வருகின்றனா். இதையறிந்த பலா் தாங்களாகவே முன்வந்து, பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனா். அந்தவகையில் டாஸ் அறக்கட்டளை மற்றும் சன்லைட் அமைப்பு இணைந்து க��ரொனா காலத்தில் முழு ஊரடங்கில் சாலையோரத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் மதிய உணவாக தக்காளிசாதம், குஸ்கா, வெஜ் பிரியாணி, தயிர்சாதம் ஆகியவை சுமார் 150 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையம், கோர்ட் மாணவர் சாலை, கண்டோன்மண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டாஸ் அறக்கட்டளை செய்திருந்தது. Read the full article
0 notes
trichyoutlook · 4 years ago
Text
ஆரம்பித்தது கொரோன 3ம் அலை
Tumblr media
தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் 3 அலை பரவதொடங்கியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் டேவிட் மக்குரா தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பு கடந்த 4 நாட்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய அவர் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்‍க நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசக்‍கு பரிந்துரை செய்துள்ளனர். இரண்டாம் அலை முழு வீச்சில் பரவி வரும் நிலையில், 3-வது அலை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் இயக்‍குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு போன்றவற்றால் ��வ்வித பயனும் இருக்‍காது என்றும், முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார். Read the full article
0 notes