Tumgik
#பயணம்
senthilkumarvision · 1 year
Text
மாமன்னர் பூலித்தேவன் பிறந்து வளர்ந்து ஒரு கைபிடி நெல்மணிகள்கூட கப்பம் கட்ட முடியாது எனச் சொல்லி பிரிட்டீஷ் கவர்மென்ட்டை குலை நடுங்கச் செய்த நெற்கட்டான்செவல் ஊரில் அமைந்த மாமன்னர் பூலித்தேவனின் நினைவு இல்லத்திற்கு விஜயமாகும் ஒவ்வொரு முறையும் பூலித்தேவனின் ஆஜானுபாகுவான கம்பீரம், வலிமை, வீரம், நெஞ்சுரம், தைரியம், துணிச்சல் இவையனைத்தும் ஐம்பூதங்கள்போல, நம் உடம்பிற்குள் சென்று மெய்சிலிர்க்க வைப்பதை உணர முடிந்தது.
1998ம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் புதுப்பொலிவு கண்டு திறப்பு விழா கண்ட மாமன்னர் பூலித்தேவனின் இல்லத்தின் நுழைவாயில் மேல்விதானத்தில்..
இரண்டு மான்கள் தனது இரண்டு வலது கால்களை தூக்கி நிற்க.. தனது நண்பனான வெள்ளை பசுமாட்டின் மீது சாய்ந்தவாறு புல்லாங்குழல் இசைக்கும் ஶ்ரீகிருஷ்ணரின் சிற்பத்தைக் கண்டு பிரமித்த வேளை, துவாபர யுகத்தின் அவதார புருஷனான ஶ்ரீகிருஷ்ணன் மாமன்னர் பூலித்தேவனின் இதயத்தில் வாழும் இறைவன் என்பதைக் கண்டு.. ஹரே கிருஷ்ணா.. என்றது.
மாமன்னர் பூலித்தேவனின் நினைவு இல்லம் திறப்பு விழா கண்ட டிசம்பர் 28ம் நாள் திங்கள்கிழமை என்பதுடன், அந்த ஆண்டின் செப்டம்பர் 28 உடன் 28 எண் வரிசையில் இரண்டு நாட்கள் மட்டுமே திங்கள்கிழமை என்பது சிறப்பம்சாக இருக்கிறது.
செப்டம்பர் 28 - விடுதலை வீரன் பகத்சிங் பிறந்த தினம் என்பதுடன், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் பற்றிய சிறப்பான புத்தகம் எழுதிய அ.கா.பெருமாள் எனும் "காக்கும் பெருமாள்" அவர்களின் பிறந்த நாளும் செப்டம்பர் 28 என்பது தொப்புள் கொடி உறவாக அமைந்து, சிறப்பு செய்கிறது.
Tumblr media
1 note · View note
Text
குழந்தையுடன்  பயணிக்கும்போது வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
1.பயணம் முன்னேற்பாடுகளாக என்னென்ன செய்ய வேண்டும்?  *குடிக்க  தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டுழ சுத்தம் செய்யப்பட்டுழ ஆற வைக்கப்பட்டு ஆர் ஓ செய்யப்பட்டு அல்லது வடிகட்டின நீராக இருக்கவேண்டும்.  *மூடி திறக்காத சுத்தமான புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீர் *கண்ட இடத்தில் கிடைக்கும் ஐஸ் கட்டிகளை தவிர்க்கவும் குழந்தைக்கு பசிக்கும்போது தர வீட்டில் செய்த பிடித்த ருசியான நொறுக்குகள் சுத்தமான சூடான சுகாதாரமான…
Tumblr media
View On WordPress
0 notes
anbumiththiran · 2 years
Text
தேசத்தின் தீய இயல்பு - கவிதை
தேசத்தின் தீய இயல்பு காலம் தொடங்கியதிலிருந்து நீங்கள் பார்க்கவில்லையா, தேசத்தின் இடைவெளியில் உலகமே நடுங்குகிறதா? ஒவ்வொரு மூலையிலும், சந்தேகமும் பயமும், எப்பொழுதும் அருகிலிருக்கும் அதன் தீமை பற்றிய அச்சம்.அது கொண்டு வரும் பயங்கரம் மனிதனின் அடிப்படை பிறப்பை உண்டாக்குகிறது. மனிதாபிமானமற்றது, பொய்கள் மற்றும் ஒரு கேலிக்கூத்து திட்டம். கொடிகள் மற்றும் பாடல்கள், பிரார்த்தனைகள் மற்றும் தற்பெருமை,…
Tumblr media
View On WordPress
0 notes
drthema · 2 years
Text
காகிதப் பக்கத்து காளான்கள்! 📜🍄😇
Tumblr media
காகிதப்பூக்கள் மேல்
காதல் கொண்டதில்லை
கண்கவர் இயற்கையில்
லயித்ததுண்டு
🍄🍄🍄
சிட்டுக்குருவியிலும்
சிறுதுளி மழையிலும்
சிற்றோடை அருவியிலும்
சொர்க்கம் கண்டதுண்டு
🍄🍄🍄
காற்றுக்கும் கவிதைகூறி
கார்குழல் உலர்த்தியதுண்டு
காதோரம் கதைகள் பேசும்
ஜிமிக்கியிலே சொக்கியதுண்டு
🍄🍄🍄
வாடிய பயிர் கண்டுயிர்
வாடிய துண்டு
வண்ணமயில் தோகை சிறகால்
வருடியதுண்டு
🍄🍄🍄
வஞ்சமற்ற சிறுகுழந்தையதன்
வதனம் கண்டு சொக்கி
வாஞ்சையாய் அதன் சிரிப்பில்
வீழ்ந்ததுமுண்டு
🍄🍄🍄
மின்மினிகள் பிடித்ததுண்டு
விண்மீனும் திருடியதுண்டு
பால் நிலவு பவனிவர
பாங்காய் ஒரு கவி வடித்ததுண்டு
🍄🍄🍄
கொடுஞ்சொல் கண்டு துவண்டதுமுண்டு
கணத்தினில் மீண்டு எழுந்ததுமுண்டு
கீறிக்கிழிக்கும் முட்புதர் பாதையில்
குருதி வடிய நடந்ததுமுண்டு
🍄🍄🍄
தனிமையை ஜீரணித்தே
தொலைதூரம் நடந்து கொஞ்சம்
���ிரும்பியே வழி பார்க்கையில்
இறைவன் தடம் மட்டும் கண்டதுண்டு
🍄🍄🍄
தொலைத்த சுயம் மீட்டதுண்டு
தொடுவானம் பார்த்ததுண்டு
தன் தோளில் தானே சாய்ந்து
தலைகோதி வடித்ததுண்டு
🍄🍄🍄
வரட்டுக் கௌரவம் கொண்டதில்லை
வரம்பமைத்து வாழ்ந்ததுண்டு
உள்ளங்கை நெல்லிக்கனியாக
உவந்ததில்லை வாழ்க்கை என்றும்
🍄🍄🍄
சதியானாலும் விதியானாலும்
புதைசேற்று சகதியானாலும்
உறுதி மட்டும் தளர்ந்து விட்டால்
உலகில் இங்கு ஏது உய்வு?
🍄🍄🍄
வாழ்க்கைப் பயணம் நெடுந்தூரம்
மெய் சோர்ந்து கண் கசிந்தால்
கண்சிமிட்டியே எட்டிப்பார்க்கும் நினைவுகள்
காகிதப் பக்கத்து காளான்கள்!
0 notes
sumivenky · 2 months
Text
✨மணப்பாக்கம் கன்னியம்மன் கோவில் 🛕செங்கல்பட்டு |Divine Journey to Chengal...
youtube
0 notes
ilakkuwebnews · 9 months
Text
0 notes
daydreamerthinu · 1 year
Text
Tumblr media Tumblr media
என் பாதங்கள் உன் சாலையை சேர்ந்த போது, என் பயணம் நம் பயணம் என்றான போது, என் கவி வரிகள் உனக்கென்றான போது, என் புகைப்படங்களில் உன் உருவமும் சேர்ந்த போது.....என் வெறுமையின் கனம் கரைந்து தான் போனது. ♥︎
6 notes · View notes
katesanalyst · 2 years
Text
அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி சீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
Tumblr media
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்கொண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் குழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
���ூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
Tumblr media
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , பன்னிர்செல்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்தின் நிலையை கவனிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் . 15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது. ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
Tumblr media
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', 'மக்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டும். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes · View notes
shelivesthepoetryyy · 2 years
Text
Tumblr media
பாதை முடிந்த பிறகும்,
இந்த உலகில்,
பயணம் முடிவதில்லையே....
4 notes · View notes
kingmabry · 2 years
Text
Journey (steep climb) to Parvathamalai (holy hill in Tamilnadu, India)
2 notes · View notes
jvazhkudai · 2 years
Text
அசையாமை
ஓடும் நீர் புரட்டி வந்த துகளாக நெடுந்தூரமாய் நிற்காத பயணம். நீர் நில்லாத பயணி. அதை நிற்கச்சொல்லிப்பார்த்தேன் அழகிய வனங்களைப்பார்க்கும் போதெல்லாம். நீர் கண்பார்க்க முடியாத வேகவூர்தி. ஆனால் காதும் கேட்கவில்லை போலும். கூட்டத்தைப்பார்த்து மிரண்டு ஓடும் அரசுப்பேருந்தும் அடித்துக்கொண்டோடும் நீர்ப்படலமும் ஒன்று. இரண்டும் நிற்க அணை போடவேண்டும். என்னைச்சுமந்து செல்லும் நதியின் பாதையில் கரிகாலன் இல்லையோ? கடலையே வந்தடைந்துவிடுவேன் போலும். இனிக்கடலில் தான் இளைப்பாறல். காலமெனும் நில்லா நதியும் நானும்! அசையாமை ஆழத்தில் தான் கிடைக்குமா?
3 notes · View notes
senthilkumarvision · 1 year
Text
கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையின் எதிர்புறம் அமைந்த ஶ்ரீஅன்னபூர்ணா உணவகத்தில் ஒரு சாப்பாட்டின் விலை ரூ.145. அருகிலுள்ள ஆனந்தாஸ் உணவகத்தில் ஒரு சாப்பாட்டின் விலை ரூ.115. ஆனந்தாஸிலே சாப்பிடலாம் என நண்பனுடன் அமர்ந்து சாப்பிட்ட வேளை.. மே 28 ஞாயிறன்று நண்பகலில் பெய்யத் தொடங்கிய மழை, மே 30 செவ்வாய்கிழமை வரை பெருமழையாக பெய்ததை கண்டது.
ஜியோ சினிமாஸில் ரிலீசான Code M வெப் சீரியஸில் 2019ம் ஆண்டு மே 30 வியாழன்று.. மேஜர் மோனிகாவின் அகவை முப்பது..(30). Code M முதல் பாகம் வெப் சீரியஸை காண Zee5 ஓடிடியை எழுநூறு ரூபாய் சந்தா செலுத்தி காணலாம். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த தினமாக.. எழுநூறு ரூபாய் சந்தா செலுத்தி Zee5 ஓடிடியில் வெற்றிகரமாக உறுப்பினர் ஆனது.
இந்த ஆண்டின் மே 30 செவ்வாய்கிழமை முதலாக.. ஜியோ சினிமாஸில் Code M வெப் சீரியஸின் இரண்டாம் பாகத்தில்.. மேஜர் மோனிகாவின் மிரட்டலான நடிப்பை இலவசமாகவே கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியானது.
Tumblr media
1 note · View note
karuppuezhutthu-blog · 11 hours
Text
முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நிதி நிலுவை குறித்து பிரதமரிடம் பேசுகிறார் | cm stalin visit to delhi
சென்னை: டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார். தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
0 notes
கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள்...
தேசிய நெடுஞ்சாலையில்...!
நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...
பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது!
ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.
ஒரு விலையுயர்ந்த காரில்...
இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!
அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!
வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.
அவரும் உயர்த்தியிருப்பார் போல...!
இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!
சளைத்தவரா நீங்கள்...?
வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.
அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.
நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.
இப்படியே போனால்.....
முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
இந்நிலையில்....
உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!
இப்போது.....
உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!
நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...
பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...
இப்போதோ...
ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...
கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!
காரணம்.... வேறு யாரோ... எவரோ...?
வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!
தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம்... என்பதைப் பற்றிய உணர்வின்றி...
அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...
தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...
பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!
உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்துவிட வேண்டாம்!
நாமே ஓட்ட வேண்டும்!
வாழ்க்கை எ���்பது ஒரு நீண்ட பயணம்!
அதில் நமது கட்டுப்பாட்டில், நமது வாகனத்தை...
நமது வாழ்க்கையை...
நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...
நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...
எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_22-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
andrewkingslyraj · 7 days
Text
 15ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் தந்தையான மார்டின் லூதர் அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகம்.
    அது ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்திற்கு புறம்பான காரியங்களை துணிகரமாக நடப்பித்துக்கொண்டிருந்த காலம். தேவன் ஊதி மனிதர்களுக்குக் கொடுத்த தம் சட்ட புஸ்தகத்தை பொது மக்களிடம் கொண்டுபோகாமல் ஒழித்துவைத்து மனிதர்களுடைய பாரம்பரியங்களை கிறிஸ்தவத்திற்குள் திணித்துக்கொண்டிருந்த காலம். கடவுள் தரும் இலவசமான பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் காசுக்கு விற்ற தெய்வபயம் அற்ற மதவாதிகள் இருந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் ஜூலை 17, 1505 அன்று மார்டின் லூதர் அவர்கள் இறையியல் கற்கும்படியாக அகஸ்தீனிய மடாலயத்திற்குச் சென்றார். அவருடைய பெற்றோர் அவ்வளவு எளிதாக மடாலயத்திற்கு அனுப்பிவிடவில்லை. அவர்கள் மகன் வேறு நல்ல துறையில் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தேவன் ஒருநாள் தங்கள் மகனை பயன்படுத்தி தமது வார்த்தையை நிலைநாட்டுவார் என்பது அன்று அவர்களுக்கு தெரியாது. லூதர் தனது தீர்மானத்தில் உறுதியாக நின்று மடாலயத்திற்கு சென்றார். லூதர் இரட்சிப்பி��் நிச்சயம் இன்றி தனது ஆத்துமாவைக் குறித்த பயத்தோடுதான் மடாலயத்திற்கு சென்றார். காரணம் ரோமன் கத்தோலிக்க மதம் தேவனுடைய நித்திய இரட்சிப்பின் சத்தியத்தை போதிக்கவில்லை. லாதர் தனது இரட்சிப்பின் நிச்சயமின்மையை தனது வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய இன்னலாகவே பதிவிடுகிறார். இரட்சிப்பைக் குறித்த கவலையால் பலமணி நேரம் பக்தி காரியங்களில் ஈடுபடுவார். ஆனாலும் அது அவருக்கு உதவவில்லை. பலமணி நேரம் தனது பாவத்தை மடத்தில் உள்ள குருமாரிடம் அறிக்கை செய்துவந்தார். இவருடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்த அவருடைய வழிகாட்டியான ஒருவர் குருமார்களைத் தேடுவதை நிருத்தி கிறிஸ்துவின்மீது மாத்திரம் கவணம் செலுத்தும்படி அறிவுறை வழங்கினார். இந்த வார்த்தையானது பின்நாட்களில் அவருடைய மனந்திரும்புதலுக்கு காரணமாக விளங்கியது.
    1510ஆம் ஆண்டு ரோமாபுரிக்கு புனித பயணம் செய்த லூதர் தேவனுடைய திருச்சபையில் அரங்கேரிய அவலத்தைப் பார்த்து மனம் கொதித்தார். 1511ஆம் ஆண்டு விட்டன்பர்கில் உள்ள மடாலயத்திற்கு மாற்றப்பட்ட லூதர் அங்கே இறையியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கே புதிதாக நிரூவப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார். சங்கீத புஸ்தகங்களை விளக்கும்போது ரோமன் கத்தோலிக்க மதத்தைக் குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். பின் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிரூபத்தை விளக்கும் போது கத்தோலிக்க மதத்தைக் குறித்த் அவருடைய விமர்சனம் வீரியம் பெற்றது (1515 மற்றும் 16களில்). வேத சத்தியங்களை கற்றுக்கொள்ளவும், சக இறையியலாளரோடு வாதிடவும் ஆரம்பித்தார். ஒரு மனிதன் நீதிமானாவது கிருபையினாலும், விசுவாசத்தின் மூலமாகவும், கிறிஸ்துவில் மாத்திரம் மட்டுமே என்பதை அறிந்துகொண்டார். அவருக்கு பலநாட்கள் போராட்டமாக இருந்த இரட்சிப்பின் நிச்சயத்தையும் சுவிசேஷத்தின் மூலம் பெற்றார். இது சபை வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது. கத்தோலிக்க மதத்தினால் பூட்டப்பட்டிருந்த வேதம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அநேகர் கர்த்தருடைய வேதத்தை தேடி வாசிக்க ஆரம்பித்தனர்.
    அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் "தேவ நீதி"யைக் குறித்து எழுதுகிறார். ஆரம்பத்தில் இந்த பதத்தை லூதர் வெறுத்தார். ஏனென்றால், தேவன் நீதியான நியாயாதிபதியாக இருந்து அவருடைய ஜனத்தை அவர்களுடைய நீதியின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பார் என்று புரிந்து வைத்திருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை அப்படியே போதித்து வந்தது. இங்கே சிக்கல் என்னவென்றால், மனிதனுடைய நீதி எப்போதும் பரிசுத்த தேவனை திருப்தி படுத்த முடியாது என்பதை லூதர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே மிகவும் கவணத்தோடு வேதத்தை படிக்க ஆரம்பித்தார். பொதுவாக கத்தோலிக்க துரவிகள் வேதத்தை படிப்பதில்லை, வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. இப்படி வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கடவுள் வெளிப்படுத்திய சத்தியத்திலிருந்துதான் தன் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டும் என்பதில் உருதியாயிருந்தார். வேதத்தை வாசிக்கும்போது அப். பவுல் உண்மையில் என்ன போதிக்கிறார் என்பதை லூதர் கண்டுகொண்டார். அதாவது 'நீதி என்பது தேவனுடைய கிருபையினால், கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறுகிற இலவச பரிசு' என்பதை கண்டுகொண்டார். தேவன் எதிர்பார்ப்பது எதுவோ, அதை தேவன் கிறிஸ்து இயேசுவின் மூலம் கொடுக்கிறார். நீதிமானாகுதல் என்ற வேத சத்தியத்தை லூதர் கண்டுகொண்டது உண்மையில் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது. கத்தோலிக்க துரவி சீர்திருத்தவாதியானார்.
    அக்டோபர் 31, 1517 அன்று லூதர் தனது 95 ஆய்வறிக்கைகளின் பட்டியலை விட்டன்பர்கில் உள்ள ஆலயத்தில் அறைந்தார். இந்த ஆய்வறிக்கைகள் ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்த பாவமன்னிப்பு சீட்டு போன்ற மூட நம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்தது. கிருபை மாத்திரமே ஒரு மனிதனை நீதிமானாக்க முடியும் என்ற அடிப்படை சத்தியத்தை இந்த ஆய்வறிக்கைகள் பிரகடணம் செய்தது. லூதர் இந்த ஆய்வறிக்கைகளின் நகலை ஆர்ச் பிஷப்பான ஆல்பிரட்சுக்கு அனுப்பி பாவ மன்னிப்பை வியாபாரப்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார். ஆனால், ஆல்பிரட்ச் லூதரின் வைராக்கியத்தை மதிக்கவில்லை. இதைக் குறித்த செய்தி ரோமிற்கு சென்றது. லூதரின் 95 ஆய்வறிக்கையின் பட்டியல் போப்பின் அதிகாரத்தை தாக்குவதாகப் பார்த்த���ர்கள். 1518ஆம் ஆண்டு ஹைடல்பர்கில் நடந்த ஒரு கூடுகையில் லூதர் தனது நிலைபாட்டை நிலைநாட்டினார். இங்கே லூதர் முழங்கிய தெளிவான சத்தியம் இறையியல் புரட்சியைப் பற்றவைத்தது. இங்கே நடைபெற்ற விவாதம் தான் சிலுவையைப் பற்றிய சத்தியத்தை மீண்டும் வெளிக்கொண்டுவந்தது.
    ஹைடல்பர்கில் லூதர் எடுத்தியம்பிய சத்தியத்தை மறுக்கும்படி போப்பின் அடுத்த அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. ஆனால் லூதரோ "வேதமும் தெளிவான காரணமுமின்றி" தன் கருத்தை மறுப்பது முடியாது என்று கூறிவிட்டார். இது லூதரை ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்ற காரணமாக அமைந்தது.
    இருப்பினும் லூதர் தளர்ந்துவிடவில்லை. 1519 முழுதும் அவர் தொடர்ந்து விட்டன்பர்கில் கற்ப்பித்து வந்தார். அவ்வாண்டு ஜூன்-ஜூலையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மன்னிப்பைப் பற்றியும் போப்பைப் பற்றியும் ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். போப்பின் வேதத்திற்கெதிரான செயல்பாடுகளைப் பொருக்க முடியாத லூதர் போப்பை "ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் இருக்கும் காட்டு பன்றி" என்று விமர்சித்தார். ஜூன் 15, 1520 அன்று லூதரை கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்றப்போவதாக போப்பிடமிருந்து பயமுறுத்தும்படியான கடிதம் வெளிவந்தது. அக்டோபர் 10ஆம் தேதி பெற்ற லூதர் இந்த கடிதத்தை டிசம்பர் 10ஆம் தேதி பொதுவெளியில் எரித்து அதன்மீதுள்ள வெறுப்பை காட்டினார்.
    1521ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லூதரை சபையிலிருந்து துரத்துவதற்கான கடிதமும் வந்தது. பேரரசர் ஐந்தாம் சார்லஸ், லூதர் பக்க நியாயத்தை எடுத்துக்கூறும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார். அங்கேயும் லூதர் தன் எழுத்துகளை மறுக்கமாட்டேன் என்றார். ஆதலால் லூதர் தடை செய்யப்பட்ட நபரானார்.
    இப்பொழுது லூதர் தேடப்படும் குற்றவாழியானார். அவரைக் கொல்வதற்கு துடியாக துடித்துக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து தப்பித்தது ஆச்சரியமே. வாஸ்ட்பர்க் கோட்டையில் 1522ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒழிந்துகொண்டிருந்தார். பின் பழையபடி சத்தியத்தை போதிக்க ஆரம்பித்தார். லூதர் தனது துரவு வாழ்க்கையைத் துரந்து கேத்தரினா வொன் போரா என்ற கத்தோலிக்க கண்ணியாஸ்திரியை மணந்தார்.
    விட்டன்பர்க்கில் 1533 முதல் தனது மரணம் வரை (1546) இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். ஐஸ்லெபன் என்ற இடத்தில் பிப்பிரவரி 18, 1546 அன்று கர்த்தருக்குள் நித்திரையடந்தார்.
    தனது வாழ்நாளில் கர்த்தருடைய சுவிஷேசத்திற்க்காக வைராக்கியமாக நின்ற இவரின் வாழ்க்கை இன்று பல கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்துவருகிறது. தேவனை மாத்திரமே உயர்த்தி, அவருடைய வார்த்தையே சகல அதிகாரம் நிறைந்தது என்பதை எடுத்துக்கூறி, வேதத்திலிருக்கும் சத்தியத்தையே திருச்சபை போதிக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுருத்திய மார்டின் லூதருக்கு இன்றை புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் மதிப்பளிக்காமல் புதிய வெளிப்பாடுகள் இன்னமும் உண்டு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே சபைகளைப் பார்த்தால் மனவேதனையாக இருக்கிறது. தேவன் கிருபையாக கொடுக்கும் இரட்சிப்பை மனிதனுடைய சாதனையாக போதிக்கும் இன்றைய புராட்டஸ்டண்ட் சபைகளைப் பார்த்தால் மனம் வேதனையாக இருக்கிறது. மனந்திரும்புங்கள். வேதத்தின் பக்கம் திரும்புங்கள். கிறிஸ்துவின் பக்கம் திரும்புங்கள். தேவனுடைய கிருபையை சார்ந்துகொள்ளுங்கள். அவர் மீது மாத்திரம் விசுவாசம் வையுங்கள். தேவன் ஒருவருக்கே மகிமையை செலுத்துங்கள். தொடரட்டும் சீர்திருத்தம் தேவ வார்த்தையை மட்டும் கொண்டு.
0 notes
pooma-tamilchannel · 9 days
Text
கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்...
தேசிய நெடுஞ்சாலையில்...!
நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...
பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது!
ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.
ஒரு விலையுயர்ந்த காரில்...
இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!
அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!
வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.
அவரும் உயர்த்தியிருப்பார் போல...!
இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!
சளைத்தவரா நீங்கள்...?
வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.
அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.
நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.
இப்படியே போனால்.....
முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
இந்நிலையில்....
உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!
இப்போது.....
உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!
நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...
பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...
இப்போதோ...
ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...
கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!
காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?
வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!
தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி...
அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...
தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...
பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!
உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்!
நாமே ஓட்ட வேண்டும்!
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்!
அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை...
நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...
நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...
எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
Tumblr media
0 notes